எக்ஸ்ட்ரா டோஸ் தேசபக்தி! - உனக்கு நிகர் யாருமில்லை!




Image result for sarileru neekevvaru

சரிலேறு நீக்கெவ்வரு

இயக்கம் - அனில் ரவிபுடி

ஒளிப்பதிவு - ரத்னவேலு

இசை - டிஎஸ்பி



தேசப்பற்றை கவளம் கவளமாக பார்வையாளர்களுக்கு திகட்டும்படி ஊட்டி,  வேணாமுடா என அவர்களைக் கத்த வைக்கிற படம்.

Image result for sarileru neekevvaru



ஆஹா!

எப்போதும் போல அலட்டல் இல்லாமல் நடித்து பரவசப்படுத்துகிறார் மகேஷ். ஆக்ஷன் காட்சிகளில் நமக்கு திகிலேறுகிறது. விஜயசாந்திக்கு கம்பேக் படம். முதல் காட்சி தொடங்கி அனைத்து காட்சிகளிலும் வருகிறார். இயக்குநரே காமெடி ரசிகராக இருப்பதால் அனைத்து வசனங்களிலும் காமெடியும், ஃபேன்டசித்தனமும் தெறிக்கிறது.

Image result for sarileru neekevvaru


ஐயையோ

இந்தப் படத்திற்கு ராஷ்மிகா எதற்கு? படம் பார்க்கும் பலருக்கும் இந்த கேள்வி மனதில் எட்டிப்பார்த்திருக்கும். பாடல்களைப் பார்த்தால் உங்களுக்கு காரணம் புரிந்திருக்கும்.

விஜயசாந்தி அத்தியாயமே ரொம்பநேரமாக நீள்வது போல படுகிறது. உண்மைக்காக போராடுபவர் எந்த நிலையிலும் அதைக் கைவிடாமல் இருக்கவேண்டும். குடும்பமாக இருப்பவர், உண்மைக்காக நெருக்கடி சந்தித்து அதனால் நேர்மையைக் கைவிடுகிறார் என்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை. உண்மையை விட ஆணின் உடல்வலிமை பெரியது என்பது மாதிரியான செய்திகள் எரிச்சலடையச் செய்கின்றன.

Image result for sarileru neekevvaru



காந்தியின் சிலைக்கு முன்னாடியே விஜயசாந்தி மண்டியிட்டு பிரகாஷ்ராஜ் முன் அமர்ந்து மன்னிப்பு கேட்பது நியாயமான காட்சியா என இயக்குநர்தான் கூறவேண்டும்.

மற்றபடி நீளமான தேசப்பற்று வசனங்கள், மகேஷ் செய்யும் விஷயங்கள் என புதுமையாக இருக்கிறது. ரசிக்கும்படி அல்ல.

டிராக் மாறவே மாறாத தெலுங்குப்படம்!

கோமாளிமேடை டீம்