கொரோனா வைரஸ் - கேள்வி பதில்கள்!
படம்:
jPharmaceutical Technology
மிஸ்டர் ரோனி
ஃப்ளூவுக்கான தடுப்பூசியை கொரோனாவுக்குப் பயன்படுத்தலாமா?
குறிப்பிட்ட வைரசுக்கான ஊசி, அந்த வைரசை மட்டுமே தடுக்கும். கொரோனாவுக்கான மருந்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே நீங்கள் ஃப்ளூவுக்கான மருந்தை பயன்படுத்தினால் கொரோனா கட்டுப்படாது. அதற்கு தனி மருந்துகள் சிகிச்சை தேவை.
யாரை எல்லாம் தாக்கும்?
இப்போதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தோராய வயது 65. இதுதான் வயது என்றில்லை. நமக்கு இப்போது கிடைத்த தகவல்படி இந்த வயது என புரிந்துகொள்ளலாம். ஃப்ளூ காய்ச்சலைப் பொறுத்தவரை இரண்டு வயதிலிருந்து பாதிப்பு தொடங்குகிறது. இதை என்ன சொல்லுவீர்கள்? கர்ப்பிணி பெண்களையும் ஃப்ளூ பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை பல்வேறு நுண்ணுயிரிகளும் பாதிக்கும்.
எந்த விலங்குகளிலிருந்து வைரஸ் பரவுகிறது?
பாம்பு என நண்பர் கொரோனா வைரஸைக்குறிப்பிட்டு அதிரடியாக சொன்னார். ஆனால் உண்மையில் வௌவால்கள், பன்றிகள், கொசு, ஈக்கள் ஆகியவற்றிலிருந்தே அதிகளவு வைரஸ் தொடர்பான நோய்கள் மனிதர்களுக்கு பரவுகின்றன.
வைரஸ்களுக்கு உயிருண்டா?
செல்களை சுயமாக பெருக்கிக்கொள்ளும் வலிமையுள்ள பொருட்களை மட்டுமே உயிர் எனலாம். அந்த வகையில் இந்த வரையறைக்கு வைரஸ் பொருந்தாது. ஒருவரின் உடலில் பல்லாண்டுகள் வாழ்ந்து வந்தாலும், அவரின் நோய் எதிர்ப்பு சக்தி குன்றும்போது விஸ்வரூபம் எடுத்து குடைச்சல் கொடுக்கும். பெரும்பாலும் சரியான சிகிச்சை எடுக்காவிட்டால் உங்களை வீழ்த்தி விடும்.
வைரஸ்களுக்கு டிஎன்ஏ, ஆர்என்ஏ அல்லது நியூக்ளிக் ஆசிட் எனும் மையக்கரு இருக்கும். உயிருள்ள செல்களில் ஒட்டுண்ணியாக அச்செல்லின் இயக்கங்களை நிறுத்தி தன்னைப் பெருக்கும் சாமர்த்தியம் வைரசுக்கு உண்டு.
நன்றி - மதர் ஜோன்ஸ் வலைத்தளம்