உளவியலும் அதன் மேம்பாடும்!




Neural Pathways, Artistically, Think, Face, Silhouette


கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக உளவியல் துறை சிறப்பான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. உளவியல் சார்ந்த விஷயங்களுக்கு க்ரீஸ், பெர்சியா ஆகிய நாட்டு ஆராய்ச்சியாளர்களே முன்னோடியாக இருந்து வந்துள்ளனர். உளவியல் துறை அடைந்த முன்னேற்றங்களைக் குறித்து பார்ப்போம்.

கிரேக்கம்

கி.பி 1550ஆம் ஆண்டி எபிரஸ் பாபிரஸ் எனும் இதழில் மன அழுத்தம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

கிபி 47- 370 காலகட்டத்தில் டெமோகிரைடஸ் உணர்வுகளின் மூலம் நாம் பெறும் அறிவு குறித்து உலகிற்கு அறிவித்தார். ஹிப்போகிரேட்டஸ் மனநலன்களுக்கான மருந்துகளை எப்படி தயாரிப்பது என்று அதற்கான விதிமுறைகளை வகுத்தார்.

கிபி 387 இல் பிளேட்டோ, மனிதனின் மூளைதான் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு காரணம் என்று கூறினார்.

350ஆம் ஆண்டில் அரிஸ்டாட்டில் (பிளேட்டோ மாணவர், பின்னாளில் பிளேட்டோ சொன்ன கருத்துகளை மறுத்தவர்) டி அனிமா, டபுலா ரசா  எனும் உளவியல் சார்ந்த பதங்களை அறிமுகப்படுத்தினார். விளக்கினார்.

300-30 காலகட்டத்தில் ஸெனோ, ஸ்டோய்சம் எனும் மனநிலை பற்றிய தன்மையை கற்பித்து வந்தார். இதனை 1960 இல் சிபிடி என்று பழக்க வழக்கம் சார்ந்த தெரபியாக உளவியலாளர்கள் வரையறுத்தனர்.


705ஆம் ஆண்டில் பாக்தாதில் மனநலன்களுக்கான தீர்வுகளைத் தரும் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கெய்ரோ, டமாஸ்கசிலும் மருத்துவமனைகள் தொடங்கி நடந்தன.


 ஐரோப்பா

1808ஆம் ஆண்டு பிரான்ஸ் கால் எனும் ஆராய்ச்சியாளர் பெரனாலஜி எனும் பதத்தை அறிமுகப்படுத்தினார். இது தலையில் மண்டையோடு அமைந்துள்ள இடம் , மனிதர்களின் குணம் ஆகியவற்றை ப் பற்றிய பண்புகளை விவரித்தது.


1698ஆம்ஆண்டு ஜான் லாக்கே அரிஸ்டாட்டிட் சொன்ன விஷயத்தை மீண்டும் சொன்னார்.



1620ஆம் ஆண்டு பிரான்சிஸ் பாகோன் என்ற ஆராய்ச்சியாளர் அறிவு, நினைவுத்திறன் ஆகியவற்றை வரையறுத்தார்.


1590ஆம் ஆண்டு ருடால்ஃப் கோக்ளியனியஸ் சைக்காலஜி என்ற வார்த்தையை உருவாக்கி அதனை வரையறை செய்தார். 

 நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ் , சைக்கலாஜி டுடே

 

பிரபலமான இடுகைகள்