சமையலுக்குப் பயன்படும் உப பொருட்கள்!



smell GIF





உப பொருட்கள்


உணவில் பல்வேறு பொருட்கள் சுவைக்காகவும், அவற்றை குறிப்பிட்ட தரத்தில் நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. பொருட்களை நீண்ட நாட்களுக்கு சிறப்பு அங்காடிகளில் வைத்து விற்கவும் இப்பொருட்களே உதவுகின்றன. அவை பற்றி பார்ப்போம்.


பிரசர்வேட்டிவ்ஸ்

இவை ஒரு பொருள் வேதிவினை புரிந்து அதன் தன்மை மாறிவிடாமலிருக்கவும், அதிக நாட்கள் அதனைப் பயன்படுத்தவும் உதவுகின்றன. இக்காலகட்டத்தில் அதன் மணம், சுவை, திடம் மாறாமல் இருக்க இவை உதவுகின்றன. ரெடி டூ ஈட் உணவுவகைகளில் அதிகம் பிரசர்வேட்டிவ்ஸ் பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்வீட்னர்

சர்க்கரைக்கு மாற்றாக உதவும் செயற்கையான இனிப்பு சுவையூட்டிகள். சாக்கரின், ஆஸ்பெர்டாமே ஆகிய மாற்று இனிப்பு வேதிப்பொருட்கள் உணவுப் பொருட்களில் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதால் உணவுப்பொருட்களின் கலோரிகளை நாம் கட்டுப்படுத்த முடியும்.

எமுல்சிஃபயர்ஸ்

திரவப் பொருட்களை ஒன்றாக கலக்கியிருப்பதை இப்படி சொல்லலாம். எண்ணெய்யையும், நீரையும் ஒன்றாக கலக்கி உணவில் சேர்ப்பார்கள். மயோனிஸ் போன்ற பொருட்களை இப்படி உருவாக்குகிறார்கள்.

பிளேவரிங்

இயற்கையாக கிடைக்கும் உணவுப்பொருட்களை பதப்படுத்தும் முறையில் அதன் இயல்பான மணம் காணாமல் போகும். அதை அப்படியே எடுத்து பேக் செய்து அண்ணாச்சி அனுப்பினால் வியாபாரம் படுத்துவிடும். எனவே, செயற்கையான மணமூட்டிகளை பயன்படுத்தி பொருட்களை  புத்தம் புதியதாக மாற்றுகிறார்கள்.

நியூட்ரியன்ட்ஸ்

செயற்கை முறையில் பல்வேறு சத்துகளை உள்ளே கலந்து விளம்பரத்தில் பெருமை அடித்துக்கொள்கிறார்களே அதுதான் இது. உடலுக்கும் மனதிற்கும் தேவையான அத்தியாவசிய 23 ஊட்டச்சத்துகள் செயற்கையான முறையில் சேர்க்கப்படுகின்றன.

ஸ்டேபிலைசர்

என்னதான் மிக்ஸிங் சரியாக இருந்தாலும் அதை அப்படியே பராமரித்தால்தானே வாடிக்கையாளர் கவலைப்பட மாட்டார். மயோனிஸ் போன்ற பொருட்களில் எண்ணெய்யும், நீரும் சென்னையும், கோவையுமாக வெவ்வேறு திக்கில் பிரிந்தால் நன்றாக இருக்குமா? அதற்குத்தான் அப்படி  பிரியாமல் இருக்க இந்த வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது.

ஆன்டி ஆக்சிடன்கள்

இவை பொருட்கள் கெடாமல் இருக்க உதவுகின்றன.

ஆன்டி கேக்கிங் ஏஜென்ட்ஸ்

மாவு, உப்பு போன்ற பொருட்கள் வெளியே உள்ள சூழலால் பாதிக்கப்படாமல் இருக்க இந்த வேதிப்பொருள் உதவுகிறது. இதனால்தான் டாடா சால்ட் உதிரியாக இருக்கிறது. பிற உப்பு வகைகள் எளிதாக கட்டி பிடித்து விடுகின்றன.

அசிடிட்டி ரெகுலேட்டர்ஸ்

உணவுப்பொருட்களின் அமில கார அளவை நிலைநிறுத்தவும், பொருட்களை அதிக நாட்கள் கடைகளில் வைத்து விற்கவும் உதவுகிறது.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்