இடுகைகள்

சாத்தான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனைவியை சாத்தானின் பிள்ளை என உலகமே சொல்ல, அவர்களை எதிர்த்து போராடும் நாயகன்!

படம்
  எவர் நைட் இரண்டாம் பாகம்  சீன தொடர்  முதல் பாகத்தில் இருந்த முக்கியமான நடிகர்களை மாற்றிவிட்டனர். அது முக்கியமான குறைபாடு. அதற்கடுத்து கதை எங்கே போகிறது. எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாமல் செல்கிறது. முதல் பாகத்தில் நாயகன் நிங்க் சூவிற்கு பழிவாங்கும் லட்சியம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் அவரும் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறார். அவர் மனைவி சாங் சாங் சொர்க்கத்திற்கு சென்றுவிடுவதால், அவரை மீட்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அதற்கு என்ன செய்வது என தெரியவில்லை. அருகில் இருந்து உதவும் இங்க் பாண்ட் பெண்ணையும் காதலிக்கிறார். ஆனால் அதையும் வெளிப்படையாக கூறமுடியவில்லை. கூடவே நகரைக் காக்கும் வேலை வேறு இருக்கிறது. நகரைச் சுற்றி ஷிலிங் என்ற ஆன்மிக மூடநம்பிக்கை கொண்ட முட்டாள்கள் வேறு படையெடுத்து வருகிறார்கள். நாற்புறங்களிலும் எதிரிகள் சூழ்ந்துள்ள நிலையில் நிங்க் சூ எப்படி நகரைக் காக்கிறான், தனது மனைவியை மீட்க ஏதாவது செய்தானா என்பதை சலிக்க சலிக்க எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக காட்சி படுத்தியிருக்கிறார்கள். இதில் அடுத்த பாகம் வேறு வருகிறதாம். .... ஐயோடா சாமி.  இரண்டாம் பாகம் முழுக்க ப

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தீயசக்தி பேரரசன் பழிவாங்க மீண்டும் உயிர்த்தெழுந்தால்... மேஜிக் எம்பரர்

படம்
  மேஜிக் எம்பரர் சீனா மங்கா காமிக்ஸ் 350 அத்தியாயங்கள் தொன்மைக் கால தீயசக்தி பேரரசன், அவனது வளர்ப்பு மகனால் சதி செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறான். அவனது இறப்புக்கு காரணம், ஒரு மந்திர நூல். அதையும் தன்னோடு எடுத்துக்கொண்டு உடலை எரித்துக்கொண்டு இறக்கிறான். இதனால் அவனது ஆன்மா, மறுபிறப்பு எடுக்கிறது. ஆன்மா, பொருத்தமான உடலை தேடுகிறது. அப்போதைக்கு காட்டில் குற்றுயிராக கிடக்கும் லுவோ குடும்ப பணியாளன் ஜூவோ ஃபேன் உடலில் நுழைகிறது. அந்த நேரத்தில் லுவோ குடும்பத்தை இன்னொரு பகையாளி குடும்பத்தினர். காட்டில் வைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர். தீயசக்தி பேரரசன் , தனது சக்தியெல்லாம் இழந்தாலும் மந்திரசக்தி முறைகளை நினைவில் வைத்திருக்கிறான். அதைக் கொண்டு குற்றுயிராக கிடப்பவனைக் கொன்று அவன் ரத்தத்தை தனது உடல் ஆற்றலுக்குப் பயன்படுத்துகிறான். அந்த சக்தியை வைத்து ஆபத்தில் உள்ள லுவோ குடும்பத்தை (மிஸ் லுவோ, மிஸ்டர் லுவோ அக்கா, தம்பி) என இருவரையும் காக்கிறான். அச்சமூகத்தில்,லுவோ குழு, மூன்றாவது தரத்தில் உள்ள குடும்பம். அக்கா, தம்பி, விசுவாச வேலைக்காரன் பாங் ஆகியோர்தான் லுவோ குடும்பம். ஒன்றுமே இல்லாத

வம்ச பெருமையைக் காப்பாற்ற தன்னையே தியாகம் செய்யும் அப்பாவியின் கதை! - ஷனாரா குரோனிக்கிள் 1&2

படம்
                ஷனாரா குரோனிக்கிள் அமெரிக்க வெப் தொடர் 20 எபிசோடுகள் ஆக்லாந்து , நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளது . எம்எக்ஸ் பிளேயர் எல்வின் என்ற நாட்டு மக்களுக்கு தெய்வமாக ஒரு மரம் இருக்கிறது . அந்த மரம்தான் அங்குள்ள நான்கு நாட்டு மக்களையும் காப்பாற்றி வருகிறது . எல்கிரிஸ் என்ற மரத்தை காப்பாற்ற ஏழுபேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . இந்த பட்டியலில் இளவரசியும் கூட தேர்வாகிறார் . உண்மையில் அந்த மரம்தான் மக்களை காக்கிறதா ? கருப்பு மந்திரத்தை பயன்படுத்தும் சாத்தான்களை அந்த மரம் இலையாக தன்னுடன் கட்டி வைத்திருக்கிறது என்று கூறப்படும் கதை உண்மையா என்பதை தொடர் விரிவாக பேசுகிறது . இதனுடன் கிளைக்கதையாக பில் என்பவனின் அம்மா , மரணப்படுக்கையில் இருந்து இறந்துபோகிறார் . அப்பாவின் சொத்தாக அவனுக்கு எல்ஸ் ஸ்டோன் எனு்ம் நீலநிற கற்கள் கிடைக்கின்றன . அதைப் பெற்று வேறிடம் நோக்கி சென்று வாழலாம் என நினைக்கிறான் பில் . அப்போது அவனது முயற்சியை அவனது மாமா பிலிப் தடுக்கிறார் . வெளியுலகம் நேர்மையானது அல்ல என்று எச்சரிக்கிறார் . அவனது அப்பாவை எல்லோருமே பழித்து பேசுகிறார்கள

சாத்தானின் மகன் வருகையை தடுக்கும் சாபம் பெற்ற நாயகனின் போராட்டம்! கான்ஸ்டான்டின் 2005

படம்
              கான்ஸ்டான்டின்   Director: Francis Lawrence Produced by: Lauren Shuler Donner, Benjamin Melniker, Michael E. Uslan, Erwin Stoff, Lorenzo di Bonaventura, Akiva Goldsman Screenplay by: Kevin Brodbin, Frank Cappello டிசி காமிக்ஸின் படைப்பு   சிறுவயதில் பேய்களை பார்க்கும் அற்புத சக்தி கொண்டவன் கான்ஸ்டைன்டின் . ஆனால் பேய்களை பார்ப்பதாக கூறினால் அவருக்கு என்ன நடக்கும் ? அதேதான் அவரை உலகமே விநோதமாக பார்க்க , அவரை பல்வேறு சிகிச்சைகளுக்கு அனுப்புகிறார்கள் . இதனால் உலக விதிகளுக்கு மாற்றாக தற்கொலைக்கு முயல்கிறார் . ஆனால் அவரின் விதி முடியாததால் அவரை திரும்ப உலகிற்கு அனுப்பி வைக்கிறார்கள் . மா்ந்த்ரீக சக்தியால் கட்டப்பட்ட மனிதர்களை கான்ஸ்டான்டின் விடுவிக்கிறார் . அவருக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம் , மறு உலக வாழ்க்கையில் சொர்க்கம் செல்லவேண்டும் . இதனால் பேய் பிடித்தவர்களுக்கு் , சாத்தான்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகிறார் . இதற்கு இடையில் அவரது நுரையீரலில் புற்றுநோய் வேகமாக வளர்ந்து வருகிறது . உலகில் சாத்தானின் மகனின் மறுபிரவேசம் கடவ

பல்வேறு மனிதர்களின் மனதிலுள்ள சாத்தான் வெளியே வந்தால்....? தி டெவில் ஆல் தி டைம்

படம்
                தி டெவில் ஆல் தி டைம்  Directed by Antonio Campos Screenplay by Antonio Campos Paulo Campos Based on The Devil All the Time by Donald Ray Pollock     Music by Danny Bensi Saunder Jurriaans Cinematography Lol Crawley இந்த படத்தை இறை நம்பிக்கை உள்ளவர்கள் பார்ப்பது அவர்களை கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கும். படம் முழுக்கவே உளவியல் சார்ந்த பிரச்னை உள்ள மனிதர்களை முன்னிலைப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.  கதை நடைபெறும் இடம், அமெரிக்காவின் ஓஹியோ, மேற்கு வர்ஜீனியா. இந்த இரண்டு இடங்களுக்கும் கதாபாத்திரங்கள் மாறி மாறி சென்று தங்களுக்கான அனுபவங்களை பெறுகிறார்கள்.  இரண்டாம் உலகப்போர்வீரன், கணவன், மனைவி என இருவருமே சீரியல் கொலைகாரர்களாக இருப்பவர்கள், இளம்பெண்களை கடவுள் பெயர் சொல்லி செக்ஸ் வைத்துக்கொள்ளும் பாதிரியார், வெறிபிடித்த இறைப்பித்து பிடித்த பாதிரியார், அவரை அதற்காக காதலித்து மணக்கும் பெண் என இதில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் உளவியல் ரீதியாகவே பாதிக்கப்பட்ட நபர்கள்.  இரண்டாம் உலகப்போர் காலத்தில் நடைபெறும் கதை. இப்போரில் வில்லார்டு என்ற வீரன் பங்கேற்கிறான். அதில் ஜப்பானிய

வாழ்க்கையை அழித்த இளம் வயது பாலியல் வல்லுறவு - ரிச்சர்ட் ராமிரெஸ்

படம்
அசுரகுலம் ரிச்சர்ட் ராமிரெஸ் 1980களில் ரிச்சர்ட் பயமுறுத்தாத ஆட்களே கிடையாது. பதினான்கு மாதங்களில் இவர் கொலை செய்வதில் காட்டிய வேகம் போலீசையே யார் இவன் என தேட வைத்தது. பதிமூன்று பேருக்கு சொர்க்க வாசல் டிக்கெட் போட்டவர். ஐந்து பேரை கொலை செய்ய முயற்சித்து நரகத்தின் வாசலை விஆர் படமாக காட்டினார். டைஹார்ட் படத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கார்கள், ஹெலிகாப்டர் சகிதமாக வருவார்களே அப்படி சினிமா போல வந்து ராமிரெசை மீட்டார்கள். எங்கிருந்து? மக்களிடமிருந்துதான். அப்போது ராமிரெசை கொலைகாரன் என அடையாளம் கண்டனர் மக்கள். உடனே தெலுங்கு இயக்குநர் போயபட்டி சீனு போல யோசித்து அருகே கிடந்த இரும்பு குழாய்களை எடுத்து கண்டமேனிக்கு வெளுக்கத் தொடங்கினர். சீரியல் கில்லருக்கும் வலிக்கும்தானே? அதைப் பார்த்த போலீஸ், உடனே ஓடிப்போய் காப்பாற்றினர். சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டாமா? நல்லவேளை என்னைக் காப்பாற்றினீர்கள் என போலீசுக்கு நன்றி சொன்னார் ராமிரெஸ். ராமிரெசின் க்ரைம் வாழ்க்கை 13 வயதிலிருந்து தொடங்கியது. பெரிய அப்பாடக்கர், டகால்டி ஆள் எல்லாம் கிடையாது. சிம்பிளாக வழிப்பறி திருடர் அவ்வளவுதான். கொல

சாத்தான் சொல்லித்தான் சுட்டேன்! - டேவிட் பெர்கோவிட்ஸ்

படம்
அசுரகுலம் டேவிட் பெர்கோவிட்ஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள மக்களை கொலை பீதியில் ஆழ்த்தியவர் டேவிட். சன் ஆஃப் சாம் கொலைகாரர், .44 காலிபர் கொலைகாரர் என்று அழைக்கப்பட்ட சீரியல் கொலைகார ர். நியூயார்க்கில் ப்ரூக்ளின் நகரில் 1953ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று பிறந்தார். இவரது பெற்றோருக்கு இவர் பிறந்தபோது மணமாகவில்லை. அது அவர்கள் மனமுறிவால் பிரிந்துபோக உதவியது. குழந்தையாக இருந்த டேவிட், தம்பதி ஒருவருக்கு த த்து கொடுக்கப்பட்டார். சிறுவயதில் இருந்தே டேவிட்டுக்கு வன்முறையான எண்ணங்கள் இருந்தன. பெரியளவு யாருடனும் கலந்துபேசாத ஆள். திருட்டில் வல்லவர். ஏதாவது ஓரு இடத்தில் நெருப்பு எரிந்தால் அங்கேயே அதை ரசித்துக் கொண்டு நின்றுவிடுவார். இதனை பைரோமேனியா என்று கூறுகிறார்கள். நெருப்பை ரசிப்பது, ஓர் இடத்தை தீக்கிரையாக்கி மகிழ்வதை உளவியல் மருத்துவர்கள் முக்கியமான சீரியல் கொலைகார ர்களுக்கான அறிகுறியாக சொல்கிறார்கள். அத்தனையும் அப்படியே டேவிட்டுக்கு பொருந்திப்போனது.  பதினான்கு வயதிலேயே பள்ளியில் ஏராளமான ஒழுக்கம், நடத்தை தொடர்பான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டார் டேவிட். அந்நேரத்தில் அவர

பரலோக நரகம் - அக்னியில் கொதிக்கும் ஆன்மா!

படம்
தெரிஞ்சுக்கோ! நரகம்! இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களிலும் நரகத்திற்கு முக்கியமான இடமுண்டு. புத்த மதத்தில் ஏழு பனி நரகங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளன. ஒழுக்கம் தவறுபவர்களை அச்சுறுத்த நரகங்கள் புராணக் கதைகளில் உருவாக்கப்பட்டன. இன்று மோசமான ஆட்சியாளர் அதனை தன் வாழ்நாளில் மக்களுக்கு உருவாக்கிக் காட்ட முடிகிறது. இதையும் நாம் கர்ம பூர்வம் என்று சொல்லித் தப்பிக்க முடியும். கொடும் செயல்களை செய்பவர்களுக்கு நரகம் விதிக்கப்படுகிறது. மெசபடோனிய நம்பிக்கைப்படி, மோசமான செயல்களைச் செய்தவர்கள் கழிவுநீரைக் குடித்தபடி கற்களைத் தின்றபடி இங்கு வாழ வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டில் தியோபிளஸ் அடானா என்பவர், வரலாற்றில் முதன்முறையாக தன் ஆன்மாவை சாத்தானுக்கு விற்கிறார். இதற்குப் பரிசாக பிஷப் பதவியைப் பெறுகிறார். ஒரு கட்டத்தில் குற்ற உணர்வு பெருக்கெடுக்க, கன்னி மேரியிடம் மன்னிப்புகேட்க, சாத்தானின் ஒப்பந்தத்தை மேரி முறிக்கிறார். ஜெரிலாக் என்பவர், ஸ்பெயினில் படிக்கிறார். இவரது எதிரிகள் இவர் சாத்தானின் அருள் பெற்றவர் என பிரசாரம் செய்கின்றனர். காரணம் இவர் போப்

42 என்ற எண்ணின் ஸ்பெஷல் என்ன?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி 42 என்ற எண்ணுக்கு என்ன சிறப்பு? தொன்மைக்காலத்தில் எகிப்தியர்கள் 42 என்ற எண்ணை சாத்தானாக நினைத்தனர்.  ஆன்மாவுக்கான தீர்ப்பை இவை எழுதுகின்றன என்பது அவர்களின் பயம். கணித ஒலிம்பியாட்டில் 42 முக்கியமான ஸ்கோர். பை என்ற எண்ணின் அடுத்த இடத்தில் 424242 என எழுதிப் பார்த்தால், 242, 422 என்ற எண்கள் இடம்பெறும்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்