இடுகைகள்

என்கவுன்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையைப் பேசினால் உங்களை ஓரம் கட்டிவிடுவார்கள் -ஜூவாலா கட்டா

படம்
ஜூவாலா கட்டா, பாட்மின்டன் விளையாட்டு வீரர். காமன்வெல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் இவர். தெலங்கானாவில் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, நான்கு பேரால் கற்பழித்து எரித்து கொல்லப்பட்டார் என்று போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் அவர்களின் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க மக்கள், ஊடகங்கள் அழுத்தம் கொடுத்தனர். இதன்விளைவாக அவர்கள் தப்பித்துச் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தியை போலீசார் அடுத்த நாள் ஊடகங்களிடம் கொடுத்தனர். போலீசாரின் நடவடிக்கையை மக்கள் ஆதரித்தாலும், மனித உரிமைக்கு எதிரானது. நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இந்த என்கவுன்டர் அழித்துவிட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கருத்து தெரிவித்திருந்தனர். இதுபற்றி ஜூவாலா கட்டாவும் கருத்து தெரிவித்திருந்தார். இதுபோன்ற விவகாரங்களில் விளையாட்டு வீரர் பெரும்பாலும் கருத்து தெரிவிப்பதில்லை. என்ன காரணம்? இந்தியாவில் கருத்துகளை வெளிப்படையாக சொன்னால் அவர்கள் குறிவைக்கப்பட்டு ஒதுக்கப்படுவார்கள். என்னைப் பாருங்கள். எனக்கு தவறு என்று தோன்றும் விஷயங்களில் நான் தைரியமாக பேசுவேன்.