இடுகைகள்

கிஃப்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பரிசு தரும்போது குழப்பம் ஏற்படுகிறதா?

படம்
மிஸ்டர் ரோனி பிறருக்கு பிறந்தநாள், திருமணம் என வரும்போது பரிசுகளைத் தேர்ந்தெடுக்க மிகவும் திணறுகிறேன். ஏன் இப்படி? எங்கள் அலுவலகத்தில் கூட ஒருவர் கல்யாணத்திற்கு ரெடியானார். அவர் பத்திரிகை வைக்கும்போதே அலுவலக சகா, நான் திருமணத்திற்கு வர முடியாது என்று சொன்னார். சொல்லிவிட்டு உடனே இன்டக்ஷன் ஸ்டவ்வை எடுத்து நீட்டிவிட்டார். அதை எதிர்பாரக்க நண்பர், சட்டென முகம் சுருங்கிவிட்டார். பின்னர் சமாளித்துக்கொண்டு பரிசை ஏற்றுக்கொண்டார். இங்கு இரண்டு விஷயங்கள் நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று திருமணம் செய்பவருக்கும் பரிசளித்த நண்பருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. இரண்டு, திருமணம் நடந்து முடிந்த பிறகு கூட அவர் இன்டக்ஷன் ஸ்டவ்வைத் தந்திருக்கலாம். உடனடியாக பரிசு தந்து  அதன் வழியாக நான் வரவில்லை என்பது நாகரிகமான முறை அல்ல. உங்களுக்கு நேருவதும் இதுதான். நீங்கள் பரிசளிக்கப் போகிறவர் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால எளிதாக பரிசைத் தேர்ந்தெடுத்து விடலாம். ஆனால் அவருக்கு என்ன பிடிக்கும், அமேசானில் விஷ் லிஸ்ட் என எதைத்தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார் என பார்க்காமல் இருந்தீர்கள் என்றால் கஷ்டம்தான

கிஃப்ட் வாங்குவதில் என்ன குழப்பம்?

படம்
மிஸ்டர் ரோனி கிறிஸ்துமஸ், பிறந்தநாள், புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளின்போது என்ன பரிசு பிறருக்கு கொடுப்பது என்று குழப்பம் ஏற்படுகிறது என்ன செய்வது? யாருக்கு பரிசு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு என்ன உதவும் என்று பார்த்து பரிசு கொடுங்கள். அதற்கு என்று ஜட்டி, பனியன் வாங்கி தரக்கூடாது. அதெல்லாம் அவரே பார்த்து வாங்கிக்கொள்வார். இன்று பெரும்பாலும் அமேசான், ஃபிளிப்கார்ட்டில் விஷ் லிஸ்டை தயாரித்து வைத்துவிடுகின்றனர். பிறந்தநாளின்போது, அதைப்பார்த்து அதில் ஒன்றை வாங்கிக்கொடுங்கள் என்கிறார்கள். கல்யாணத்திற்கு கூட மொய் எழுதுவதை விட வீட்டுக்கு தேவையான பொருட்களாக கொடுக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஆபீஸ் சார்பில் கொடுத்துவிடலாம். வேறு எதுவுமே மண்டையில் தோன்றவில்லையா? இரண்டு ரூபாய்க்கு மொய் கவர் வாங்கி அதில் காசை வைத்து கொடுத்துவிடலாம். யாருக்கு கொடுக்கிறோமே அவருக்கு நம்முடைய விருப்பம், ஆசை, ஈடுபாடு சார்ந்தும் பரிசுகளை வாங்கிக் கொடுக்கலாம். அதேசமயம் அவர்களுக்கு பயன்படும்படு இருக்கவேண்டியது முக்கியம். இதற்கெல்லாமா கவலைப்படுவது? பட்ஜெட் போடுங்கள் அப்புறம் அதற்கேற்ப கிஃப்ட் தேடுங்கள்

லவ் இன்ஃபினிட்டி: நட்பே துணை

படம்
Pinterest/andrzej nowak லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: சரஸ் உன்னுடைய Book போடணும்கிற ஆசை நிறைவேறியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா பெரிய வருத்தம் என் பேர்ல வந்த கவிதை. கடவுளே! அந்த கவிதை நான் எழுதல. படிச்சதை புக்கில் Note பண்ணி வெச்சிருந்தேன். Atleast நீ என்கிட்ட ஒருமுறை கேட்டிருக்கலாம். இன்னும் மனசுக்குள் அது பெரிய உறுத்தலா இருக்கு. உமா அண்ணிக்கிட்ட கேட்டேன், Book பத்தி. ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க. அதிலிருந்த mistakes  பத்தி சொல்றதா சொன்னாங்க. நான் கேட்டுச் சொல்றேன்.  உன்னுடைய Diary யை கொடுத்து விடட்டுமா? உன்னை நேர்ல பார்த்து கொடுக்கணும்னு நினைச்சேன். நான் என்னுடைய டைரியில் எழுதறமாதிரியே உன்னுடைய டைரியில் எழுதிட்டேன். அப்புறம்தான் இதை Loosuதனமா எழுதறேன்னு நினைச்சேன். படித்த கவிதைகள், Wordings சில எழுதியிருக்கேன். அப்பப்ப  என்னென்ன தோணுதோ அதையெல்லாம் எழுதினேன்.  என்னைப் பத்தி ஏதாவது வருத்தம் உள்ளதா? அப்படின்னு எழுதியிருந்தாய். அப்படி எதுவும் கிடையாது. சில கேள்விகள் உன்னிடம் எனக்கு புரியவில்லை. நீ Diary இல் எழுதிக்கொடுத்த கவிதையை Friends படிச்சாங்க. ந

லவ் இன்ஃபினிட்டி: தங்கத்திற்கு வைரம் கிஃப்ட் பண்ணுவேன்

படம்
freepik லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அஷ்ரத், விகாசினி நட்பதிகாரம் 2 மகாதேவி கிட்ட general Knowledge papers கொடுத்தேன். அது கேட்டது. அது முடிச்சவுடனே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன். நீ அதைக் கேட்டு வாங்கிக்கொள். இன்னிக்கு உனக்கு தலைவலியா? நலம் விசாரிக்க கூட என்னால் முடியலை. உடம்பைப் பார்த்துக்கொள். அடிக்கடி இறைவனை நினைக்கப் பழகு. எல்லாப் பிரச்னைகளையும் அவர்கிட்ட விட்டுடு. அப்புறம் நான் ஒண்ணு கேட்பேன். கொடுப்பியா? Prescription நோட்டு ஒண்ணு வேணும். கவிதையெல்லாம் எழுதி வைக்கிறதுக்கு. டைரி பத்த மாட்டேங்குது. நீ வெச்சிருந்தா கொடு! அப்புறம் தபூ சங்கர் கவிதை படிச்சுப்பாரு. உன்னை தொந்தரவு பண்ணின மாதிரி இருந்தால் மன்னித்துவிடு. உன்னை விட்டால் வேறு யாருக்கு நான் Lr எழுத முடியும்? இப்படி பக்கம் பக்கமாக எழுதியதை நீதான் அங்கீகரித்து பத்திரப்படுத்துகிறாய்! You're Great Friend in My life. கடைசியா நம்ம கவி Marriage, உன் Marriage க்கு எல்லாம் நான் பெரிசா Gift பண்ணனும். அப்படின்னு மனசில் ஆசை. அதுக்குள்ள பெரிய ஆளா வந்துட்டா பெரிய அளவில் Gift  பண்ணுவேன். கவிகிட