இடுகைகள்

நிதி அமைச்சகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டை நிலைநிறுத்த போராடி வரும் ரிசர்வ் வங்கிக்கு வயது 90!

படம்
  ரிசர்வ் வங்கிக்கு வயது 90 இன்று அனைத்து ஜனநாயக அமைப்புகளும் சீரழிவுப்பாதையில் உள்ளன. காவிக்கட்சி ஆட்கள் உள்ளே புகுந்து எளிய மக்களின் நம்பிக்கையாக உள்ள அனைத்து அமைப்புகளையும் உருக்குலைத்து வருகிறார்கள். அதில் முக்கியமான அமைப்பு, ரிசர்வ் வங்கி.  1935ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட மத்திய வங்கி நிர்வாக அமைப்பு. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்குமான நெறிமுறைகள், நிதி நிர்வாகம், பணநோட்டுகள் மேம்பாடு, பணவீக்கம் கட்டுப்பாடு, வட்டிவிகிதம், வங்கிமுறையை சீரமைப்பது ஆகியவற்றை செய்து வருகிறது. தொண்ணூறாண்டு பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளது ரிசர்வ் வங்கி.  செயல்பாடு ஏப்ரல் ஒன்று என்றாலும் திட்டம் தொடங்கியது, 1935ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி. அப்போதே அரசியலமைப்பு சட்டப்படி உரிமைகள், கடமைகள், வகுத்து தனியாக சுயாட்சியாக செயல்படுவதற்கான சிந்தனைகள் வடிவம் பெற்றுவிட்டன. முதல் ஆளுநராக ஆஸ்பர்ன் ஆர்கெல் என்பவர் பொறுப்பேற்றார். சிடி தேஷ்முக் என்பவர் முதல் இந்திய ஆளுநராக பொறுப்பேற்றார்.  பிரிவினை காலத்தின்போது பாகிஸ்தான், இந்தியா என இருநாடுகளுக்குமான நிதி நிர்வாகத்திற்கு பொறுப்புள