இடுகைகள்

நாகலாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வடகிழக்கு பெண் என்பதால் எனது மொழி உச்சரிப்பை கிண்டல் செய்தனர்! - ஆண்ட்ரியா கெவிசூசா

படம்
  ஆண்ட்ரியா கெவிசூசா இந்தி சினிமா நடிகை - அனெக் திரைப்படம் ஆண்ட்ரியா கெவிசூசா உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்கள்? நான் கோகிமாவில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு ஐந்து சகோதரிகள் உண்டு. அதில் இளையவள் நான். எனது அப்பா அங்காமி பழங்குடியைச் சேர்ந்தவர். அம்மா ஆவோ பழங்குடியைச் சேர்ந்தவள். அப்பா காலமாகிவிட்டார். பெண்களான எங்களுக்கு எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது என பெரிய லிஸ்ட்டே உண்டு. பெற்றோர் நிறைய கண்டிப்புடன் வளர்த்தார்கள். பத்தாம் வகுப்பு வரை லிட்டில் பிளவர் பள்ளியில் பத்தாவது வரை படித்தேன். அதற்கு முன்னர் கத்தோலிக்க பெண்கள் பள்ளியில் படித்தேன். பிறகு மேகாலயாவின் சில்லாங்கிற்கு இடம்பெயர்ந்தோம். பிறகு படிப்பு அங்கே அமைந்தது. பதினைந்து வயதிலிருந்து நான் மாடலிங் செய்து வருகிறேன்.  நடிகர் ஆவது என்பது பற்றி கனவு கண்டீர்களா? எனக்கு சிறுவயதிலிருந்து இருந்தது ஒரே கனவுதான். மருத்துவம் படித்து மருத்துவராகி எனது கிராமமான கோகிமா சென்று மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மட்டுமே எனது ஆசை. ஆனால் நான் படிக்கும்போது எனக்கு வந்த வாய்ப்புகளை பின்பற்றி இப்போது நடிகராகி இருக்கிறேன். இப்படி கிரியேட்டிவிட்டி கொண்ட த

சம ஊதியம் கனவல்ல - நாகலாந்து கிராமம் சாதனை

படம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு பெண் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் வளர்ந்துவரும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தியாவில் அது சாத்தியமாகி உள்ளது. குறிப்பாக, நாகலாந்து கிராமத்தில் இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர். அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 30 ஆண்டுகளாக இதனை செய்து வருகின்றனர். நாகலாந்தின் சிசாமி மாவட்டத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. நாங்கள் முதலில் உழைப்பிற்கு ஊதியமாக தானியங்களைப் பெறும் வரையில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் உழைப்பிற்கு சம்பளம் அளிக்கப்பட்டபோது, அதில் பெரும் இடைவெளியையும் வேறுபாட்டையும் உணர்ந்தோம் என்கிறார் 74 வயதான விவசாயக்கூலியான காஃப்கோ. சிசாமி மாவட்டத்தில் விவசாய வேலைகளை பெண்கள்தான் செய்கிறார்கள். பெரும்பாலான உதவிகளை நாடாமல் அவர்கள் உழைப்பது ஆச்சரியமாக உள்ளது. அங்கு வாழ்நிலை அப்படித்தான் இருக்கிறது. பெண்கள் சங்கம் அமைத்து ஆண்களின் சம்பளம், உழைப்பு ஒன்றாக இருந்தாலும் அதிகமாக இருப்பது குறித்து கேள்விகளை 2007 ஆம் ஆண்டு முதல் எழுப்பி ஊதியத்தை உரிமையாக பெற்றிருக்கிறார்கள். இங்கும் முன்னர் குடும்பத்தலைவராக ஆண்