இடுகைகள்

கே டிராமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே பெண்ணை காவல்துறை அதிகாரி காதலிக்க, சீரியல் கொலைகாரன் பாதுகாக்க நினைக்க.. மூவரது வாழ்க்கையை இணைக்கும் காலச்சரடு!

படம்
  பார்ன் அகெய்ன் கே டிராமா 32 எபிசோடுகள் இரண்டுபிறவி கதை. முதல் பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த மூன்றுபேர் மீண்டும் பிறந்து வாழ்க்கையை வாழ முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதே கதை. பதினாறு எபிசோடுகள் வரும் கதையை, அரைமணி நேரமாக பிரித்து சீன தொடர்கள் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். இதுதான் தொடரைப் பற்றிய முதல் மைனஸ் பாய்ண்டாக சொல்லவேண்டும். இந்த தொடரில் கொலை, அதைப்பற்றிய விசாரணை, நீதிமன்ற உரையாடல்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் கதையின் போக்கு நிதானமாகவே இருக்கிறது. பெரிய பரபரப்பு, திகில் என எதையும் அடையவேண்டியதில்லை. இந்த கதையை அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம், முன்முடிவுகளால் பாதிக்கப்படும் அப்பாவி ஒருவரின் கதை என்று எளிமையாக கூறலாம். சமூக பொதுப்புத்தியில் கொலைகாரரின் மகன் கொலைகாரன்தான், திருடனின் மகன் திருடன்தான் அல்லது குற்றவாளியாகவே இருப்பான் என நினைக்கப்படுவதை தொடரில் வரும் நாயகியைத் தவிர்த்த பிற பாத்திரங்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாமல் இயங்குகிறார்கள். இதனால் சீரியல் கொலைகாரரின் மகன் வாழ்க்கை அபாயத்தில் சிக்குகிறது. செய

ஜோம்பி தனது கடந்தகாலத்தை தானே டிடெக்டிவ்வாகி கண்டறியும் கதை!

படம்
              ஜோம்பி டிடெக்டிவ் கொரிய தொடர் ராகுட்டன் விக்கி மருத்துவக் கழிவு கொட்டிக்கிடக்கும் இடத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது . அதுதான் நாயகன் காங் மின்கோ . எழுந்தவர் சிகரெட் பிடிக்கிறார் . வாயில் புகைவிட நினைத்தால் வயிற்றில் உள்ள ஓட்டை வழியாக புகை வெளியே செல்கிறது . அப்போதுதான் அவர் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை உணர்கிறார் . அங்கிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அதிர்ந்துபோ கிறார் . இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிர் வந்தால் உடல் சதைகள் எப்படி சிதைந்து கிடக்கும் . அப்படித்தான் அவர் உடல் முழுக்க பஞ்சர் ஒட்டியது போல சதைகள் கிழிந்து ஒ ட்டுப்போடப்பட்டது போல உள்ளன . சுருக்கமாக வாழும் பிணம் . அதாவது ஜோம்பி . அவருக்கு தான் யார் , பெயர் , ஆதார் எண் , வங்கியில் கொடுத்த பான் எண் , வீட்டு முகவரி என எதுவுமே நினைவில்லை . தான் யார் , எப்படி கொல்லப்பட்டோம் . ஏன் ஜோம்பி ஆனோம் என்ற உண்மையை மெல்ல கண்டுபிடிக்கிறார் . இந்த கதையை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள் . அடுத்த பாகம் தொடங்கி ஒளிபரப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை . காங் சன்ஜ

மறுபிறப்பெடுத்து இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைத்து வைத்த தீயசக்தியுடன் போராடும் பூசாரி!

படம்
  ஃபிரம் நவ் ஆன் இட்ஸ் ஷோ டைம் ஃபிரம் நவ் ஆன், இட்ஸ் ஷோ டைம் கே டிராமா ராக்குட்டன் விக்கி இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைக்கப்பட்ட தீயசக்திக்கும், அதை அடைத்த பூசாரிக்குமான   ஜென்மச் சண்டை. தொன்மைக் கால கொரியா. அங்குள்ள சிற்றரசு நாடு. அதில் வாழும் தலைமை பூசாரி, பஞ்சம் தீர்க்க தனது புனித கண்ணாடியைக் கொண்டு   வேண்டிய மழையை வரவைக்கிறார். நாடு செழிப்புறுகிறது. நாட்டு மக்களும் மகிழ்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் மகள், அதாவது இளவரசி அனைவரின் முன்னிலையில் தான் பூன் சிக் என்ற தலைமை பூசாரியை காதலிப்பதாக பேனர் பிடித்து சொல்கிறாள். பூன் சிக்கிற்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை, இளவரசியை தான் விரும்புகிறேன் என்று சொன்னால் அடுத்த நொடி அவரின் தலையை வெட்டி எறிந்துவிடுவார்கள். அவரின் இனத்தை   அழித்து வீடுகளை கொளுத்திவிடுவார்கள். எனவே இளவரசியிடம் அரச குல ஆட்களைப் பார்த்து மணந்துகொள்ளுங்கள். தான் தாழ்ந்த குலத்தை சார்ந்தவன் என்று கூறுகிறார். ஆனால், இளவரசி கேட்பதாக இல்லை. தலைமை பூசாரியும், இளவரசியும் குணத்தில் ஒன்று போலத்தான். தன்னை அழித்துக்கொண்டாவது பிறருக்கு நன்மை செய்பவர்கள். இதுதான் அவர்களை

சட்டவிரோத சூதாட்ட வலைதளத்தை தடுக்க முயலும் ஹேக்கரும், சீனியர் இன்ஸ்பெக்டரும்!

படம்
  போலீஸ் யுனிவர்சிட்டி - கே டிராமா போலீஸ் யுனிவர்சிட்டி கே டிராமா ராக்குட்டன் விக்கி ஹேக்கராக இருந்து சூதாட்ட வலைத்தளத்தில் பணத்தை திருடியவர், கொரிய காவல்துறை பல்கலைக்கழகத்தில் மாணவராகிறார். அவர் ஹேக்கர் என்று அங்கு பாடம் நடத்தும் முன்னாள் விசாரணை நடத்தும் அதிகாரி ஒருவருக்குத் தெரியும். அந்த மாணவரை தனது சூதாட்ட வலைத்தள விசாரணைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். அவரைத் தடுக்க ஏராளமான முயற்சிகள் நடைபெறுகின்றன. மாணவரை குற்றவாளியாக்கவும் முயல்கிறார்கள். தடைகளை தகர்த்து ஹேக்கர் மாணவர் காவல்துறை அதிகாரி ஆனாரா என்பதே கதை. தொடரின் நாயகன் யூ டாங்க் மன் என்ற சீனியர் இன்ஸ்பெக்டர்தான். இவர், சூதாட்ட வலைத்தளத்தை பிடிக்க பிளாக்நெட்டில் ஹேக்கர் ஒருவருடன் நட்பு வளர்க்கிறார். பேர்ட் என்ற பெயரில் பள்ளி மாணவராக உரையாடுகிறார். எதிர்முனையில் உள்ளவர் ஹேக்கர் யூன் என்ற கங்க் சியோன் ஹோ பள்ளி மாணவர். இவர் ஆதரவில்லாதவர். பெற்றோர் விபத்தில் இறந்துவிட, அவர்களின் நண்பர் எடுத்து வளர்க்கிறார். இவரது அண்ணன், இவரை தம்பியாக நினைப்பதில்லை. இதனால் கணினியே கதி என கிடந்து அதில் நிபுணத்துவம் பெறுகிறார். ஒருமுறை அப்பாவ

மோசமான குற்ற வழக்குரைஞருக்கு எதிராக வாளேந்தும் இளைஞன்! - பேட் பிராசிகியூட்டர்

படம்
  பேட் பிராசிகியூட்டர் பேட் பிராசிகியூட்டர் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப் போஸ்டர் நன்றாக இருந்தால் தொடர் நன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சொல்லாம். அதற்கான எடுத்துக்காட்டு இந்த தொடர். இந்த தொடரில் நடிக்க ஜின் என்ற பாத்திரத்திற்கான நடிகரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதிர்ச்சியான காட்சியில் கண்களை உருட்டி விழிக்கிறார். சண்டைக்காட்சிகளில்   துறுதுறுப்பாக இருக்கிறார். காதல் என்பதை பெண்களுக்கென ஒதுக்கிவிட்டனர். எனவே, நடிப்பு என்பதை ஜின் ஜூங் என்ற பாத்திர நடிகர் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. இயக்குநரும் வராத ஒன்றை எதற்கு இழுத்துக்கிட்டு என நினைத்துவிட்டார். ஷின் ஆ ரா பாத்திரத்தில் நடித்த நடிகை நன்றாக நடித்திருக்கிறார். அடுத்து, கணினி ஹேக்கராக வருபவரின் காமெடியும், சுன் சுல் என்ற மோசடிக்காரரின் காமெடி வில்லத்தனமும் பரவாயில்லை. மீதி அனைத்துமே பரிதாபகரமான தோல்வியாக முடிகிறது. சியோ என்ற வழக்குரைஞர். பெரும்புள்ளிகளின் சட்டவிரோத விஷயங்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி கொரிய சட்டத்துறையையே கைக்குள் வைத்திருக்கிறார். எந்த வழக்கை விசாரிப்பது,

தொட்டால் குற்றங்களைக் கண்டுபிடித்துவிடும் இளைஞனின் அபூர்வ சக்தி!

படம்
  ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக் ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   பள்ளியில் படிக்கும் லி ஆன், அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்துபோனவர்களை சோதிக்கிறான். அவனால் இறந்துபோனவர்களை, ஒரு பொருளை, கதவு கைபிடியைக் கூட கையால் தொட்டு காட்சிகளை அறிய முடியும். இதன்படி இறந்துபோனவர்களைப் பற்றிய எண்களைக் கூறுகிறான். அது அவர்களின் உள்ளாடை அளவாக இருக்க பிணவறையில் உள்ள மருத்துவர், டிடெக்டிவாக உள்ள அவனது அக்கா ஜி சூ என இருவரும் அவனை கிண்டல் செய்கிறார்கள். கூடுதலாக அவனது அண்ணன் காங் வேறு அவன் திறமை இன்னும் தேறவில்லை என கிண்டல் செய்கிறார். இப்படித்தான் தொடர் தொடங்குகிறது.   பள்ளிக்கு பெரும்பாலும் போகாமல் வெளியில் சுற்றுபவனுக்கு பெட்ரோல் பங்க் வைத்திருப்பவரின் மகன் டாங் மட்டுமே நெருங்கிய தோஸ்த். தேர்வுகளில் மிக குறைந்த மதிப்பெண் எடுப்பதில்தான் லீ ஆனுக்கும் டாங்கிற்கும் போட்டி. இந்த நிலையில் நாயகி யூன் பாத்ரூமில் உடை மாற்றும்போது யாரோ ஒரு மாணவன் சாவி துவாரம் வழியாக பார்க்கிறான். இதை யூன் கண்டுபிடித்து அவனை பிடிக்க வரும்போது, அவனைப்போலவே ஹூடி போட்டுக்கொண்டு நடந்து செல்லும் லீ ஆ

கிராஃபிக் டிசைனரைக் காதலிக்கும் பூனை இளைஞன்! மியாவ் தி சீக்ரெட் பாய் - கே டிராமா

படம்
  மியாவ், தி சீக்ரெட் பாய் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   இந்த கொரிய தொடர், எப்போதும் கொரிய தொடர்களில் உள்ள வன்முறை, பள்ளி சித்திரவதை,  பெற்றோர் செய்யும் பாலியல் வன்முறை, அடி உதை என ஏதும் இல்லாதது. சற்று நீளமாக இருந்தாலும் நிதானமாக பார்த்தால் மெல்ல அதன் தன்மைக்கு பழகிவிடுவீர்கள். நகரத்தில் உள்ள மனிதர்களால் தாங்க முடியாத தனிமைக்கு ஆதரவாக செல்லப்பிராணிகள் இருக்கிறார்கள். உண்மையில் மனிதர்களை விட செல்லப்பிராணிகளை காதலிக்கும் தனிநபர்களே அதிகமாகி வருகிறார்கள். இதைபற்றிய கற்பனைக் கதைதான் மியாவ், எ சீக்ரெட் பாய். ஒருவர் தன்னோடு சந்தோஷத்திலும் துக்கத்திலும் இருக்கும்போது கூடவே ஆதரவாக இருக்கும் பூனை ஒன்றை காதலிக்க தொட்ங்கினால் எப்படியிருக்கும்? அந்த பூனை, வளர்ப்பவரின் உடல் மணம் கொண்ட ஏதாவது பொருள் உடலில் பட்டாலே மனித உருவம் கொள்கிறது. தன்னை வளர்ப்பவரை அதீதமாக காதலிக்கத் தொடங்குகிறது. பாதுகாக்கத் தொடங்குகிறது. தொடரில் வரும் கிராஃபிக் டிசைனர் பெண்ணான கிம் சோல் ஆ, தனியாக அறையில் வாழ்ந்து வருகிறாள். அதே நகரில் அவளது கவிஞரான அப்பா, தனியாக உட்கார்ந்து நூல்களை படித்தபடி காலத்தை கழிக்கிறார். ஆனால்,