இடுகைகள்

நெல்சன் மண்டேலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென் ஆப்பிரிக்காவில் இனவெறி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது!

படம்
  சூயஸ் கால்வாய் கட்டப்பட்டபிறகு வணிகம் அதிகரித்ததை இங்கு முன்னமே எழுதியிருக்கிறோம். இதற்கு முன்னர், ஐரோப்பியர்கள் எப்படி வணிகம் செய்தார்கள்? தென் ஆப்பிரிக்கா வழியாக சென்று ஆசியாவை அடைந்து வணிகம் செய்தார்கள். வணிக உதவிகளுக்காக இங்கு பல்வேறு வணிக மையங்களை அமைத்து இருந்தனர். துறைமுகங்களையும் இந்த முறையில் அமைத்து வணிகம் கெடாதபடி பார்த்துக்கொண்டனர்.  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க மக்களை இனவெறி கொண்டு பிரித்தனர். அவர்களை ஆப்பிரிக்கானர்ஸ் என்று அழைத்து வந்தனர். டேனியல் மாலன் என்பவர் அங்கு ஆட்சிக்கு வந்ததும் இனவெறிக் கொள்கையை உடனே நடைமுறைக்கு கொண்டு வந்தார்.  இதன் மூலம் அம்மக்களை எளிதாக சுரண்ட முடிந்தது கருப்பின மக்களை பொதுவெளியில் அரசு அனுமதிக்கவில்லை. பார்த்தால் அடி உதை அபராதம் என சென்றது. இவர்களால், நாடாளுமன்றத்திற்கு கூட வரமுடியாது. இதெல்லாம் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பூர்விக மக்களுக்குத்தான் என்றதும் அதிர்ச்சியாக இருக்கும்.  இவர்கள் உள்ள பகுதிகளுக்கு பந்துஸ்தான் என்று பெயர். இந்த மக்களுக்கு அடிப்படையான உரிமைகள் கிடைக்காத காரணத்தால் அமெரிக்கா, ஐ.நா அமைப்பு என இரண்டுமே த