இடுகைகள்

சுவாசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எமர்ஜென்சி -இஎம் மருத்துவத்தில் கவனிக்க வேண்டியவை என்னென்ன?

படம்
  அவசரநிலை மருத்துவம் அடிப்படை அறிவோம் அனைத்து நாடுகளிலும் அவசரநிலை மருத்துவம் உண்டு. இதற்கென தனி தொலைபேசி எண்ணைக் கூட கொடுத்திருப்பார்கள். அமெரிக்காவில் 911 என்றால் சீனாவில் 119, தமிழ்நாட்டில் 108, பிற மாநிலங்களிலும் இப்படி ஏதோ ஒரு எண் வரிசை இருக்கும்.   எமர்ஜென்சி என்பது அவசரமாக நோயாளியைப் பார்த்து அவரது உயிரைப் பாதுகாக்கும் நிலை என புரிந்துகொண்டால் போதும். பிற நாடுகள் எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தொடக்க சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வேலை அதிகம். ஆனால் ஆட்கள் குறைவு. எமர்ஜென்சி என்று வரும் நோயாளிகளை முதலுதவி செய்துவிட்டு உடனே அருகில் உள்ள   அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிவிடுவதே வழக்கம்.   இதனால் நோயாளி பிழைப்பாரா என்றால் ஆம்புலன்ஸை ஓட்டுபவரின் திறனைப் பொறுத்தது. நோயாளியும் பிரச்னையை சமாளிக்கத்தான் வேண்டும். எமர்ஜென்சி துறை என்றே தனியார் மருத்துவமனைகள் இப்போது திறக்கத் தொடங்கிவிட்டன. அரசு மருத்துவமனைகளிலும் இத்தகைய பிரிவுகள் உண்டு. எப்படி வேலை செய்கிறார்கள் என நீங்களே சென்று பார்ப்பது உடலுக்கும் மனதுக்கும் கேடு.

உண்மையா? உடான்ஸா? - விமான எரிபொருளாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்!

படம்
  உண்மையா? உடான்ஸா? சுவாசிக்கும்போது, ஒரு நேரத்தில் நாசித்துவாரங்களில் இரண்டில் ஒன்று மட்டுமே வேலை செய்யும்! உண்மை. மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதையும் சரியாக கவனித்துப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நீங்கள் உணர முடியும். குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு ஒருமுறை இப்படி மூச்சுத்துளைகளில் காற்று உள்ளிழுக்கப்படுவது இடது, வலது என மாறும். இந்த மாற்றம் உடலில் தன்னியல்பாக நடைபெறுகிறது.  பேக்கேஜிங்கில் பயன்படும் பபுள் ரேப், சுவர்களில் ஒட்டவே தயாரிக்கப்பட்டது! உண்மை. இதனை உருவாக்கியவர்கள் பொறியாளர் அல் ஃபீல்டிங், மார்க் சாவென்னஸ் ஆகியோர்தான். இவர்கள் இதனை சுவர்களில் தாள் போல அலங்காரமாக ஒட்டலாம் என நினைத்தனர். 1957ஆம் ஆண்டு,  தாம் தயாரித்த பபுள்ரேப், பொருட்களை உடையாமல் கொண்டு செல்ல பயன்படும் என்பதை நடைமுறைரீதியாக உணர்ந்தனர். அதனால்தான், அதனை நாம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.  நத்தைகளுக்கு கூர்மையான பற்கள் உண்டு!  உண்மை. நத்தை இனங்களில் சிலவற்றுக்கு ரிப்பன் போன்ற நாக்கும், சிறு பற்களும் கொண்ட தாடையும் உண்டு. இதற்கு ராடுலா (Radula) என்று பெயர். உணவுப்பொருட்களை குறிப்பிட்ட அளவில் கத்தரித்து சாப்பிட இப