இடுகைகள்

ஆஸ்பிரின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வலியை உணர்வது முக்கியமா?

படம்
                  வலியை , மகிழ்ச்சியை உணர்த்தும் நரம்பு அமைப்புகள் நாம் பூனையின் தலையை தொடும்போது உணரும் மென்மையான உணர்வு எப்படி வருகிறது ? இதற்கு நரம்பு அமைப்புகள்தான் காரணம் . வலியோ , மகிழ்ச்சியோ இந்த இரண்டுமே நரம்பு அமைப்புகளின் சென்சார்கள் மூலமே மூளைக்கு தெரிய வருகிறது . வலி என்பது உடலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நாம் உணர உதவுகிறது . வலி எந்தளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவு பிரச்னை பெரிதாக இருக்கிறது என உணர்ந்து உடனே செயல்படவேண்டும் . வலி என்ற உணர்வு இல்லாதபோது நாம் நெருப்பில் கைவைத்தாலும் அது நம் கையை சுடும் என்று தெரியாது . இதனால் கை காயப்படும் அபாயம் உள்ளது . வலி என்பது நமது உயிரைக் காப்பாற்றும் புத்திசாலித்தனமான அறிகுறி . இந்த அறிகுறி தாவரங்களுக்கு கிடையாது . எனவே , அவற்றை வெட்டினாலும் தங்களது வலியை வெளிப்படுத்த முடியாது . மனிதர்களால் தங்களுக்கு ஏற்படும் வலியை பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும் . வலியை உணர முடியாத தன்மை ஒருவருக்கு மரபணு காரணமாக ஏற்படலாம் . இதனை காக்னிடல் இன்சென்ஸிடிவிட்டி டு பெயின் என்கிறார்கள் . நீளமாக சொல்ல கடினமாக இருந்தால் சிஐபி . இப்படி ஒருவ