இடுகைகள்

அறிவுப்பற்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோடிராமா, டிஹெச்சி, சீனா ஒயிட் ஆபத்து

படம்
      தாலமைடு மருந்தால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன? அறுபதுகளில் தாலமைடு, குமட்டலைக் கட்டுப்படுத்தும் மருந்து என விளம்பரம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது, இதை சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் கை, கால்களின்றி ஊனமாக பிறந்தன. சில குழந்தைகளுக்கோ கண் பார்வை, செவித்திறன் பாதிப்பு, இதயத்தில் சிக்கல்கள், குடல் பிரச்னைகள் ஆகிய சிக்கல்கள் இருந்தன. எனவே, புகார்கள் குவிய அமெரிக்க அரசு தாலமைடு மருந்து விற்பனையை நிறுத்தியது. விதிகளை கடுமையாக்கியது. டிசைனர் ட்ரக்ஸ் என்றால் என்ன? பெனடைல், மெப்ரிடைன் ஆகிய போதை மருந்துகளை ஒத்த போதைப்பொருட்களின் தயாரிப்பை டிசைனர் ட்ரக்ஸ் என்று கூறுகிறார்கள். பெனடைலின் வேதிப்பொருளைக் கொண்டதுதான் சீனா வொயிட். மார்பினை விட மூன்றாயிரம் மடங்கு அதிக திறன் கொண்டது. குறைந்தளவு பயன்படுத்தி வந்தாலே ஒருவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இத்தகையை போதைப்பொருட்களின் அதீத பயன்பாடு சார்ந்த மரணங்கள் அனேகம் உண்டு. டெட்ராஹைட்ரோகன்னபைனால் வேதிப்பொருள், எத்தனை நாட்கள் ஒருவரின் உடலில் இருக்கும்? கஞ்சாவின்  அடிப்படை மூல வேதிப்பொருள் டிஹெச்...

அரிய நோய்களுக்கான மருந்துகள்!

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி ஆர்பன் ட்ரக் என்றால் என்ன? மக்கள்தொகையில் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை தாக்கும் நோய்களுக்கான மருந்துகளை ஆர்பன் ட்ரக் என்று கூறுகிறார்கள். இந்த மருந்துகள் அதிக லாபத்தை மருந்து கம்பெனிகளுக்கு கொடுப்பதில்லை. ஆனால், அரிய நோய்களுக்கு மருந்துகள் அவசியம் தேவை. எனவே, அமெரிக்க அரசு ஆர்பன் ட்ரக் ஆக்ட் 1983 என தனிச்சட்டம் போட்டு மருந்து நிறுவனங்களுக்கு நிதி உதவியை அளிக்கிறது. மருந்துகளை தயாரிக்க வைத்து வெளியிட உதவுகிறது. ஆன்டிபயாடிக் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்? செல்மன் வாக்ஸ்மன் என்பவர், நோய்க்கு பயன்படுத்தும் பாக்டீரிய நுண்ணுயிரிகளை ஆன்டி பயாடிக் என்று கூறினார்.கூறிய காலம் 1940களின் மத்தியில் என வைத்துக்கொள்ளலாம். இவருக்கு முன்னதாக ஆன்டிபயாசிஸ் என்பதை கூறியவர், பால் வுயில்மன். இவர் பாக்டீரியங்களின் வளர்ச்சிக்கு உதவும் ப்யோசைனின் என்ற வேதிப்பொருளைக் கண்டுபிடித்து தனியாக பிரித்தெடுத்தார். இந்த வேதிப்பொருள் ஆய்வகத்தில் சோதனைக்குழாயில் பாக்டீரியா வளர்வதை ஊக்கப்படுத்துகிறது. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷம் இது.    

அரோமா தெரபி நோய்களைத் தீர்க்குமா?

படம்
      அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி அரோமா தெரபி என்றால் என்ன? உடல், மனம், ஆன்மா சார்ந்து குறிப்பிட்ட வாசனைகளைக் கொண்டு நோய்களைத் தீர்க்கும் முறை. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ரெனே மாரிஸ் கட்டஃபோஸ், அரோமா தெரபி என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார். ஒருமுறை ஆய்வகத்தில் பணியாற்றியபோது விபத்துக்குள்ளாகி அவரது கையில் நெருப்பு பற்றியது. அப்போது லாவண்டர் எண்ணெய் மூலம் நிவாரணம் கிடைத்தது. அதுமுதல் பல்வேறு எண்ணெய்களை எரித்து வாசனை வழியாக ஒருவரின் நோய்களைத் தீர்க்க முடியுமா என ஆராயத் தொடங்கினார். இந்த வகையில் மூச்சு, தோல் வழியாக ஒருவரை குணப்படுத்த முடியும் என அரோமோதெரபி மருத்துவர்கள் நம்புகிறார்கள். இந்த செயல்முறை, மனநலனில் நிறைய மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன? ஸ்பைக்மோமானோமீட்டர் என்ற கருவியை 1881ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வான் பாஷ் என்பவர் கண்டுபிடித்தார். இன்றைக்கும் இதே கருவிதான், ஒருவரின் ரத்த அழுத்தத்தை அளக்க பயன்பட்டு வருகிறது. ஒருவரின் புஜத்தில் பட்டை ஒன்றை சுற்றப்பட்டு, ரப்பர் குமிழ் மூலம் அழுத்தம் க...

அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர், ஆழ்கடல் டைவர்களுக்கு ஏற்படும் அழுத்த பாதிப்பு

படம்
            அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி கொடிகளை வடிவமைப்பதில் உள்ள நுட்பங்கள் என்ன? தேசியக்கொடியோ, கட்சிக்கொடியோ, ராணுவப்பிரிவு கொடியோ அதை கம்பத்தில் கட்டி இறக்கவேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். எனவே, அதை செவ்வகமாக இருந்தால்போதும் என வடிவமைக்கக்கூடாது. கொடியாக கம்பத்தில் பறக்கும்போது தெளிவாக தெரிய வேண்டும். கொடியை எளிமையாக வடிவமைக்கவேண்டும். எளிமை என்பதில் அதை நினைவுகூர்ந்து தாளில் யாரேனும் வரையும் விதமாக இருப்பதும் அடங்கும். அதை பல்வேறு வடிவங்களில் சுருக்கினாலும் வேறுபாடு வரக்கூடாது. நல்ல விஷயங்களை பிறரிடம் இருந்து காப்பி அடிக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் கொடிகளைப் பொறுத்தவரை இன்னொரு நாட்டைப் போல இருந்தால் சொந்த நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள். கொடியில், நிறங்கள் தெளிவாக தெரியவேண்டும். நிறங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது நல்லது. வெள்ளை நிற பின்னணியில் நீலநிறம் என கொடி தெளிவாக இருப்பது நல்லது. கொடியில் குறிப்பிட இனக்குழு அல்லது தனித்துவத்தை உணர்த்தும் விஷயங்கள் இருக்கவேண்டும். குழப்பத்தை தருவதாக மாறிவிடக்கூடாது. வார்த்தை, இலச்சினை என ஒன்றையே ...

தூக்க குறைபாடுகளின் வகை, விமானப் பயண ஜெட்லாக் - மிஸ்டர் ரோனி

படம்
          அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி தூக்க குறைபாடு நோய்கள் வகைகள் உண்டா? அனைவரும் அறிந்த தூக்க குறைபாடு என்பது இன்சோம்னியா. இரவில் தூக்கமின்மை, தூங்காமல் விழித்திருப்பது, படுத்தாலும் ஓய்வே இன்றி எழுவது ஆகியவை இன்சோம்னியாவின் அறிகுறிகள். இக்குறைபாட்டிற்கு காரணமாக மன அழுத்தம், சோர்வு, மது அருந்துவது, காபி, தேநீர் அருந்துவதை காரணமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஹைப்பர் சோம்னியா, பகல் இரவு என பாராமல் எப்போதும் தூங்கி வழிவது. இந்த வகையில் இக்குறைபாடு, இன்சோம்னியாவிற்கு அப்படியே எதிரானது. நார்கோலெப்சி, எப்போது ஒருவர் தூங்குவார் என்றே கூறமுடியாது. சில நிமிடங்களில் தூக்கத்தில் ஒருவர் ஆழ்ந்துவிடுவார். தூக்க செயலிழப்பு என மருத்துவர்கள் நார்கோலெப்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். உணர்ச்சிகரமான நிகழ்வுகள், திடீர் தூக்கத்தை தூண்டிவிடுகின்றன. கண்கள் விழித்திருக்கும், மூச்சுவிடுவார்கள், மூளை செயல்படும். ஆனால் உடல் செயலிழந்த நிலையில் இருக்கும். ஸ்லீப் அப்னியா, குறைபாட்டில் ஒருவர் தூங்கும்போது திடீரென மூச்சு நின்றுபோய்விடும்.இதனால், அவர் தூக்கத்தில் இருந்து எழ நேரிடும். பலருக்கு...

தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு!

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி   கான்கஷன் என்றால் என்ன? தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு. இதன் காரணமாக ஒருவருக்கு உயிரபாயம் ஏற்படாது. ஆனால் சிலருக்கு சுயநினைவு இருக்கும். சிலருக்கு இருக்காது. ஆனால் மெல்ல பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கும் அவற்றைப் பார்ப்போம். தலைவலி, கழுத்துவலி எப்போதும் இருக்கும். முடிவெடுப்பது, நினைவில் வைத்துக்கொள்வது, கவனத்தை குவிப்பது கடினமாக மாறும். சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது ஆகிய செயல்கள் மெதுவாக மாறிவிடும் எப்போதும் உடலில் களைப்பு இருக்கும். மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். தூங்கும் பழக்கம் மாறும் மயக்கம், உடல் சமநிலை தவறும் சூழல் உருவாகும். வாந்தி வருவது போல தோன்றும் கண் பார்வை மங்கும், கண்ணில் எளிதாக சோர்வு தோன்றும். ஒளி, ஒலி சார்ந்து கவனக்குறைவு ஏற்படும் வாசனை, சுவையறியும் திறன் இழப்பு காதில் ஓலி கேட்கத் தொடங்கும் இரண்டு வகை வாதங்கள் உள்ளனவா? ஐசீமிக், ஹெமோர்ஹேஜிக் என இரு வாதங்கள் உள்ளன. ஐசீமிக், மூளையில் செல்லும் ரத்தம் தடைபடுவதால் உண்டாவது. இந்த வகையில் மனிதர்களுக்கு எண்பது சதவீத வாதம் உருவாகிறது. அடுத்து, ஹெமோர்ஹேஜிக் ...