இடுகைகள்

அமெரிக்கா - அகதிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹெச் 1 பி விசா தடை செய்யப்பட்டதால் யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்? - ஓர் அலசல்

படம்
youtube அமெரிக்க அரசு, ஹெச் 1 பி விசா, அகதி அல்லாதவர்களின் விசாக்களை தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த விசாக்கள் அறுபது நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. ஹெச்1 பி, ஹெச் 2பி, ஹெச்4 ஜே, எல் ஆகிய விசாக்களும் வரும்   டிச.31ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நல்ல திறமைசாலியான ஆனால் குறைவான சம்பளம் வாங்கும் இந்திய ஊழியர்கள்தான் மேற்சொன்ன விசாக்களைப் பெற்று அமெரிக்காவில் வேலை செய்து வந்தார்கள். ஆண்டுதோறும் இத்தனை விசாக்கள் என அமெரிக்க அரசு, விநியோகிக்கும். பிற நாட்டு டெக் நிறுவனங்கள் இதற்காக ஊழியர்களை தேர்ந்தெடுத்து விசாவுக்கு விண்ணப்பிக்க வைத்து, அங்குள்ள அலுவலங்களுக்கு பணிபுரிய அனுப்பி வைத்து வந்தார்கள். அமெரிக்க அரசு வழங்கும் விசாக்களில் இந்திய தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்து வந்தது, ஹெச் 1 பி விசாவைத்தான். இந்த விசாவை பட்டும் அமெரிக்கா 85 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஆண்டுதோறும் வழங்கி வந்தது. இதில் 65 ஆயிரத்தை அதிக திறனுள்ள ஊழியர்களுக்கு வழங்குகிறார்கள். 20 ஆயிரம் விசாக்களை அதிக கல்வி கற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். அமெரிக்க கல்லூரி, பல்கலையில் முதுகலை படித்தவர்களுக்கு வழங்குகிறார்

கருணை காட்டுங்கள் ட்ரம்ப்!

படம்
கருணை காட்டுங்கள் ட்ரம்ப்! “நீதிபதிகள், வழக்குகள் எதுவும் தேவையில்லை. எங்கள் நாட்டுக்கு வரும் அகதிகளை உடனே திருப்பு அனுப்பிவிடுவோம்” என கடந்த ஜூன் 24 அன்று ட்விட்டர் பதிவில் நெருப்பை கக்கினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ட்ரம்ப்பின் அரசியல் புரியாமல் அமெரிக்கா- மெக்சிகோ இரு நாடுகளுக்கிடையான பாலத்தில் வாரக்கணக்காக காத்திருக்கும் மக்கள் அமெரிக்காவில் நுழைய பரிதாபமாக காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 20 அன்று, “சுவர் உறுதியாக வலுவாக கட்டப்பட்டு வருகிறது” என ட்ரம்ப் கூறுவதன் அர்த்தம் அவை மெக்சிகோ எல்லையில் அல்ல; மக்களின் மனதில் கட்டப்பட்டு வருவதையே சூசகமாக குறிப்பிட்டார். மாடமாரோஸ், மெக்சிகோ, ப்ரௌன்ஸ்வில்லே,டெக்சாஸ் ஆகிய இடங்களிலுள்ள துறைமுகம் வழியாக வரும் அகதிகளை அமெரிக்கா தற்போது தடுத்து நிறுத்தியுள்ளது. அங்கு தங்கியுள்ள மக்கள் உள்நாட்டு போர், வறுமை பிரச்னைகளால் வாழ வழியற்று அமெரிக்காவை தேர்ந்தெடுத்து வந்தவர்கள். ஜெர்மனி தவிர பிற நாடுகளில் அகதிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு கிடையாது. தீவிரவாத பிரச்னை என்றால் உடனே அகதிகளை கைகாட்டுவது புதிய கலாசாரமாகி வருகிறது. அட்டர்னி ஜெனர