ஹெச் 1 பி விசா தடை செய்யப்பட்டதால் யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்? - ஓர் அலசல்






DONALD TRUMP CARICATURE MAKING OF - YouTube
youtube





அமெரிக்க அரசு, ஹெச் 1 பி விசா, அகதி அல்லாதவர்களின் விசாக்களை தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த விசாக்கள் அறுபது நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. ஹெச்1 பி, ஹெச் 2பி, ஹெச்4 ஜே, எல் ஆகிய விசாக்களும் வரும்  டிச.31ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நல்ல திறமைசாலியான ஆனால் குறைவான சம்பளம் வாங்கும் இந்திய ஊழியர்கள்தான் மேற்சொன்ன விசாக்களைப் பெற்று அமெரிக்காவில் வேலை செய்து வந்தார்கள். ஆண்டுதோறும் இத்தனை விசாக்கள் என அமெரிக்க அரசு, விநியோகிக்கும். பிற நாட்டு டெக் நிறுவனங்கள் இதற்காக ஊழியர்களை தேர்ந்தெடுத்து விசாவுக்கு விண்ணப்பிக்க வைத்து, அங்குள்ள அலுவலங்களுக்கு பணிபுரிய அனுப்பி வைத்து வந்தார்கள். அமெரிக்க அரசு வழங்கும் விசாக்களில் இந்திய தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்து வந்தது, ஹெச் 1 பி விசாவைத்தான். இந்த விசாவை பட்டும் அமெரிக்கா 85 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஆண்டுதோறும் வழங்கி வந்தது. இதில் 65 ஆயிரத்தை அதிக திறனுள்ள ஊழியர்களுக்கு வழங்குகிறார்கள். 20 ஆயிரம் விசாக்களை அதிக கல்வி கற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். அமெரிக்க கல்லூரி, பல்கலையில் முதுகலை படித்தவர்களுக்கு வழங்குகிறார்கள்.

எல் 1 விசாக்கள், அதிக திறனுள்ள தொழிலாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இவர்கள் அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் வாழ அனுமதி உண்டு.

ஏஜே விசாக்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், பயிற்சி பணியாளர்கள் ஆகியோர் அமெரிக்காவில் வேலை தேடுவதற்காக பயன்படுத்துகிறார்கள்.

ஹெச்2பி என்ற விசா, உணவு மற்றும் விவசாயத்துறை தொழிலாளர்கள் அமெரிக்காவில் வேலை தேட உதவுகிறது.

இந்த ஹெச்1 விசா, 1952ஆம் ஆண்டு வழங்கப்படத் தொடங்கியது. இந்த விசாக்கள் வழங்கப்படுவது பொருளாதார நிலைமையைப் பொறுத்தது. இணைய வசதி, கணினிகள் இந்தியா, சீனா நாடுகளில் பெருகத்தொடங்கின. இதனால் குறைந்த சம்பளத்திற்கு அமெரிக்காவில் பணிபுரிய பல்லாயிரம் பட்டதாரிகள் தயாராக இருந்தனர்.

இதனால் இந்தியா, சீனா உட்பட தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் அமெரிக்காவில் குவிந்தனர். ஆனால் அங்குள்ள மக்களுக்கு இவர்களோடு போட்டியிடும் திறன் இல்லை. எனவே, அரசு உள்நாட்டு மக்களை வேலைவாய்ப்பில் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டின. 2017இல் ஆட்சிக்கு வந்த டிரம்ப், ஹெச் 1 பி விசாவுக்கு தடைவிதிப்பதாக கூறினார். கோவிட் -19 பாதிப்பு பெருகியவுடன் அகதி அல்லாதவர்களுக்கான விசாக்களை ஜூன் 23 வரை தடை செய்வதாக கூறியவர், பொதுமுடக்கத்தை பல வெர்ஷன்களாக அறிவிப்பதைப் போல இரண்டாம் முறை டிசம்பர் 31 என ஒரே போடாக போட்டுவிட்டார். ஹெச்1 விசாவிற்கான விசாரணை செலவும் ஆண்டுதோறும் டெக் கம்பெனிகளுக்கு அதிகரித்து வந்தது. விசாக்களின் மீது அமெரிக்க அரசின் கட்டுப்பாடு கூடத்தொடங்கியபோது, விசா அளிக்கும் நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால் மனுக்கள் நிராகரிக்கப்படும் சதவீதம் 6 முதல் 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாயம், உணவு சார்ந்த தொழிலாளர்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனை குடியுரிமைத்துறை விரைவில் தெளிவுபடுத்தி அறிவிக்கலாம். வரும் டிசம்பருக்குள் இந்த ஆணையை அரசு மாற்றிக்கொள்ளும் என நம்புகிறேன். கல்வி கற்க அமெரிக்காவுக்கு வரும் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என்கிறார் சுமீத் சர்மா. இவர் கல்வி கற்க வெளிநாடுகளுக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி சார்ந்து உதவுகிறார்.

விசா செலவு அதிகரிப்பதால் இந்தியா மட்டுமல்ல பிறநாட்டு நிறுவனங்களும் பணியாளர்களை ஆமெரிக்காவிற்கு அனுப்பத் தயங்குவார்கள். அமெரிக்காவில் உள்ள கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு இதனால் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 2018-19 இல் மட்டும் 13 ஆயிரம் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துள்ளன இந்த டெக் நிறுவனங்கள். அப்புறம் பாதிப்பு இல்லாமல் இருக்குமா?

அதிக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் மட்டும்தான் ஹெச் 1 பி விசாவை இனிமேல் பெறமுடியும். எனவே இங்கிருந்து தொழிலாளர்களை எடுப்பதை விட அமெரிக்காவில் பணியாளர்களை வேலைக்கு எடுத்தால் செலவு குறையும். நிறுவனங்கள் இந்த திசையில் யோசிக்க தொடங்கியிருக்கும்.

வளம் நிறைந்த இந்தியாவை விட்டு ஓடி அமெரிக்காவில் வேலைக்காக தஞ்சமடையும் இந்தியர்களின் எண்ணிக்கை சதவீதம் 67 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, 184 லட்சம் பேர் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 1 வரை ஹெச் 1 பி விசாவுக்கு 2.5 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆஷிஸ் ஆர்யன்


கருத்துகள்