எனக்குள் நீ, உனக்குள் நான் - உன்பெயர்தான் என்ன? யுவர் நேம் - அனிமேஷன் -ஜப்பான்










யுவர் நேம்

அனிமேஷன் படம்

இயக்குநர்: மகோடா ஷின்காய்

திரைக்கதை: மகோடா ஷின்காய்



இசை: ராட்விம்ஸ்

ஜப்பானினின் டோக்கியோவிலுள்ள பள்ளி மாணவன் டக்கி டச்சிபானா, கிராமத்திலுள்ள பள்ளி மாணவி மிட்சுவா மியாமிசு என்ற இருவரின் ஆன்மாக்களும் இடம்மாறுவதுதான் கதை.

டக்கி, மிச்சுவா ஆகியோரின் உடலில் இருவரின் ஆன்மாக்களும் மாறி மாறி உட்கார இருவரின் வாழ்க்கையும் உலகைப் பார்க்கும் பார்வையும் கூட மாறுகிறது. ஆணின் உடலில் பெண், பெண்ணின் உடலில் ஆண் என சில மாதங்களுக்கு மாறி மாறி இச்செயல்பாடு நடைபெற இருவரும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்குகின்றனர். செய்திகளை நோட்டு புத்தகம் வழியாக, கைகளின் வழியாக பரிமாறிக்கொள்கின்றனர்.

இந்த நேரத்தில் மிட்சுபாவின் கிராமம் விண்கல் ஒன்றால் அறியும் செய்தியை டக்கி அறிகிறான். இதனை தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த முயற்சி தோற்றுப்போகிறது.

இருவரைப் பற்றிய எண்ணங்களும் மெல்ல அழியத்தொடங்குகின்றன. இறுதியில் இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இறுதிப்பகுதி.

 

படம் முழுக்க சூரியனின் ஒளி ஓர் கதாபாத்திரமாகவே வருகிறது. படத்தில் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இயக்குநர் ஷின்டாய் பஞ்சபூதங்களுக்கும் கொடுத்திருக்கிறார். ஒரு அனிமேஷன் படத்தில் வானத்தை இத்தனை முறை பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை. அத்தனை பிரேம்களும் கொள்ளை அழகு.

ஒரு கட்டத்தில் வானில் எரிகல் வரும் அழகிலேயே லயிக்கும்படி ஆகிறது.

படத்தின் தலைப்பு இறுதிக்காட்சியில் வரும் வசனம்தான். டக்கி, மிட்சுபா இருவரும் கோவிலுக்கு செல்லும் படிகளில் சந்தித்து ஒருவரையொருவர் பெயர் கேட்டுக்கொள்ளும்போது படம் நிறைவடைகிறது. நெகிழ்ச்சியான படம். வசூல், விருதுகள் இவற்றையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள். படத்தின் காட்சிகள், கதாபாத்திர சித்தரிப்பு என அனைத்தும் கண்களில் ஒற்றிக்கொள்ளும் பேரழகு.

கோமாளிமேடை டீம்

 

 



கருத்துகள்