கிராமப்புற மக்களின் வேலைநாட்களை அதிகரிப்பதில் அவசரம் காட்டக்கூடாது - அமைச்சர் நரேந்திர சிங் தோமர்






BJP Minister Narendra Singh Tomar Won't Say How He Spent Rs 11 Cr ...





நரேந்திரசிங் தோமர்

கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சர்

கிராமப்புற வேலைவாய்ப்புக்கான காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை நூறு நாட்களுக்கும் அதிகமாக கூட்ட காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்திருக்கிறதே?

உடனே இந்த விவகாரத்தில் அவசரப்படக்கூடாது. முதலில் இப்போது கிராமப்புற வேவைவாய்ப்பு திட்டத்தில் மக்களுக்கு நூறு நாட்கள் வேலை கொடுக்கலாம். பிறகு இந்த நாட்களை நீட்டிக்க விரும்பினாலும் செய்யலாம். ஆனால் அதனை மத்திய அரசே செய்யவேண்டியதில்லை. மாநில அரசுகள் கூட செய்யலாம். காங்கிரஸ் அரசு பல்வேறு மாநிலங்களை ஆண்டு வருகிறார்கள்.. அவர்கள் தங்களுக்கு தேவையெனில் நாட்களை அதிகரிக்கலாமே? அவர்களுக்கு நிதிநிலைமை தெரியும். எனவே இந்த விஷயத்தை அரசியலாக்குகிறார்கள். காங்கிரஸ் கட்சி பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு இது தெரியாதா என்ன?

இத்திட்டம் பற்றி விளக்குங்கள்.

காந்தி கிராம ப்புற வேலைவாய்ப்புத்திட்டம் என்பது கிராம மக்களுக்கானது. இதற்கு மாற்றுத் திட்டம் ஏதுமில்லை. அதனால்தான் மத்திய அரசு இதற்கென 61 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. இதில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நாள் வரை நாங்கள் மாநிலங்களுக்கு 29 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியுள்ளோம். கடந்த ஆண்டு மே மாதத்தை விட இந்த ஆண்டு இதற்கான தேவை கூடியுள்ளது. இப்போது தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளதால் வேலைவாய்ப்புக்கான தேவை அதிகரிக்கும். நாங்கள் இதுபற்றி ஆராய்ந்து வருகிறோம்.

 

ஏழைகளுக்கு பணமாக கையில் கொடுப்பதை பற்றி காங்கிரஸ் கட்சி இடையறாது பேசி வருகிறதே?

அப்படி பணத்தை ஒருவருக்கு கொடுத்தால் தற்சார்பு இந்தியராக எப்படி அவர் மாறுவார். பிரதமர் மோடியின் திட்டப்படி ஆத்மா நிர்பார் இந்தியா உருவாக, வங்கிகள் மூலம் அரசு நிதி வழங்கியுள்ளது. இதோடு தனிநபர்களும் தனது நிதியை முதலீடாக்கினால்தான் நாடும் வளரும் அவரும் சுய சார்பாக நிமிர்ந்து நிற்கமுடியும். அரசு இத்தகையை வளர்ச்சியையே விரும்புகிறது.

நிதி ஊக்கத்தொகை பணமற்ற மாநிலங்களுக்கு உதவுமா?

பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு சிந்தித்தே நிதி ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை வசதிகளை இந்த நிதி ஊக்கப்படுத்துவதோடு, மக்களின் தொழில்களையும் வளர்ச்சி, மேம்பாட்டு அடையச் செய்யும்.

விவசாயத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரதமர் மோடி எளிமையாக வணிகம் செய்வதற்கும், சுலபமாக வாழ்வதற்குமான முயற்சிகளை செய்துவருகிறார். விவசாயத்துறையில் விவசாயிகள் அதிக லாபம் கிடைக்கவும், இடைத்தரகர்களை ஒழிக்கவும் பல்வேறு சீர்திருத்தங்களை செய்வது அவசியம். இன்ஸ்பெக்டர் ராஜ் முறை ஒழிவதையும், அதனால் விவசாயத்துறை மேம்படுவதையும் இன்னும் சில காலத்திலேயே பார்க்க முடியும்.

எகனாமிக் டைம்ஸ் 8 ஜூன் 20

நிதி சர்மா


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்