நான் எழுதியுள்ள தீமையின் உருவமான கதாபாத்திரம் இறப்பே இல்லாதது! - எழுத்தாளர் டேனியல் கேஹ்ல்மன்
versopolis |
எழுத்தாளர் டேனியல் கேஹ்ல்மன்
ஜெர்மன் நாட்டுப்புறக் கதையில் பிரபலமாக
உள்ள கதாபாத்திரம் டைல் உலன்ஸ்பிஜெல். குழந்தைகளின் இலக்கியத்தில் மிகப் பிரபலமாக உள்ள
தீமையைச் சொல்லும் கதாபாத்திரம் இது. இதனை நவீனத்திற்கு ஏற்ப மாற்றியிருக்கிறார் எழுத்தாளர்
டேனியல்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது
உங்களது எழுத்தை பாதித்ததாக சொல்கிறார்களே?
அவர் பதவிக்கு வந்த செய்தியைக் கேள்விப்பட்டதும்
அத்தோடு அமெரிக்காவில் ஜனநாயகம் முடிவுக்கு
வந்ததாக நினைத்தது உண்மை. டைல் என்ற கதாபாத்திரத்தின் செயல்பாடுகளை எழுதிக்கொண்டிருந்ததால்
உடனே என்னால் எழுத்தை நிறுத்தமுடியவில்லை. என்னால் முக்கிய கதாபாத்திரத்தின் எடுத்துக்காட்டை
சொல்லாமல் எழுத முடியாதோ என்று நினைத்து பயந்தேன்.
இந்து புராணங்களை அறிவீர்களா?உங்களது
கதையில் வரும் டைல் சில நேரம் மனிதனாக, சில நேரம் புனைவு கதாபாத்திரமாக வியக்க வைக்கிறது.
சுதந்திரம் வேண்டி விலங்குகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைக்கிறது. இந்த பாத்திரத்தை
கலாசார வேறுபாடுகள் கடந்து வாசகர்கள் எப்படி பார்க்கவேண்டுமென நினைக்கிறீர்கள்?
நான் இதுவரை டைல் போன்ற இறவாத கதாபாத்திரத்தை
எழுதியதில்லை. எனக்கு முந்தைய எழுத்தாளர்கள் இதனை எழுதியிருக்கலாம். எனக்கு பின்னர்
வருபவர்களும் எழுதலாம். இறப்பே இல்லாத இந்த கதாபாத்திரம் அனைத்து புராணங்களிலும் பொதுவாக காணப்படும் ஒன்றே. உலகில் இறப்பே இல்லாமல் உலவுவதற்கான
தன்மையை டைல் கொண்டுள்ளது. என் புத்தகமும் அப்படியே நீடிக்குமானால் இந்த கதாபாத்திரமும்
சஞ்சீவியாக வாழும்.
அடுத்து என்ன எழுதப்போகிறீர்கள். முக்கியமாக
லாக்டௌன் நேரத்தை எப்படி செலவிட்டீர்கள்?
பெருந்தொற்று பற்றிய நாடகம் ஒன்றை எழுதினேன்.
பெருந்தொற்று ஏற்படுத்தும் வைரஸ், அதனால் நாடுகள் அமல்படுத்தும் பொதுமுடக்க காலகட்ட
நிகழ்வுகளை வைத்து நையாண்டியாக நாடக காட்சிகளை எழுதியுள்ளளேன். வியன்னாவில் இதனை அரங்கேற்ற
திட்டமிட்டுள்ளேன். இது எப்போது என்பதுதான் யாருக்கும் தெரியாத கேள்வி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஜெய்தீப் சென்
கருத்துகள்
கருத்துரையிடுக