மாஸ்க் மட்டுமே கோவிட் -19 நோய்த்தொற்றை தடுத்து விடாது! - மருத்துவர் சுரேஷ் திரேகன்







Woman, Model, Down, Fine Arts, Fiction, Fashion, Doctor




டாக்டர் சுரேஷ் திரேகன்

மெல்ல நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பொதுமுடக்கம் நீக்கப்பட்டு வருகிறது. விதிகள் தளர்வு செய்யப்பட்டு வருகின்றன. என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்?

விதிகளை தளர்த்தினாலும் நீங்கள் முக கவசங்களை அணிந்தபடி வெளியில் செல்லவேண்டும். யார் முக கவசங்களை அணிந்தாலும் சரி, அணியாவிட்டாலும் சரி நீங்கள் உங்கள் பாதுகாப்பிற்கு சுத்தம் சுகாதாரத்தை கடைபிடியுங்கள். வெளியே சென்று வந்தால் கைகளை நன்றாக கழுவுங்கள்.அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களும், பத்து வயதிற்கு கீழுள்ளவர்களும் கவனமாக இருக்கவேண்டும். மற்றபடி நோய்த்தொற்றை தடுத்து சிதறடிக்க கூடிய வெள்ளித்தோட்டா ஏதும் நம்மிடம் கிடையாது.

அலுவலங்கள் தொடங்கிவிட்டன. பணியாளர்களும் பணிகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர்?

அவை இயல்பானதுதான். முதலில் குறைவாக இருந்த பாதுகாப்பு விஷயங்களை இப்போது அதிகமாக செய்யவேண்டும். வணிகத்தை மட்டும் நிறுவனங்கள் பார்க்காமல் நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பையும் பார்ப்பது அவசியம். பொருளாதார இழப்பு என்பதை மட்டும் பார்க்க கூடாது. பணியிடங்களில் நோய்த்தொற்று பரவலாகி அனைவரையும் பாதித்தால் என்ன செய்வீர்கள்? தேசமும் பாதிக்கப்படுமே? பொருளாதார வளர்ச்சிக்கு குறுக்குவழி தேடினீர்கள் என்றால் அதற்கான விலை அதிகமாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி வளர்த்துக்கொள்வது?

உடலின் தசைகளை வலிமையாக்குவதுதான் நோய் எதிர்ப்பு சக்தி. சூரிய நமஸ்காரம், பல்வேறு யோகாசனங்களை தினசரி நேரம் ஒதுக்கி செய்யுங்கள். அதுவே போதுமானது. அமெரிக்க அதிபர் டிரம்ப் போல ஹைட்ராக்ஸிக்ளோரோக்வின் மருந்துகளை வெட்டியாக விழுங்குவதால் எந்த பயனுமில்லை. மருத்தவர் பரிந்துரைப்படி உண்ணுங்கள். ஆனால் நீங்களாக மருந்தை தேடி உண்டால் ஆபத்து ஏற்படும். முன்னெச்சரிக்கைக்காக அதனை சாப்பிடுவது ஆபத்து.

அவுட்லுக்

சதீஸ் பத்மநாபன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்