மகாராஷ்டிரம் தடுமாறுவது இந்த காரணங்களால்தான்! - நோய்த்தொற்றை தடுத்து நிறுத்துவாரா உத்தவ் தாக்கரே?
ஃப்ரீபிக் |
தடுமாற்றம்
என்ன?
மார்க்கெட்டில்
கூடும் கூட்டத்தை ஒன்றும் செய்யமுடியவில்லை. தடை செய்யப்பட்ட பகுதிகளில் காவல்துறையோ
பிறரோ காய்கறிகள், பழங்கள், தேவைப்படும் பொருட்களை வழங்க முன்வரவில்லை. இதன்காரணமாக
ரஜினி படத்திற்கான முதல்காட்சி போல மார்க்கெட்டுகளிலும் கடைகளிலும் கூட்டம் கும்முகிறது.
நோய்பரவலை அப்புறம் எப்படித்தான் தடுப்பதாம்?
ரிசல்ட்
லேட்!
காய்ச்சல்,
சளி ஒருவருக்கு இருந்து அவரை சோதித்து முடிவுகளைச் சொல்ல சினிமாவில் சொல்லுவது போல
48 மணிநேரம் எடுத்துக்கொள்கிறார்கள். மருத்துவமனையில் ரிசல்ட் பாசிட்டிவ் என்றால் மட்டும்தான்
சேர்ப்போம் என்கிறார்கள். இதனால் நோய்பரவும் வேகம் அதிகரித்து வருகிறது.
எஸ்கேப்பான
தனியார் மருத்துவமனைகள்
அரசு
சொல்லும் பாதுகாப்பு விதிமுறைகள், சமூக இடைவெளி ஆகியவற்றை தனியார்கள் கடைபிடிக்கவில்லை.
தேவையில்லாத வம்பு எதற்கு தனியார் மருத்துவர்கள் மருத்துவமனைகளை பூட்டிவிட்டனர். இதனால்
பெருகும் மக்களின் எண்ணிக்கையை அரசு சமாளிக்க முடியவில்லை.
சப்ஸ்டிடியூட்
இல்ல ப்ரோ!
நோயாளிகளுக்கு
பிரச்னை என்றால் டாக்டர் பார்ப்பார். ஆனால் 25 சதவீத டாக்டர்களே கோவிட் -19 பாதிப்பினால்
தவித்தால் என்ன செய்வது? அரசு இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கவில்லை. சீரியலில் அவருக்கு
பதில் இவர் என்று காட்டிவிடலாம். நிஜத்தில்? நோயுற்ற டாக்டர்க்கு பதிலாக வேறு டாக்டர்களை
அரசு கண்டறிய முடியாமல் தடுமாறி வருஇகிறது. மருத்துவர்கள் மட்டுமல்ல செவிலியர்களும்
கூட மாநிலத்தில் தேடப்பட்டு வருகிறார்கள்.
சுத்தம்
இல்லை சுகாதாரம் தொல்லை!
அரசு அமைத்துள்ள தனிமைப்படுத்தல் விடுதிகள் நிரம்பி
வழிகின்றன. கூட்டம் திருவண்ணாமலை தீபத்திற்கு செல்வது போல கும்முவதால் சுகாதாரத்தை
எங்கே பராமரிப்பது? அதிலும் சரியான உணவு வசதிகள் வேறு இல்லை. பலரும் காசு கொடுத்துதான்
உணவுகளை வாங்கி வருகிறார்கள்.
இந்தியா டுடே
கிரண் டி தாரே, அதிதிபாய், எம்.ஜி.அருண்
கருத்துகள்
கருத்துரையிடுக