நோயாளிகளை நாங்கள் தேடிச்சொன்று கொண்டிருக்கிறோம்! - சுரேஷ் கஹானி
cc |
கூடுதல் கமிஷனர் சுகாதாரம் - சுரேஷ் கஹானி
நீங்கள் கோவிட் -19 நோயாளிகளிடம் பணியாற்றி வருகிறார்கள். என்ன மாதிரியான பாதுகாப்பு விஷயங்களைக் கடைப்பிடிக்கிறீர்கள்?
துளசி, கரும் மிளகு, கிராம்பு ஆகியவற்றை சாப்பிடுகிறேன். ஏழு வாரங்களாக ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தை சாப்பிட்டுள்ளேன். குறிப்பிட்ட இடைவெளிகளில் கைகளை கழுவி வருகிறேன்.
ஜூலை மாதம் பெருந்தொற்று எப்படி இருக்கும்?
பருவகாலம் பெருந்தொற்று விவகாரத்தில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தாது என்று நினைக்கிறோம். மேலும் விரைவில் நாங்கள் பெருந்தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம்.
மகராஷ்டிரத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதில் நிறைய குழப்பம் நிலவுகிறதே ஏன்?
நாங்கள் முதலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்தான் கவனம் செலுத்தி வந்தோம். இதன் காரணமாக, இறந்துபோன கோவிட் -19 நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை கணக்கிடவில்லை. பின்னர், நாங்கள் பல்வேறு மருத்துவமனைகளிடம் நோயாளிகளின் இறப்பு பற்றிய எண்ணிக்கை கேட்டுள்ளோம். நோயாளிகளின் எண்ணிக்கையை மறைக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது.
ரெம்டெசிவிர் மருந்தை எப்படி பெறப்போகிறீர்கள்?
நாங்கள் இம்மருந்தைப் பெறுவதற்கான ஏலத்தை அறிவித்திருந்தோம். அதில் இரு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. மூன்று நாட்களில் இதற்கான முடிவை அறிவித்துவிடுவோம். நாங்கள் 15, 800 எண்ணிக்கையில் மருந்துகளை கேட்டுள்ளோம்.
வார் ரூம் வசதிகள் எப்படி உதவுகின்றன?
நோயாளிகளை மையப்படுத்திய இடத்திற்கு வரச்சொல்லாமல், வார்டு முறையில் அவர்களை அழைத்து சோதனை செய்வது எளிதாக இருக்கிறது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதற்கு பதிலாக நாங்கள் அவர்களைத் தேடி சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறோம்.
பிளாஸ்மா தானம் பெறுவது எப்படி வேகம் பிடித்திருக்கிறதா?
நாயர் மருத்துவமனையில் இருந்து இந்த வேலையை தொடங்கியுள்ளோம். இதுவரை 54 பேர் பிளாஸ்மா தானம் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பதினாறு பேர் பயன் பெற்றுள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார். கெம், சியோன் மருத்துவமனைகளில் இதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். பிளாஸ்மா தானத்தை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
மும்பை மிரர்
யோகேஷ் நாயக்
கருத்துகள்
கருத்துரையிடுக