உத்தவ் தாக்கரேவின் நோய்த்தொற்று தடுப்பு படை- இவர்கள்தான் மக்களை காக்கும் வீரர்கள்
எகனாமிக் டைம்ஸ் |
மும்பையில்
தீவிரமாக கோவிட் -19 நோய்த்தொற்று பரவி வருகிறது. இதனை சமாளிக்க முதல்வர் உத்தவ் தாக்கரே
தலைமையிலான குழுவினர் முயன்று வருகின்றனர். அவர்களது குழு உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள்
இதோ இங்கே
அஜய்
மேத்தா
தலைமை
செயலாளர்
1984ஆம்
ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர். இவர்தான் மகாராஷ்டிரத்தின் தலைமை செயலாளர். மாநிலத்தில்
பொது முடக்கத்தை அறிவித்தது, அரசு பணியாளர்களுக்கான சம்பளத்தை வெட்டியது, மருத்துவக்குழுக்களை
நிர்வாகம் செய்வது, வீடுதோறும் மதுபானங்களை கொண்டு சென்று கொடுப்பது என அனைத்து விஷயங்களையும்
முடிவு செய்து முதல்வருக்கு உதவி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதமே இவரது பணிக்காலம்
முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் முதல்வர் இவருக்கு இம்மாத ஜூன் வரையில் பணி நீட்டிப்பு
வழங்கியிருக்கிறார்.
ராஜேஸ்
தோபோ
சுகாதாரத்துறை
அமைச்சர்
மும்பையில்
மருத்துவமனையில் உள்ள நோயுற்ற அம்மாவை நலம் விசாரித்து விட்டு தனது பணிகளைத் தொடங்குகிறார்.
சமூக பொறுப்புணர்த்திட்ட நிதி மூலம் முக கவசம், பாதுகாப்பு உடைகள் வாங்கியது இவரின்
முடிவுதான். இவரது வருகைக்குப் பிறகு கோவிட் -19 நோய்த்தொற்று ஆய்வகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காரர்.
ஏக்நாத்
சிண்டே
பொதுப்பணித்துறை
இவர்
சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர். இவரது உத்தரவின் பேரில்தான் மாநிலத்திலுள்ள பல்வேறு
மருத்துவமனைகளில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டன.
அரசு மருத்துவமனைகளோடு தனியார் மருத்துவமனைகளையும் சேர்த்துக்கொண்டார். இவர் தனியாக
150 படுக்கைகளைக் கொண்ட தனி க்ளினிக் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
மனிஷா
ஹைஸ்கர்
முதன்மை
செயலாளர்
மும்பை
கார்ப்பரேஷனுக்குள் ஏப்ரல் மாதம் உள்ளே வந்தார். அதன்பிறகுதான் 1900 என்று இருந்த கோவிட்
-19 படுக்கை வசதிகள் 8 ஆயிரமாக உயர்ந்தன. 1992ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தவர், ஃபேஸ்புக்
வழியாக எத்தனை படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று மக்களுக்கு தகவல்களை தந்துகொண்டு
இருக்கிறார்.
ஆர்.ஏ.
ராஜீவ்
மும்பை
மாநகர கமிஷனர்
1987ஆம்ஆண்டு
குடிமைப்பணி பயிற்சிகளை நிறைவு செய்தவர் இவர். பதினாறு நாட்களில் 1008 படுக்கைகளை தயார்
செய்து அதில் பாதிக்கும் மேல் ஆக்சிஜன் சிலிண்டர்களை தயார் செய்து வைத்து காரியக்காரர்.
இப்போது நோயாளிகளுக்கான வெண்டிலேட்டர் தயார் செய்து வைப்பதற்கான பணிகளை முடுக்கி விட்டு
வருகிறார்.
அனில்
பாரப்
போக்குவரத்துத்துறை
அமைச்சர்
சோனு
சூட் பாஜகவின் ஆள் என்று உத்தவ் தாக்கரேவின் இதழ்கள் கரித்துக்கொட்டின. ஆனாலும் பின்னர்
சோனு சூட் உத்தவ் தாக்கரேவை சந்தித்த உடனே அனைத்தும் சரியானது. உத்தவ் தாக்கரேவின்
தளபதி அனில் பாரப். இவர்தான் சோனு சூட்டுக்கு செம டஃப் கொடுத்து ஐந்து லட்சம் தொழிலாளர்களை ஷிராமிக் ரயில்களிலிருந்து
கூட்டி வந்து மாநிலத்திற்கு சேர்த்தவர். அதோடு ராஜஸ்தானில் தடுமாறி நின்ற மகாராஷ்டிர
மாணவர்களுக்கு ஊர் வந்து சேர வாகனங்களை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக