கபடி வீரரின் பின்னாலுள்ள மர்மம் - வீடெவடு
வீடெவடு
– தெலுங்கு
இயக்கம்
தத்தினேனி சத்யா
ஒளிப்பதிவு
பினேந்திர மேனன்
இசை
தமன்
தன்
பெற்றோரை சூழ்ச்சியாக கொன்ற வளர்ப்பு தந்தையை அவரது மகள் பழிவாங்கும் கதை.
சச்சின்
ஜோஷி(சத்யா), கோவாவில் தன் மனைவியை தேனிலவு சென்றபோது துப்பாக்கியில் சுட்டு கொல்கிறார்.
கொலை செய்துவிட்டு ஓடும்போது அவரை போலீசார்
பிடிக்கின்றனர். இந்த வழக்கில் முக்கியமான பிரச்னை, இறந்த பெண்ணின் உடல் கிடைக்கமாட்டேன்கிறது. ஆனாலும்
சச்சின் மேல் உறுதியாக குற்றம் செய்ததாக ஆவணப்பட, அவரை கோவாவில் உள்ள சிறைக்கு அனுப்புகிறார்கள்.
அங்கு கபடி போட்டியில் அவரால் இறந்துபோனவரின் அண்ணன் ஜெயிலராக இருக்கிறார். அவர் சச்சினைக்
கொல்ல திட்டம் வகுக்கிறார். இந்த நேரத்தில் பிரகாஷ் என்ற போலீஸ் அதிகாரி இந்த வழக்கை
துப்பறிகிறார். உண்மை என்னவென்று அவர் கண்டறிந்தாரா என்பதுதான் மீதிக் கதை.
படத்தில்
சச்சின் படு இறுக்கமாக இருக்கிறார். காதல், கோபம், என அனைத்திலும் கான்க்ரீட் உறுதியை
முகத்தில் காட்டுகிறார். இதனால் அவர் நடிக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. கண்ணாடி
போட்டால் ஸ்ருதி, போடவில்லையெனெறால் கேத்ரீன் எனும் லாஜிக் மிரட்டுகிறதே இயக்குநர்
சார். கதையின் பலவீனமான பகுதி இது. மற்றபடி பாடல்களுக்கு தமன் என்ன செய்யமுடியுமோ அதனை
செய்திருக்கிறார்.
படத்தின்
இறுதி ட்விஸ்ட்தான் அம்சமாக படத்தைத் தாங்குகிறது. கிஷோருக்கு பயங்கர பில்டப்பை உருவாக்கினாலும்
வரும் காட்சிகளிலெல்லாம் ஒரு ரன்னுக்கு ஓட வைத்துவிட்டதாக அவரது முகம் குறிப்பு காட்டுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக