சினிமாவில் ஜெயிக்க முயலும் உதவி இயக்குநரின் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் ரவுடி! - நேனின்தே 2008
நேனின்தே
இயக்கம்: பூரி ஜெகன்நாத்
இசை: சக்ரி
ஒளிப்பதிவு: ஷியாம் கே நாயுடு
சினிமா துறையில் உதவி இயக்குநர்கள் எப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு
வருகிறார்கள் என்பதை முடிந்தவரை இயல்பாக சொல்லியிருக்கிறார்கள்.
ஆஹா
ரவிதேஜாவின் இயல்பான நடிப்பும், கூர்மையான வசன உச்சரிப்பும்
பிரமாதமாக இருக்கின்றன. தன் மீது வில்லன் எச்சிலை துப்பினால் கூட அதை துடைத்துவிட்டு
அமைதியாக செல்லும் காட்சி போதும் அவரின் நடிப்பை பற்றி சிலாகிக்க....
படத்தின் வசனங்கள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. காதலியிடம் ரவிதேஜா
ஏன் திருமணம் செய்யமுடியாது என்று கூறும் காட்சி, தெருவில் வில்லன்களிடம் பேசுவது,
முத்தாய்ப்பாக அமைந்த இறுதிக்காட்சி வசனம் என பிரமாதப்படுத்தியிருக்கிறார். ரவிதேஜாவின்
அம்மாவாக வரும் ரமா பிரபா, இட்லி விஸ்வநாத் பிரமானந்தம் என நிறைய கதாபாத்திரங்கள் இயல்பாக
உருவாக்கப்பட்டுள்ளன. சியா, ஆழமான தொப்புளைக்
காட்டி கவர்ச்சி காட்டுகிறார். அவரிடம் அதைத்தாண்டி எதிர்பார்க்க ஒன்றுமில்லை.
உண்மையில் ரவிதேஜா போன்ற ஒரு மாஸ் நடிகரை வைத்து இயல்பான
எதார்த்தமான படம் எடுக்க செம தில் வேண்டும். இயக்குநர் அதை சாதித்திருக்கிறார். அதனாலோ
என்னவோ படம் ஓடவில்லை. அதனால் என்ன படம் பார்ப்பவர்களுக்கு அத்துறை சார்ந்தவர்களின்
பிரச்னை என்ன, ஊடகங்கள் எப்படி அவர்களை பார்க்கிறார்கள், ரசிகர்களின் இயல்பு, அவர்களின்
குடும்பம் என நிறைய விஷயங்களை நேர்மையாக பேசியிருக்கிறார்கள். இந்த விஷயங்களுக்காகவே
படத்தை பார்க்கலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக