இடுகைகள்

சிறுவன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தையின் அறிகுறிகள்

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பாலியல் ரீதியான வன்முறை என்றால் என்ன? சிறுவன், சிறுமியை ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துவதை பாலியல் வன்முறை, சுரண்டல் என்று கூறலாம். முறையாக திருமணம் செய்யும் அல்லது வாக்களிக்கும் வயதை எட்டாதவர்கள். இவர்களை இளையோர் என்று கூறலாம். பாலியல் ரீதியான வன்முறையை சிறுவன், சிறுமிக்கு அறிமுகமானவர்கள் தொடங்கி அறிமுகமில்லாத வழிப்போக்கர்கள் வரை வாய்ப்பு கிடைத்தால் செய்கிறார்கள். பொதுவாக பலவீனமானவர்களைக்  கண்டால் அவர்களை மேலாதிக்கம் செய்து சுரண்டுவது மனிதர்களுக்கு பிடித்தமானது. உடல் ரீதியாக, உள்ள ரீதியாகவும் ஒருவரை பாலியல் வன்முறை பாதிக்கிறது.  பாலியல் சுரண்டல் என்பது வன்முறையை அடிப்படையாக கொண்டதா? அப்படி இருக்க வேண்டியதில்லை. இன்றைக்கு ஆபாச வலைத்தளங்களில் பெண்ணை உறவு கொள்வதாக காட்டும்போது கூட அவளின் கழுத்தை நெரித்தபடியே உறவு கொள்கிறார்கள். அது படப்பிடிப்பு, நடிகர்களை வைத்து ஆபாச படம் எடுக்கப்படுகிறது ஆனால் உண்மையில் ஒருவர் இதை முயன்றால் என்னாகும்? சம்பவ இடத்திலேயே ஒருவர் மூச்சு திணறி இறந்துவிடுவார். பாலியல் ரீதியான சுரண்டல் பல்வேறு திசை ...

சிறுவயது குற்றவாளிகளை அடையாளம் கண்டு தடுப்பது எளியது அல்ல!

படம்
  அசுர குலம் 5 மனமென்னும் இருட்குகை 1.0   குழந்தைகள் செய்யும் குறும்புகளுக்கு எல்லாம் இப்படி பெயர் வைப்பது நல்லதா என சிலர் நினைக்கலாம். ஆனால் இதில் பெற்றோரின் பங்கும் உண்டு. அவர்கள் குழந்தைகளை எந்த மாதிரியான சூழலில் வளர்க்கிறார்கள். அதன் மூலம்   அவர்களின் மனம் எப்படி விளைகிறது என்பதன் அடிப்படையில்தான் அறிகுறிகளைப் பார்க்கவேண்டும். உளவியலாளர்கள் சிறுவர்களை ஆராய்ந்தபோது பதிமூன்று வயது முதல் பதினெட்டு வயது வரை சோதித்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பலரும் வயது வந்தவர்களைப் போன்ற தன்மையில் இருந்தனர்.   சைக்கோபதி செக்லிஸ்டில் சிறுவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தனர். இளைஞர், வாலிபர் ஆகியோரிடம் அவர்களின் மனநிலை பற்றி பேசும்போது தங்களை தற்காத்துக்கொள்ள முனைவார்கள். அந்த இயல்பு சிறுவர்களிடம் இல்லை என்பதுதான் மகிழ்ச்சியான ஒரே விஷயம். தன்னிடமுள்ள வன்முறையான குணத்தை பற்றி வெளிப்படையாக பகிர்ந்துகொண்டனர். அதில் ஒரு சிறுவன், எனக்கு இப்படி இருப்பது பிடித்திருக்கிறது. நான் ஏதேனும் பிரச்னையில் சிக்கிக் கொள்ளும்போது பெற்றோர் அதிகம் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு நல்ல...

டென்னிசியிலுள்ள ஆற்றைப் பாதுகாக்கும் சிறுவன்! - கேஷ் டேனியல்ஸ்

படம்
  ஆற்றைப் பாதுகாக்கும் சிறுவனின் தன்னார்வம்!  அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் அமைந்துள்ளது சட்டனூகா என்ற நகரம். இங்குதான், கேஷ் டேனியல்ஸ் என்ற சிறுவன், தன் பெற்றோரோடு வாழ்கிறான். இவன், வாரம்தோறும் வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றுக்குச் சென்று, அங்கு மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்வது வழக்கம். தூய்மைப் பணிகளைச் செய்யும்போது, கிடைக்கும் வினோதமான பொருட்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறான்.  ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் தனது வயதையொத்த நண்பர்களையும் இணைத்துக் கொண்டுள்ளான். இதுவரை, 1000 கிலோவுக்கு அதிகமான கழிவுகளை அகற்றியுள்ளான் டேனியல்ஸ். ஆற்றில் குப்பையாக வருபவற்றில் அதிகம் குளிர்பான கேன்களே அதிகம். இந்த வகையில் வாரத்திற்கு ஆயிரம் கேன்களை அகற்றுகிறார்கள்.  கடந்த ஜனவரி மாதம், டேனியல்ஸ் தனது தோழி எல்லா கிரேஸூடன் சேர்ந்து கிளீன்அப் கிட்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளான்.  இதில் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் சேர்ந்துகொள்ளலாம். இவர்கள், தங்களது பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை பெருமளவு அகற்ற வேண்டும் என்பதே அமைப்பின் லட்சியம்.  ஆழ்கடலில் நீச்சல...