இடுகைகள்

மின் வாகனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டெஸ்லா பைல்ஸ் - ஆட்டோபைலட் முறையில் நடக்கும் எண்ணற்ற விபத்துகள், மரணங்கள்

படம்
 டெஸ்லா பைல்ஸ் - அதிகரிக்கும் கார் விபத்துகள் பாசிச இந்து மதவாதிகள் முஸ்லீம் தீவிரவாதிகள் பற்றி, அல்லது இயக்கங்கள் பற்றி காசு கொடுத்து எடுத்த வட இந்திய திரைப்படத்தின் பெயரல்ல இது. டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கு கார்கள் பற்றிய 23 ஆயிரம் ரகசிய ஆவணங்களை தன்னார்வலர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டார்.அதுதொடர்பாக கார்டியன் நாளிதழ் விசாரணையைத் தொடங்கி செய்திகளை வெளியிட்டு வருகிறது. இப்போது நாம் எழுதுவது அதன் தமிழாக்கம்தான்.  டெஸ்லா தொடங்கப்பட்டது தானியங்கு முறையில் காரை ஓட்டுவதை சாதிப்போம் என்று சொல்லித்தான். காரின் மாடல்கள் பாரம்பரியா போர்டு, ஜெனரல் மோட்டார்களை விட சிறப்பாக இருந்தன. டெஸ்லாவின் சிறப்பு, மின் வாகனம், அதற்கான பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் நிலையங்களையும் அவர் வலைப்பின்னலாக உருவாக்கி வைத்திருந்தார். இதனால்தான் டெஸ்லா வெற்றி பெற்றது. எலன் மஸ்க், குடியரசு கட்சிக்கு நிதியளித்து வெற்றிபெறச்செய்தார். அமைச்சர் பதவியைப் பிடித்தார். நாஜி வணக்கம் வைத்தார். பிறகு இப்போது அமைச்சர் பதவியை விட்டுவிட்டு அமெரிக்கன் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.  2018ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்...

தலைவர், நம்பிக்கைக்குரியவராக தவறுகளை ஒப்புக்கொண்டு அதிலிருந்து பாடம் கற்பவராக இருக்கவேண்டும்!

படம்
        பில் ஃபோர்ட் எக்சிகியூட்டிவ் சேர்மன்,போர்ட்மோட்டார் கோ. நீங்கள் நிறைய நிறுவனத் தலைவர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன? நீங்கள் நம்பும் விஷயங்களை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்ள வேண்டும். செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு, அதிலிருந்து பாடங்களைக் கற்க தயங்கவே கூடாது. சிறந்த தலைவராக இருக்க இந்த அம்சங்கள் முக்கியம். மின்வாகனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதில் நிறுவனத்திற்கு உள்ள எதிர்காலம், போட்டி ஆகியவற்றைப் பற்றி கூறுங்கள். மின்வாகனங்களை வாங்குபவர்கள், இன்னொரு மின்வாகனத்தை வாங்கவேண்டுமென நினைக்கிறார்கள், இதற்கான சார்ஜிங் மையங்கள் கூடும்போது, கார்களின் விலை குறையலாம். நாம் சில விஷயங்களை திட்டமிட்டு இயங்கலாம். ஆனால் நிறைவேறும் காலத்தை உறுதியாக கூற முடியாது. நம் அனைவரிடமும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மின்வாகன விற்பனை நிறுவனமாக உள்ளோம். கலப்பு வாகனங்கள், பெட்ரோல், டீசல் வாகனங்களையும் கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். மின்வாகனங்கள் தொடர்பான அரசியல் விவாதங்களை...

பெண்களை முன்னேற்றும் காய்கறி டெலிவரி நிறுவனம்- வீல்சிட்டி

படம்
  நடுவில் இருப்பவர் இயக்குநர் செல்வம் விஎம்எஸ் செல்வம் விஎம்எஸ் நிறுவனர், இயக்குநர் வீலோசிட்டி   வீலோசிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகளை விற்கும் நிறுவனம். இதன் தனிச்சிறப்பு, காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்கள் உள்ளூரிலுள்ள பெண்கள் என்பதுதான். இவர்கள் காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கும் ஆட்டோ, காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் குளிர்பதன வசதி கொண்டது. அது மின்வாகனம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற செய்தி. ஆர்டர்களை டெலிவரி செய்யும் பெண்களின் போனில் வீலோசிட்டி ஆப் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த ஆப்பில், காய்கறிகளின் புத்துணர்ச்சி, தட்பவெப்பம், வண்டியின் வேகம் ஆகிய நிலைகளை பார்த்து அதற்கேற்ப அவற்றை டெலிவரி செய்ய முடியும்.   இந்த வகையில் பெண்களுக்கு ஒருநாளுக்கு 800- 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இதற்கு அவர்கள் ஆறு மணிநேரம் வேலை செய்தால் போதுமானது. விவசாய பொருட்களை விற்கும் ஐடியா எப்படி வந்தது?   ‘’’2027ஆம் ஆண்டு காய்கறி சந்தை மதிப்பு 136 பில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படி விற்பனை அதிகரித்தாலும், அதை உற்பத்தி ...