இடுகைகள்

குற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிக வாடகை தாய்மை - புலனாய்வு அறிக்கை

படம்
www.occrp.org வாடகைத் தாய்மை நிறுவனத்தின் சரிவு: வாடகைத் தாய்மார்கள் மற்றும் குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கனவுகளையும் பணத்தையும் காவுகொண்டது. World Center of Baby நிறுவனத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நம்பகத்தன்மையுடன் ஒரு செய்தியாளருடன் பேச விரும்பினால், தயவுசெய்து OCCRP-ஐ [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரு தடையற்ற பயணம் என்பதே இந்த நிறுவனத்தின் வாக்குறுதியாகும்.  உக்ரைன், அல்பேனியா, ஜோர்ஜியா, சைப்ரஸ் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் சேவைகளை விளம்பரப்படுத்திய வணிக வாடகைத் தாய்மை நிறுவனமான 'World Center of Baby', குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்களை வாடகைத் தாய்மாருடன் இணைத்து, சிக்கலான மருத்துவ மற்றும் சட்டப் செயல்முறைகளை ஒருங்கிணைத்துத் தரும் 'ஒரே இடத்தில் அனைத்து சேவைகளும்' (one-stop shop) வழங்கும் நிறுவனமாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது.  இந்த நிறுவனத்தின் சில வாடகைத் தாய்மை தொகுப்புகள் $100,000-க்கும் மேல் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தன. *கடன்: ஜேம்ஸ் ஓ'பிரையன்/OCCR...

சிந்தை மயங்கியதோ?

மக்களே! கேளுங்கள் உங்கள் தவறை, தலைவன் தேர்வில் மயங்கி நின்றீரே! சுயநல சிந்தையில் சுழன்று சுழன்று, துயர்த்திரள் கடலில் தோய்ந்துவிட்டீரே! அறிவிலி அரசனை அணைத்து கொண்டீர், அவனோ அரண்மனையில் அறிவை விற்றான்! வறுமை வந்து வாயிலில் நின்றது, வாழ்வில் வெறுமை மிஞ்சி நின்றதே! கனவு கண்டீர் கம்பீரமாய், கண்மூடி காட்டும் வழியில் சென்றீர்! இனிவரும் காலம் இதை உணரும், இடர்ப்பட்ட மக்கள் இதை மறக்காதீர்! தலைவன் அல்ல தலையெழுத்து உங்கள், தவறே உங்களை தள்ளியது இங்கே! எதிர்காலம் இனி எச்சரிக்கையுடன், எண்ணி மகிழ்வீர் எழுச்சி பெறுவீர்! டீப்சீக்

நீங்களே போலீஸ்தான்!

"Know Your Neighbour" (KYN) என்பது **கொல்கத்தாவில் (மேற்கு வங்காளம்)** செயல்படும் ஒரு முக்கியமான **குடிமக்கள் இயக்கம் (Citizen's Initiative)** ஆகும். இது பொதுவாக காவல்துறை அல்லது அரசாங்கத்தால் நடத்தப்படுவதை விட, **பொதுமக்களின் ஒத்துழைப்போடு கூடிய சமூக பாதுகாப்பு திட்டம்** ஆகும். இந்த திட்டத்தின் விரிவான விளக்கம் இங்கே: --- ### 1. தொடக்க காலம் மற்றும் பின்னணி - **தொடக்கம்:** 2007-2008 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா காவல்துறையின் (Kolkata Police) உதவியுடன் தொடங்கப்பட்டது. - **காரணம்:** கொல்கத்தா நகரில் நடைபெற்று வந்த சிறு குற்றங்கள் (பை பறிப்பு, திருட்டு, பெண்களுக்கு எதிரான தொல்லைகள்) மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டது. --- ### 2. முக்கிய நோக்கம் (Objectives) - அக்கம் பக்கத்தினரை (Neighbours) ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்துதல். - சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகளை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல். - சமூக உளவுத்துறை (Community Policing) மூலம் குற்றங்களை தடுப்பது. - வயதானவர்கள், தனியாக வீட்...

அதிமேதாவியின் பார்வையில் உலகம்!

படம்
இந்த நாயகன், 12 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டு கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கப்பட்டவன். பின்னர், போலீசாரால் மீட்கப்படுகிறான். மெல்ல உலகை புரிந்துகொண்டு சாதுரியமாக வாழத் தொடங்குகிறான். இதற்கு அவன் 12 ஆண்டுகளாக படித்த ஏராளமான நூல்கள் உதவுகின்றன. இக்கொரிய காமிக்ஸில் குழந்தை கடத்தலுக்கு எதிராக நாயகன் போராடுகிறான். நாயகன் வூஜின், ஆளுமை பிறழ்வு கொண்டவன். ஒருவன் இரக்கமானவன். இன்னொருவன் இரக்கமில்லாதவன். குற்றவாளிகளை தண்டிப்பவன். தனது அறிவை பயன்படுத்தி ஜிசாட் தேர்வில் வெல்கிறான். பல்கலையில் வணிக மேலாண்மையில் சேர்கிறான். யூட்யூப்பில் கடத்தப்பட்டு உதவிகோரும் இளம்பெண் பற்றி அதிகாரி கிம்முக்கு தகவல் சொல்கிறான். அவர் அதை விசாரித்து பார்த்து உண்மையை அறிகிறார். அச்சம்பவம் தொடங்கி வூஜின் சிக்கலான குற்ற வழக்குகளில் உதவி செய்யத் தொடங்குகிறான். பதிலுக்கு உணவும், பணமும் கிடைக்கிறது. பல்கலை நண்பனின் உறவினருக்கு உணவக வணிகத்தில் உதவி தன்னுடைய புத்திசாலித்தனத்தை சோதித்து பார்க்கிறான். இதற்காக தனது கதையை பத்திரிகைகளில் வருமாறு செய்கிறான். நாயகனின் நோக்கம், எளிமையாக சாதாரணமாக வாழ்வது.... இதை அவன் கூறுவ...

யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன் - வங்கி சொன்ன அறிவுரை - உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்...

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன்  உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்... ஒன்றாக சேர்ந்து நாம்.... என தலைப்பு கொண்டுள்ள வங்கிதான் நான் பத்தாண்டுகளாக கணக்கு வைத்துள்ளது. தொடங்கியபோது எப்படியோ இன்றுவரை அப்படியேதான் உள்ளது. மாற்றம் என்னவென்றால், நிறைய கட்டுப்பாடுகள் பெருகியுள்ளன. பணம் பிடுங்குதலையும் நாற்காலியில் அமர்ந்துகொண்டே நிதானமாக கணினியை தட்டி செய்கிறார்கள். அதையும் கூட 120 ரூபாயை இழந்துதான் கற்றுக்கொண்டேன். பொதுவாக வங்கிகளுக்கு புகார் அளித்து அதன் வழியாக இழந்த தொகையை பெறுவது பிரம்ம பிரயத்தன முயற்சி. பெரும்பாலும் காசு கிடைக்காது. ஏன் காசு கிடைக்காது என்பதற்கு ஈகுவிட்டி பங்கு விளம்பரம் போது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என வேகமாக இரண்டு பத்தியை ஒரு குரல் படிக்குமே... அந்த ரீதியில் விதிகளை காரணம் காட்டுவார்கள்.  வங்கியில் இருந்து ஏடிஎம் வழியாக பணம் பெறுவதைப் பற்றியும் அதன் கட்டுப்பாடுகளையும் ஏற்கெனவே கூறிவிட்டேன். ஏடிஎம்மில் பணம் எடுக்க ஒன்றாக சேர்ந்து... வங்கி மாதம் ஐந்து முறை இலவச வாய்ப்புகளை தருகிறது. அதைப் பயன்படுத்தி ஒருவர் தினசரி 25 ஆயிரம் என்ற வகையில் ஒரு லட்சத்து...

ஓவியனின் பார்வையில் குற்ற உலகம்!

படம்
             அண்டர் தி ஸ்கின் சீன தொடர் 24 எபிசோடுகள மகத்தான திறமையான ஓவியன். கல்லூரி வயதில் போலீஸ்காரர் கொல்லப்படுவதற்கான ஓவியத்தை வரைந்து கொடுத்து சர்ச்சையில் சிக்குகிறான். நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றாலும் கொலைக்கும்பலுக்கு மறைமுகமாக போர்ட்ரைட் ஓவியம் வரைந்து கொடுத்தது, அவனுக்கு எதிர்பார்த்திராத துயரத்தை அளிக்கிறது. அதுவரையில் அவன் கண்காட்சிக்கென வரைந்த ஓவியங்களைக் கூட தீவைத்து எரித்துவிட்டு, காவல்துறையில் பணிக்கு சேர்கிறான். அங்கு ஸ்கெட்ச் ஆர்டிஸ்டாக வேலை செய்கிறான். தொடக்கத்தில் கொலைக்கும்பலுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்து கொடுத்தான் என்பதற்காக கேப்டன் டுசெங் அவனை மதிப்பதில்லை. ஆனால் கொலை வழக்குகளை கண்டுபிடிப்பதில் சென் யிக்கு உள்ள புத்திசாலித்தனம், ஈடுபாடு பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. பல்வேறு வழக்குகளோடு, தனது வாழ்க்கையை மாற்றிப்போட்ட கேப்டன் லீ வெய் வழக்கிலுள்ள குற்றவாளிகளை எப்படி பிடித்தான் என்பதுதான் கதை. தொடரின் நாயகன் ஓவியன் என்பதால், வழக்குகள் அனைத்தும் ஓவியம் சார்ந்த அடிப்படையைக் கொண்டுள்ளன. அதாவது கொலையாளி உள் அலங்கார வடிவமைப்பாளர், க...

கட்டற்ற மென்பொருட்களின் பயன் என்ன?

படம்
          அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி கணினி வைரஸ் எப்படி பரவுகிறது? கணியம் சீனிவாசன் போல கோடிங் அறிவுகொண்ட நபர்கள், உலகிற்கு தன்னை நிரூபிக்க நினைத்து எழுதும் புரோகிராம்கள்தான் வைரஸ்கள். சீனி, கிடைக்கும் ஓய்வு நேரத்தை தமிழை மேம்படுத்த கணித்தமிழுக்காக உழைக்கிறார். வைரஸ் உருவாக்கும் கோடர்கள், சுயநலனுக்காக வேலை செய்கிறார்கள். இதில் லாபத்தை விட அழிவின் சந்தோஷமே அதிகம். விஷமமாக எழுதி அனுப்பப்படும் புரோகிராம்கள் மூலம் ஒருவரை உளவு பார்க்கலாம், அவரின் மின்னஞ்சலை செய்தியை படிக்கலாம். அழிக்கலாம். கணினியை முழுமையாக கட்டுப்படுத்தக்கூட செய்யலாம். இப்போது டிஜிடல் அரஸ்ட் என்று செய்திகள் கூட வருகிறதே அந்தளவுக்கு வேலைகளை செய்யலாம். 2000ஆம் ஆண்டில் ஐலவ்யூ என்ற வைரஸ் கணினிகளில் பரவி, ஐந்து பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார சேதத்தை விளைவித்தது. வைரஸ்களைக் கட்டுப்படுத்த இலவச, கட்டண சேவைகள் உள்ளன. ஒருகட்டத்தில ஆன்டி வைரஸ் நிறுவனங்களே ஆபத்தானவை என்று கூட பிரசாரம் செய்யத் தொடங்கினர். இன்று உருவாக்கப்படுகிற வைரஸ்கள், பணம் பறிக்க பயன்படுகின்றன. தகவல்களை திருடி கருப்பு இணையத்தில் விற்கிற...

நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!

படம்
                நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!  அன்னா ஹசாரே உலகில் அணுக முடியாத அரசுகளின் அணுகுமுறையின்மீது  நேர்மறையான தனது நடவடிக்கைகளின் மூலம் மாற்றத்தை தூண்டியுள்ளார். இளைய தலைமுறை மூலம் மாற்றத்திற்கான வழியைக் கண்டறியும் ஆர்வத்திற்கு ஒளிபாய்ச்சியுள்ளார். இந்தியாவின் தரமான மதிப்புகளை மீண்டும் புதுப்பிக்க முயற்சித்துள்ளார். ஆம், நம்மில் பலரும் ஊழலை அமைப்பு (அ) வேறு வகையில் தூண்டப்பட்டு செய்தாலும் நம்மில் ஒரு பாகம் சரியானதாகவே இன்றும் மாறாமல் இருக்கிறது. அதை வலுபெறச் செய்தல் வேண்டும். ஜன்லோக்பால் மசோதா என்பதைத்தாண்டி அன்னா குழுவினரது நீதிக்கான போராட்டம் என்பதை சமூகத்திற்கான முக்கியமான பங்களிப்பு என்று கூறமுடியும்.  இந்த சாதனைகளுக்கும் விலை உண்டு. நீண்டகாலமாக தீர்க்கப்படாத பல்வேறு குழப்பங்களைப் பார்க்கிறோம். அழகற்ற, மகிழ்ச்சியற்ற விஷயங்கள் பிடிவாதம், கர்வம், விட்டுக்கொடுக்காதவை என பொதுமக்களுக்கான பார்வையில் இவை தெரிகிறது. கருத்தியல் உலகில் மக்களுக்கு பொருத்தமான காரணத்தோடு தனது பதவி (அ) அதிகாரம் கொண்டு சரியானதை செய்ய...

விளம்பரம் - ஆரா பிரஸ் நூல்கள்

படம்
          ஆரா பிரஸ் நூல்கள் 1.ஜனநாயக இந்தியா தமிழில் நேருவின் உரைகள் ச.அன்பரசு-வின்சென்ட் காபோ 2. நெ.1 சமூக தொழில் அதிபர் சமூகத்தை மேம்படுத்தும்  தொழில்களை தொடங்குவது பற்றிய நூல் அன்பரசு சண்முகம் 3. நட்பதிகாரம் புனைவு கடிதங்கள் அரசு கார்த்திக் - கா சி வின்சென்ட் 4. பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் ஹூவாய் (சீனா) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வரலாறு அன்பரசு சண்முகம் 5. அசுரகுலம் -1(தொடர்வரிசை நூல்) கொலைகாரர்களின் கதை வின்சென்ட் காபோ 6. மயிலாப்பூர் டைம்ஸ் அனுபவக் கட்டுரைகள் லாய்ட்டர் லூன் 7. உதயமாகும் பேரரசன் ஆனந்த் மகிந்திராவின் வெற்றிக்கதை அன்பரசு சண்முகம் 8. நீரெல்லாம் கங்கை கடிதங்கள் அன்பரசு 9. பன் பட்டர் ஜாம் அரசியல் பகடி விக்டர் காமெஸி - ரோனி 10. அசுரகுலம் -2 குற்றங்களின் முன்கதை வின்சென்ட் காபோ 11. ஒவ்வாமை ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு நூல் அரசு கார்த்திக் 12. டியர் ரிப்போர்டர் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூல் அன்பரசு சண்முகம் 13. பேராசை பூதம் (இரண்டு பகுதிகள்) பங்குச்சந்தையில் அதானி செய்த விதிமீறல்களைப் பற்றி விவரிக்கும் நூல் முருகானந்தம் ...

தடய அறிவியல் விசாரணை செய்ய போதுமான பணியாளர்கள், கருவிகள் உள்ளனவா? - தென்னிந்தியாவில் ஓர் அலசல்

படம்
              தடய அறிவியல் பரிசோதனை இதைப்பற்றி அறிய நீங்கள் கொரியா, ஜப்பான், சீன சீரியல்களைப் பார்த்திருந்தால் கூட போதுமானது. மலையாள மொழியில் கூட நிறைய திரைப்படங்கள் தடய அறிவியலை மையப்படுத்தி வந்திருக்கின்றன. பார்க்கவில்லை என்றாலும் கூட குற்றமில்லை. கொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை அறிவியல் முறைப்படி சோதிப்பதே தடய அறிவியல் பரிசோதனை அல்லது விசாரணை என்று கூறலாம். ஓடிடி தளங்களில் ஏராளமான படங்கள் தடய அறிவியல் சார்ந்து வெளிவந்துள்ளன. அதைப் பார்த்தால் ஓரளவுக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம். பென்ஸ் அல்லது போர்ச் காரை ஒருவர் வேகமாக ஓட்டிச்சென்று சாலையில் செல்லும் மக்கள் மீது ஏற்றிக்கொல்கிறார். மக்கள் இறப்பது, அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா என்பதல்ல விஷயம். அது, ஒருவர் வசதியானவரா, ஏழையா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். தடய அறிவியலில் பார்க்கவேண்டியது ஓட்டுநரின் நிலையை... வாகன விபத்து குற்றவழக்காக பதிவானபிறகு, வாகனம் ஒட்டியவர் என்ன நிலையில் இருந்தார், மது அருந்தியிருந்தாரா, இல்லையா என ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை எடுத்து சோதிப்பார்கள். கைரேகை, டிஎன்...

இந்திய அரசின் ஓய்வூதிய நிதிச்சுமையைக் குறைக்கும் அக்னிபாத் திட்டம்!

படம்
  இ்ந்திய அரசின் அக்னிபாத் திட்டம் - எதிர்ப்பு ஏன்? 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அக்னிபாத் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. அறிவிக்கப்பட்ட காலம் தொடங்கி, அத்திட்டம் எதிர்க்கட்சிகள்,  முன்னாள் ராணுவ வீரர்கள் என கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி அக்னிபாத் திட்டத்தை எதி்ர்த்து பிரசாரம் செய்தது. இங்கெல்லாம் பாஜக நிறைய இடங்களை இழந்ததற்கு அத்திட்டம் கூட காரணமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் பேசப்பட்டு வருகிறது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத சிறுபான்மை பாஜக அரசுக்கு, ஐக்கிய ஐனதாதளத்தின் நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோர் அக்னிபாத் திட்டத்தை மறுசீராய்வு செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். கடந்த இருமுறை பெரும்பான்மை பெற்ற பாஜக அரசு இம்முறை நினைத்த வெற்றியை பெறமுடியாமல் பின்தங்கியுள்ளது. இந்த நிலைமையில் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று இணக்கமாக செல்லுமா என்ற சில மாதங்களில் தெரிந்துவிடும். அக்னிபாத் திட்டத்தைப் பற்றி பார்ப்போம...