நேரடி சாட்சியத்தில் ஏற்படும் பிழைகளை கண்டறிந்த உளவியலாளர்!

 




ஒரு மோசமான விபத்து நடைபெற்றிருக்கும். அதை பல்லாண்டுகளுக்கு பிறகும் சம்பவ இடத்தில் இருப்பவர் நினைவுகூரலாம்.அதற்கு என்ன காரணமாக இருக்கும்? அந்த விபத்தில் அவருக்கு சம்பந்தமான யாரோ ஒருவர் மாட்டிக்கொண்டு இறந்திருப்பார். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அதி்ர்ச்சியை விபத்து சம்பவம் உருவாக்கியிருக்கும். காலப்போக்கில், இதை ஒருவர்  எத்தனை முறை மீள கூறினாலும் அதில் தகவல்கள் மாறிப்போயிருக்க வாய்ப்பகள் உள்ளது. குறிப்பாக எதனால் தூண்டப்பட்டு விபத்து சம்பவத்தை ஒருவர் நினைவுகூருகிறார் என்பது முக்கியம். 


கார்கள் இரண்டு சாலையில் எதிரெதிரே வருகின்றன. திடீரென மோதிக்கொள்கின்றன. இதைப் பார்த்தவர்களிடம் கார்களின் வேகம், உடைந்த பொருட்கள், அங்கு சுற்றியிருந்த பொருட்கள் பற்றி கேள்வி கேட்டால் பலரும் பலவிதமாக பதில்களை கூறுவார்கள். இதிலுள்ள உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம். இதைத்தான் உளவியலாளர் ஆய்வு செய்து கண்டுபிடித்து கூறினார். இதற்கான அவசியம் என்ன வந்தது? நீதியைக் காப்பாற்றத்தான். 


அப்போது நீதிமன்றங்களில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகம் வந்தன. இதில் நேரடி சாட்சிகள் முக்கியப் பங்கு வகித்தனர். இவர்கள் கூறுவது உண்மையா என்பதை லாஃப்டஸ் ஆராய்ந்தார். நேரடி சாட்சிகள்  சொல்லும் தவறான தகவல்களால் நீதித்துறை வழங்கும் தீர்ப்புகள் தவறாக போக வாய்ப்புள்ளது என்று கூறினார். 


1944ஆம் ஆண்டு லாஃப்டஸ் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதல் பட்டம் பெற்றார். அவருக்கு அப்போது பள்ளி ஆசிரியர் ஆவதுதான் நோக்கமாக இருந்தது. பிறகுதான் உளவியல் பக்கம் மனம் திரும்பியது.  1970ஆம் ஆண்டு,ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் உளவியல் பட்டம் பெற்றார். வாஷிங்க்டன் பல்கலையில் இருபத்து ஒன்பது ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். நீண்டகால நினைவுகள் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான உளவியலாளராக மாறினார். 2002ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 


முக்கிய படைப்புகள் 


1979 - ஐவிட்னஸ் டெஸ்டிமோனி

1991 - விட்னஸ் ஃபார் தி டிபன்ஸ்

1994 - தி மித் ஆப் ரெப்ரஸ்ட் மெமரி


மூலநூல் - சைக்காலஜி - டிகே புக்ஸ் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்