ஒருவரின் புத்திசாலித்தனம் மரபணு அல்லது கல்வி மூலம் தீர்மானிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய ஆய்வு!
ஒருவர் பிறக்கும்போது மேதாவியாக இருக்கிறாரா, பிறந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு வஸ்தாது ஆகிறாரா என்ற பஞ்சாயத்து இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. 1900களில் மேதாவிகளாக இருந்த லியானார்டோ டாவின்சி, பீத்தோவன் பற்றி மக்கள் பல்வேறு கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். புத்திசாலித்தனம் ரத்தம் மூலம் உருவாகி வளருகிறதா, அல்லது பிறந்து சூழ்நிலையில் உள்ள அம்சங்கள் மூலம் கல்வியால் அறிவு பிரகாசிக்கிறதா என்று முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருந்தனர். அரிஸ்டாட்டில், மேதாவித்தனமும்,கிறுக்குத்தனமும் ஒன்றுக்குள் ஒன்று என்று கருத்து கூறினா். இதெல்லாம் மரபணு சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று கலந்தவை என எழுதினார்.
ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர் ஹான்ஸ் ஐசென்ஸ்க், மேதாவித்தனம், கிறுக்குத்தனம் ஆகியவற்றை ஆராயாமல், முழு மனிதனை எந்த விஷயம் உருவாக்குகிறது என்பதில் மனதை செலுத்தினார். ஒருவரின் அறிவுத்திறன் 165 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால் அவரை மேதாவி என அறிவியல் அழைக்கிறது. இதேபோல ஒருவர் செய்யும் செயல்களில் மனநல குறைபாடுகளின் அறிகுறிகள் தெரிந்தால் அவரை மன நோயாளி என முத்திரை குத்தி சிகிச்சை செய்கின்றனர். ஹான்ஸ் உருவாக்கிய பென் கொள்கை உளவியல் துறையில் முக்கியமானது.
ஹான்ஸ் ஜே ஐசென்க்
ஜெர்மனியின் பெர்லினில் பிறந்தார். அப்பா எட்வர்ட் நாடக நடிகர், அம்மா திரைப்பட நடிகை. ஹான்ஸ் பிறந்தபிறகு சில ஆண்டுகளிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர். பாட்டிதான் இவரை வளர்த்தார். நாஜி கட்சியில் சேர்ந்தால்தான் பல்கலைக்கழக படிப்பை படிக்க முடியும் சூழலில், இங்கிலாந்திற்கு சென்று உளவியல் படித்தார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முனைவர் படிப்பை முடித்தவர், அவசரகால மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தார். லண்டன் பல்கலையில் உளவியலுக்கான மையம் ஒன்றை உருவாக்கினார். 1950ஆம் ஆண்டு பிரிட்டன் குடிமகனாக மாறினார். 1966ஆம் ஆண்டு மூளைப் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டு, அடுத்த ஆண்டே இறந்துபோனார்.
முக்கிய படைப்புகள்
1967 the biological basis of personality
1976 psychoticism as a dimension of personality
1983 the roots of creativity
cartoonstcock-dough hill
கருத்துகள்
கருத்துரையிடுக