இடுகைகள்

சோவியத் யூனியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழலுக்கு உகந்த விவசாயத்தை கையில் எடுத்து சாதித்த கியூபா!

படம்
பசுமை சூழலை உருவாக்க அதுதொடர்பான ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தேவை. அவை வளரும்போதுதான், அதைச் சார்ந்த வணிகமும் உருவாகும். மக்களும் அதன் பயனை உணர்வார்கள். இப்படியான மாற்றம் பலவந்தமாக இல்லாமல் இயல்பாக மடைமாறுவது நடக்கும். அரசு கட்டமைப்பு அளவில் பொதுப்போக்குவரத்தில் முதலீடு செய்து அதை பரவலாக்க வேண்டும். அலுவலகத்திற்கு காரில் அல்லது பைக்கில் செல்கிறீர்கள். என்ன காரணம், நேரத்திற்கு பேருந்தோ, ரயிலோ கிடைக்காததுதான். அலுவலகத்திற்கு அருகிலேயே செல்லும்படியாக ரயில் வசதி இருந்தால், கார், பைக்கில் முதலீடு செய்யவேண்டியதில்லைதானே? காய்கறிகளை நாமாகவே உற்பத்திசெய்துகொள்வதோடு பள்ளி, கல்லூரிகளையும் உருவாக்கிக்கொண்டால் ஆற்றல் அதிகம் தேவைப்படாது. தூய ஆற்றல் ஆதாரங்களே போதுமானது. அடிப்படையில் ஆற்றலை செலவழிப்பதில் சிக்கனம் தேவை. 1990ஆம் ஆண்டில் கியூபாவிற்கு சோவியத் யூனியன் அளித்து வந்த எரிபொருட்கள் குறைந்துவிட்டன. எனவே, அதைத் தவிர்த்து பொருளாதாரத்தை இயக்க முயன்றனர். பொதுப்போக்குவரத்தில் அரசு முதலீடு செய்தது. மண்புழு உரத்தை தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஊக்கம் கொடுத்தது. தூய ஆற்றல் ஆதாரங்க

நேருவுக்கும் சோவியத்திற்குமான உறவு! கடிதங்கள்- கதிரவன்

படம்
          நட்பா , பணமா ? அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நாளிதழ் வேலைகள் மெதுவாக செல்கின்றன . பாட நூல்களிலிருந்து கருத்துகளை எடுத்து கட்டுரைகளை எழுதுவது கடினமாக உள்ளது . அடிப்படையில் பொதுவான செய்திகளை எடுத்து எழுதுவது ஈஸி . கடந்த ஞாயிறு குங்குமம் தலைமை உதவி ஆசிரியரான சக்திவேல் சாரின் அறைக்குப் போக நினைத்தேன் . இதை செய்தியாக அவருக்கு போனில் அனுப்பியபோது , போனில் அழைத்து தான் இன்னொரு நண்பரைப் பார்க்கப் போவதாக கூறிவிட்டார் . எனவே , வேறு வழியில்லை . அறையில்தான் ஜாகை . மோகன் அண்ணா ஷேர் மார்க்கெட்டில் வெறியாக இருக்கிறார் . அவர் கேட்டதற்காக நட்பிற்காக எனது கையிருப்பில் உள்ள தொகையை இழக்கவிரும்பவில்லை . அவரிடம் நான் இப்போது பேசுவதில்லை . ட்ரெய்ன் டூ பூஷன் தென்கொரியப் படம் பார்த்தேன் . ஜோம்பி படம்தான் . படத்தில் வைரஸ் பற்றி பேசாமல் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உணர்வுகள் , கடமைகள் , பொறுப்புகளைப் பற்றி பேசியிருக்கிறார்கள் . நன்றாக எடுத்திருக்கிறார்கள் . நேற்று இயர்போன் ஒன்றை புதிதாக வாங்கினேன் . பிலிப்ஸ் இயர்போன் வலது பக்கம் கேட்கிறது . ஆனால் இடது பக

நிலவில் மனிதர்கள் கால் வைத்த வரலாற்று நாள்! - 53ஆவது ஆண்டு

படம்
  ஜூலை 20, 1969 நிலவில் அமெரிக்கர்கள் கால் வைக்கவே இல்லை என நிறைய கான்ஸ்பைரசி தியரிகள் உண்டு. நாம் அதன் வழி சென்றால் இந்த கட்டுரையை எழுத முடியாமல் போய்விடும். எனவே நாம் இடது பக்கம் இண்டிகேட்டர் போட்டு அதேபக்கம் திரும்புவோம்.  நாசாவின் அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவில் அமெரிக்க வீரர்கள் கால் வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது ஜூலை மாதம் 20ஆம் தேதிதான். நீளமான வாக்கியம் அல்லவா? சாதனை அந்தளவு பெரியதுதான். நிலவில் ஆராய்ச்சி செய்து மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய்.. பாருங்கள் இதை எழுதும்போது நமக்கே இதெல்லாம் சாத்தியமா என்று தோன்றுகிறது. எப்போதும் குறைந்த தவறுகளை செய்து நிறைவாக டீல் பேசி முடிக்கும் அமெரிக்கர்கள் என சும்பைப் பயல்களா என்ன? சோவியத் ரஷ்யாவிற்கு முன்னர் நாம் தான் நிலவில் கால் வைத்து அவர்களை முந்த வேண்டும். கேவலப்படுத்தி சிரிக்கவேண்டும் என்பதுதான் நிஜ பிளான்.  நிலவுக்கு செல்லும் பயணக்குழுவின் தலைவர் வேறுயார் நீல் ஆம்ஸ்ட்ராங் தான். அவர் தலைமையில் தான் குழு ஒன்றாக இணைந்தது. இவருக்கு உதவி செய்த மற்றொரு வீரர் எட்வின் ஆல்ட்ரின். அப்போலோ லூனார் மாடுலின் பெயர் ஈகிள். இதன் வழியாக நீல்

சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணு உலை!

படம்
  இகோர் குர்சாடோவ் முதல் அணுஉலை  இன்று வளர்ந்த நாடுகள் அமைதி என்று பேசுவதற்கு காரணமே, முதுகுக்கு பின்னால் வைத்துள்ள அணு ஆயுதங்கள்தான். யாராவது அமைதிக்கு மறுத்தால் அடுத்த அடி மரண அடியாக, அந்நாட்டின் மீது அணு குண்டுகளை வீசுவார்கள். இதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்க நாடு நடத்திய தாக்குதலைக் கூறலாம். அந்த நாட்டின் பல தலைமுறைகள் கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இரண்டு குண்டுகளை வீசி அந்நாட்டை முழுமையாக அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அமெரிக்காவைத் தாண்டி ஜப்பான் இன்று உழைப்பால் பல படிகள் உயர்ந்து நிற்கிறது.  இரண்டாம் உலகப்போர் சமயமே அணு உலை சார்ந்த முன்னேற்றங்கள் தொடங்கிவிட்டன. வெடிகுண்டுகள் தயாரிக்க மட்டுமல்ல. அணுசக்தியை பயன்படுத்தி அணு இணைப்பு, பிளப்பு முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  முதல் அணு உலை சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் ஆண்டு உலகில் முதன்முறையாக மின்சாரம் தயாரிப்பதற்கென நிறுவப்பட்ட அணு உலை இதுவே. இந்த ஆண்டோடு சோவியத் யூனியனில் அணு உலை நிறுவப்பட்டு 68 ஆண்டுகள் ஆகிறது. இதன் செயல்பாடு 1954 தொடங்கி 2002 ஆம் ஆண்ட

நேருவின் சோசலிச கொள்கையும், சோவியத் யூனியனும்! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 நேருவும், அவரின் சோவியத் சோசலிச உறவும்.  இன்று இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நிர்வாக திறனின்மைக்கு கூட மறைந்த முன்னாள் பிரதமர் நேரு குற்றம்சாட்டப்பட்டு வருகிறார். அவர் அக்காலத்தில் கடைபிடித்த கலப்பு பொருளாதாரம், சோசலிச கொள்கைகள், பெரும் தொழிற்சாலைகள் ஆகியவை அனைத்தும் இன்றைய கால கண்ணோட்டத்துடன் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. உண்மையில் நேரு சோவியத்தின் சோசலிச கொள்கைகளை முழுமையாக அப்படியே அமல்படுத்தினாரா என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கம்.  சோவியத் யூனியன்தான் சோசலிச தலைமையகம். அங்கு 1917ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சி, அதற்குப் பிறகு அங்கிருந்து உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பல்வேறு நாடுகளில் புரட்சிக்கான காரணங்களை தேடக் காரணமாக அமைந்தன. சோசலிசம் என்பது நாடுகளுக்கு ஏற்றது போல பல்வேறு வடிவங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. உதாரணத்திற்கு சீனா. அங்கும் சோசலிச கொள்கைகள் உள்ளன. முதலாளித்துவத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு சர்வாதிகாரம் செய்து வருகிறது.  ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை அவர் பெரிதாக முக்கியமாக நினைக்கவில்லை. 1926-27 காலகட்டத்

உக்ரேன் பற்றி முழுமையாக அறிய உதவும் நூல்களின் வரிசை!

படம்
  உக்ரைன் பற்றித்தான் பேச்சு. பலரும் பெருந்தொற்று காலத்தில் போனை எப்படி நோண்டிக்கொண்டே பதற்றத்துடன் இருந்தார்களோ இப்போதும் அதேயளவு பழக்கம் அதிகரித்து வருகிறது என ஊடகங்கள் சர்வே எடுத்து சொல்லி வருகின்றன. போர் காட்சிகள், அழுகை, மரண ஓலம் என அனைத்தும் உடனுக்குடன் காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஷ்ய இலக்கியத்தை நிறையப் பேர் படித்திருப்பார்கள். அதன் வழியாக ரஷ்ய நிலப்பரப்பு பற்றி அறிந்தவர்கள் பலர். ஆனால் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, தனியாக சுதந்திர நாடுகளான பல நாடுகளைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவு. இப்போது நாம் பார்க்கப்போகும் நூல்கள் உக்ரைன் பற்றியதுதான்.  தி கேட்ஸ் ஆப் யூரோப் எ ஹிஸ்டரி ஆப் உக்ரைன் செர்கி புளோகி ஹார்வர்ட் உக்ரேனியன் ஆராய்ச்சி கழக தலைவர் புளோகி. இவர் உக்ரைன் நாடு சுதந்திர நாடாகவும் தனி அடையாளத்திற்காகவும் கி.மு.45,000 ஆண்டுகளாக முயன்று வந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். இந்த ஆதாரங்களும் சம்பவங்களும் கடந்தகாலத்தை நினைவுபடுத்துவதோடு நிகழ்காலத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கிறது.  கிரே பீஸ்  ஆண்ட்ரேய் குர்க

இரண்டாம் உலகப்போரை தொடங்கி வைத்த ஜெர்மனி!

படம்
இரண்டாம் உலகப்போர்  இரண்டாம் உலகப்போர் 1939ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது, ஜெர்மனி நாடு. இந்த நாடு ஆக்ரோஷமாக போலந்து நாட்டை ஆக்கிரமித்தது. இப்படி உலக நாடுகளுக்கு இடையில் தொடங்கிய போர் ஐந்து ஆண்டுகள் நீடித்தது.  இந்தப் போரில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இவர்களுக்கு எதிராக ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிரே நின்றன.  இரண்டாம் உலகப்போரில் 30 நாடுகள் கலந்துகொண்டன. இதன் விளைவாக இங்கு வாழ்ந்த 100 மில்லியன் மக்கள்  பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஏராளமான மக்கள் தற்கொலை, மன அழுத்தம், ஆயுத தாக்குதல், நோய் பாதிப்பு என 85 மில்லியன் மக்கள் இறந்துபோயினர். மனிதகுல வரலாற்றில் இது மறக்கமுடியாத களங்கமாக மாறியது.  செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மனி உலகை ஆட்சி செய்யும் வேகத்தில் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இதன் எதிர்வினையாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தன.  1939ஆம் ஆண்டு ராணுவ பலத்தைப் பொறுத்தவரை நவீனமான ஆயுதங்களைக் கொண்டிருந்தது ஜெர்மனிதான். இதன் காரணமாக போரின் தொடக்கத்தில் இ

இயற்கைச்சூழலைக் கெடுத்த செர்னோபில் அணுஉலை பேரிடர்!

படம்
  செர்னோபில் பேரிடர்  செர்னோபில் பேரிடரைப் பலரும் எப்போதேனும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் அணுஉலை பற்றி பேசும்போது முக்கியமாக இதனை சூழலியலாளர்கள் கூறுவார்கள். அந்தளவு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் இது.  1986ஆம்ஆண்டு ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுஉலை பாதிப்பு ஏற்பட்டது. சோவியத் யூனியனின் பிரிப்யாட் என்ற நகரில் அமைந்திருந்த அணுஉலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது.  அணு உலையில் அமைந்திருந்த ரியாக்டரை சோதித்து வந்தனர். அதில், நீர் மூலம் இயங்கும் டர்பனை இயக்கி ரியாக்டரின் வெப்பத்தைக் படிப்படியாக குறைக்க முயன்றனர். ஆனால் அப்போது திடீரென மின்சாரம் நின்றுபோனது. இந்த இடத்தை மூடிய ஆபரேட்டர்கள் அணு உலையின் தொடர் சங்கிலியாக நடக்கும் செயல்பாடுகளை கவனிக்க வில்லை. இதன் காரணமாக அங்கு தீபிடித்தது. இதன் விளைவாக கதிரியக்க தனிமங்கள் சூழலில் கசியத் தொடங்கின. இதன் விளைவாக காற்றை சுவாசித்த நூறு பேர் உடனடியாக இறந்தனர். மீதியுள்ளவர்கள் பலருக்கும் வாழ்நாள் முழுக்க தொடரும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.  அரசுக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சுற்றுப்புறத்தில் வாழ்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்ப

ரஷ்யாவின் பெருமைக்குரிய ஹீரோ! - யூரி ககாரின்

படம்
  யூரி ககாரின் யூரி ககாரின் பலரும் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததைப் பற்றி பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் பாடல் கூட எழுதிவிட்டார்கள். ஆனால் யூகி க காரின் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்வெளிக்கு சென்று சாதித்தவர். அவர் ரஷ்யாவில் பிறந்தார் என்பதற்காகவே ஒதுக்குகிறார்களோ எனும்படி இருக்கிறது ஊடகங்களின் செய்திகள்.  விண்வெளி காலம் என்பது நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் யூரி, 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று 9.07 மணிக்கு வோஸ்டாக் 1 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.  சோவியத் யூனியனின் குளுசினோ எனும் நகரில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர் யூரி. இவரது பெற்றோர்கள் அன்றைய நடைமுறையான கூட்டுப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் யூரி மூன்றாவது ஆள்.  இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அதில் ஜெர்மனி சோவியத்திற்குள் முன்னேறி வந்தது. அவர்களிடம் குளுசினோ நகரம் பிடிபட்டது. இதனால் குடும்பத்தின் பண்ணையும் அவர்களின் கைக்கு போய்விட்டது. வீர ர்களுக்கு உணவிட யூரியின் பெற்றோர் வற்புறுத்தப்பட்டனர். யூர