இயற்கைச்சூழலைக் கெடுத்த செர்னோபில் அணுஉலை பேரிடர்!

 












செர்னோபில் பேரிடர் 


செர்னோபில் பேரிடரைப் பலரும் எப்போதேனும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் அணுஉலை பற்றி பேசும்போது முக்கியமாக இதனை சூழலியலாளர்கள் கூறுவார்கள். அந்தளவு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் இது. 

1986ஆம்ஆண்டு ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுஉலை பாதிப்பு ஏற்பட்டது. சோவியத் யூனியனின் பிரிப்யாட் என்ற நகரில் அமைந்திருந்த அணுஉலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. 

அணு உலையில் அமைந்திருந்த ரியாக்டரை சோதித்து வந்தனர். அதில், நீர் மூலம் இயங்கும் டர்பனை இயக்கி ரியாக்டரின் வெப்பத்தைக் படிப்படியாக குறைக்க முயன்றனர். ஆனால் அப்போது திடீரென மின்சாரம் நின்றுபோனது. இந்த இடத்தை மூடிய ஆபரேட்டர்கள் அணு உலையின் தொடர் சங்கிலியாக நடக்கும் செயல்பாடுகளை கவனிக்க வில்லை. இதன் காரணமாக அங்கு தீபிடித்தது. இதன் விளைவாக கதிரியக்க தனிமங்கள் சூழலில் கசியத் தொடங்கின. இதன் விளைவாக காற்றை சுவாசித்த நூறு பேர் உடனடியாக இறந்தனர். மீதியுள்ளவர்கள் பலருக்கும் வாழ்நாள் முழுக்க தொடரும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. 

அரசுக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சுற்றுப்புறத்தில் வாழ்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனாலும் கதிர்வீச்சு பாதிப்பை யாரும் கவனிக்கவில்லை. இதனால், கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட காய்கறி, பால், இறைச்சி ஆகியவற்றை மக்கள் கவலையின்றி சாப்பிட்டனர். இதனால் ஏராளமான மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. மனிதர்கள் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பில், செர்னோபில் அணுஉலை பாதிப்பு மறைக்க முடியாத வரலாற்று கறையாக, களங்கமாக மாறிவிட்டது. 

டெல் மீ வொய்


கருத்துகள்