தொன்மையான விதைகள் முளைக்குமா? - பதில் சொல்லுங்க ப்ளீஸ்

 











பதில் சொல்லுங்க ப்ளீஸ்.... 

விஷமுள்ள பல்லி இனம் உள்ளதா?

நிச்சயமாக. கிலா மான்ஸ்டர் (Gila Monster), பியாடெட் லிஸார்ட் (beaded lizard) என இரண்டு விஷம் கொண்ட பல்லி இனங்கள் உண்டு. இவை முறையே வட அமெரிக்கா, மெக்சிகோ, குவாத்திமாலா ஆகிய நாடுகளை பூர்விகமாகக் கொண்டவை. இந்த உயிரினங்களுக்கு விஷம், எச்சிலில் உள்ளது. இவை இரையைக் கடித்தால், விஷம் உடலுக்குள் இறங்கி உயிரைப் பறித்துவிடும். 

தொன்மையான விதைகள் முளைக்குமா?

இப்படி நடைபெறுவது அரிதானதுதான். விதைகளை சரியானபடி பக்குவப்படுத்தி அடைத்து வைத்திருந்தால் அவை முளைக்க வாய்ப்புண்டு. கி.மு.155, கி.பி.64 காலத்தில் சேமிக்கப்பட்ட பேரீச்சம் பழத்தின் விதைகள், ஜூடான் பாலைவனத்தில் இருந்து எடுக்கப்பட்டன.  2005இல் இவற்றை மீட்டு எடுத்து விதைத்தபோது, முளைக்கும் திறன் கொண்டிருந்தன. ஆர்க்டிக்கில் கிடைத்த 31,800 ஆண்டு தொன்மையான கேம்பியன் விதைகளை (Campion seeds)ஆராய்ச்சியாளர்கள் மீட்டனர். அதனை விதைத்த முயற்சியும் வெற்றியடைந்துள்ளது. 

தகவல்

BBC Wildlife 

BBC Wildlife 

 march 2022

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்