நீர்நிலைகளிலுள்ள பிளாஸ்டிக்குகளை அகற்ற முடியுமா?

 











பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் அஸூர்! 

கடல், ஆறு, ஏரி, குளம் குட்டை என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பியுள்ளன. நிலத்தில் பெருகிய பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலைகளிலும் பரவத் தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை அகற்றுவதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அப்படி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் இச்தியோன்(Itchion). இந்த நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொழில்நுட்பம் கொண்ட கருவி மூலம் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக அகற்ற முடியும். 

இச்தியோன் என்ற நிறுவனத்தின் பிளாஸ்டிக் அகற்றும் கருவியின் பெயர் அஸூர் (azure). இக்கருவி நீர்நிலையில் அடிப்பரப்பில் சென்று பிளாஸ்டிக்குகளை மேலே தள்ளுகிறது. கூடவே பொருத்தப்பட்ட கேமரா மூலம் அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை புகைப்படம் எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் தினசரி 80 டன் கழிவுகளை அகற்ற முடியும். இக்கழிவுகளை சரியான முறையில் பிரித்து மறுபடியும் பயன்படுத்தலாம் அல்லது மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பலாம். 

இச்தியோன் நிறுவனத்தின் அஸூர் கருவி, விரைவில் ஈகுவடார் நாட்டின் காலபகோஸ் தீவில் நிறுவப்படவிருக்கிறது. அடுத்து கப்பல்களில் பொருத்தப்படும் மற்றொரு வகை கருவி மூலம் மைக்ரோ பிளாஸ்டிக்குகளை அடையாளம் கண்டு சேகரிக்கவிருக்கிறது. சுறா மீன்களின் செவுள் அமைப்பைப் பார்த்து ஊக்கம் பெற்று இக்கருவியை அமைத்துள்ளதாக இச்தியோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தகவல்

bbc science focus specials

the smart machine that catches plastic at the source

bbc science focus specials 5.12.2021


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்