இடுகைகள்

டீப் மைண்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவில் சாதனை படைக்கும் தொழிலதிபர்கள்!

படம்
  உர்டாசன், வாபி லீலா இப்ராகிம், டீப் மைண்ட் செயற்கை நுண்ணறிவின் பிரம்மாக்கள் டாரியோ, டேனியெலா அமோடெய் துணை நிறுவனர்கள், ஆந்த்ரோபிக்   ஆந்த்ரோபிக், லாபநோக்கற்ற ஏஐ ஆராய்ச்சி நிறுவனம். செயற்கை நுண்ணறிவை ஆராய்ச்சி செய்வது எளிதல்ல. அதற்கு தொடக்கத்திலேயே அதிக நிதி தேவை. எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ எக்சேன்ஞ்ச், சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் பெருமளவு நிதி பெற்று இயங்கி வருகிறது. ஓப்பன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய ஏஐ மாடல்களுக்கு நிகராக சாட்பாட், கிளாட் 2 ஆகிய மாடல்களை உருவாக்கியுள்ள நிறுவனம்தான் ஆந்த்ரோபிக். 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தில் டாரியோ இயக்குநராகவும், டேனியெலா தலைவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சகோதர உறவுமுறையைக் கொண்டவர்கள். இந்த நிறுவனத்தை ஏழு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தொடங்கினர். இவர்கள் அனைவருமே ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் என்பதுதான் முக்கியமான அம்சம். ‘’நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி பற்றி வெளியில் அதிகம் பேசுவதில்லை. அதற்கு காரணம், அதை கார்ப்பரேட் அறிக்கை போல மாற்றவேண்டாம் என்ற நோக்கத்தில்தான்   ’’ என இயக்குநர் டாரியோ தெளிவாக பேசுகிறார