இடுகைகள்

சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாயத்தன்மையும் வசீகரமும் கொண்ட சிறுகதைகள் - சரீரம் - நரன்- சால்ட் பதிப்பகம்

படம்
  சரீரம் -நரன்- சால்ட் பதிப்பகம் சரீரம் நரன் சிறுகதைகள் சால்ட் பதிப்பகம் நன்றி – ஆலிவர் ஜென், திருவண்ணாமலை   2019ஆம் ஆண்டு வெளியான சிறுகதைகள். சரீரம் என்ற இத்தொகுப்பில் பதினோரு கதைகள் உள்ளன. நூலின் வடிவமைப்பு, கட்டமைப்பு மிகவும் கச்சிதமாக புதியதாக உள்ளன.   அனைத்து சிறுகதைகளும் மாயத்தன்மை கொண்டுள்ளன. கதைகளை வாசிப்பவர்கள் அதிலுள்ள மாய வசீகரத்தில் இழுக்கப்படுகிறார்கள். நூலை முழுமையாக படித்து முடிக்கும் வரை அதிலிருந்து மீள முடிவதில்லை. நூலின் முதல் கதையிலும், அமரந்தா எனும் கடைசிக்கு முந்தைய கதையிலும் அமரந்தா பாத்திரம் வருகிறது.   உடல் எனும் முதல் கதையில் சங்கரன் பார்த்த அக்காவின் உடல் எப்படி அவனை பித்து பிடிக்க வைக்கிறது என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அமரந்தா கதையில் அவளுக்கு எப்படி உடலே பெரும் பாரமாக மாறுகிறது என்று ஆசிரியர் காட்டியிருக்கிறார்.   அமரந்தாவின் தோழன் அபு அவளின் கை பற்றி அவளோடு சென்னை பயணப்படும் நிகழ்ச்சி, கதைக்குப் பொருத்தமானதாக அழகாக இருந்தது. அந்த காட்சியை அப்படியே காண்பது போல இருக்கிறது. இரண்டு கதையில் வரும் அமரந்தாவுமே பிறரது மனதை ஆழமாக   உள்ளே பார்

மென்மையான உணர்வுகளை மனதிற்குள் கடத்தும் கதைகள் - அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

படம்
  அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன் சிறுகதைகள் அப்பாவின் வேஷ்டி பிரபஞ்சன் டிஸ்கவரி பப்ளிகேஷன் தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள் உள்ளன. இதில் வாசிக்க அனைத்துமே வெவ்வேறு வகையாக மனித வாழ்க்கையை அணுகுபவைதான். நிகழ் உலகம், அமரத்துவம், குழந்தைகள் ஆகிய கதைகள் சற்றே வேறுபட்ட தன்மையைக் கொண்டுள்ளன. குழந்தைகள் கதையில் வாசு என்ற இசைக்கலைஞரிடம் வீணை பாடம் கற்க இரு இளைஞர்கள் செல்கிறார்கள். அங்கு வாசு சாரின் மகள் விதவையாகி வாழ்ந்து வருகிறாள். பிறகென்ன கதை அதேதான். பாடம் கற்க சென்றவரான பிச்சுவுக்கு காதல் பொத்துக்கொண்டு வருகிறது. ஆனால் பிச்சுவின் செயலை வாசு சார் எப்படி பார்க்கிறார், அவரின் மகள் ஜானகி எப்படி புரிந்துகொள்கிறாள் என்பதே கதையின் இயல்பை மாற்றுகிறது. இதில் வைத்தி முதலிலேயே வாசு சாரின் இயல்பைப் புரிந்துகொள்கிறான். அதனால் பிச்சு தனது காதல் பற்றி சொன்னதும், அது சிக்கலாகும் வேண்டாம். நீ காதல் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என எச்சரிக்கிறான். ஆனால் காதல் இதற்கெல்லாம் நின்றுவிடுமா என்ன? இறுதியாக என்னாகிறது, பிச்சுவின் காதல் பற்றி வைத்தி என்ன சொல்லுகிறான் என்பதுதான் முக்கியமானது. நிகழ்

புங்கமர நிழலாக பூக்கும் காதல்- கடிதங்கள் - கதிரவன்

படம்
  வெயிலுக்கு புங்க மர நிழல் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலம் . மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது . வேலை செய்தே ஆகவேண்டும் . நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும் . ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது . அதுதான் இருப்பதிலேயே கடினமானது . இனிய உதயம் பத்திரிகை படித்தேன் . இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார் . அதாவது மொழிபெயர்த்து தமிழில் எழுதியிருக்கிறார் . பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை . சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை . அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே . பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள் . இதனால் சுகுமாரனின் மீது அம்முக்குட்டிக்கு காதல் பிறக்கிறது . அவரைப் பார்க்கும்போது கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது . அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள் . அதற்குப் பிறகு , அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை . நன்றி ! அன்பரசு 30.11.2021 மயிலாப்பூர் -----------------

புத்தாண்டு பரிசாக நகுலன் சிறுகதைகள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  22.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமா? ஜனவரி 3 அன்று நாளிதழ் தொடங்கப்போவதாக எடிட்டர் சொன்னார். புதிய பகுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் கவனம் கொடுத்து பல்வேறு இதழ்களைப் படித்து வருகிறேன். பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுவதற்கு ஆதரவு எதிர்ப்பு என இருவகை தரப்பு உருவாகியிருக்கிறது. ஆதரவை விட எதிர்ப்புகள் அதிகம் உருவாகியிருக்கிறது. பெண்களின் மேம்பாடும், கல்வி அறிவும் மேம்படுவதுதான் சட்டத்தின் நோக்கம் என்று சொல்லியிருக்கிறது. இடதுசாரிகள், வலது சாரி அரசு பெண்களின் திருமண வயது 21 என உயர்த்துவது அவர்களை சாதி மறுப்பு திருமணம் செய்வதிலிருந்து தடுக்க உதவும் என வாதிடுகின்றனர்.  பெண்களை சட்டத்தின் பிடியில் வைத்து, அவள் காதல் திருமணம் செய்வதை எளிதாக தடுக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. எனக்கு பாஜக தனது சுயநலம் தவிர வேறெதையும் நாட்டுக்காக எதையும் பிடுங்கிக் கூட போடவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர்களது கட்சியை கருத்தியலை வளர்க்க இத்தகைய சட்டங்கள் உதவும் என நினைக்கிறேன். நன்றி! அன்பரசு  27.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  முஸ்லீம்

வலியால் மரத்துப்போகும் உடல்! - கதிரவனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.7.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா? வேலை எப்படி போகிறது? தாய் - மார்க்சிம் கார்க்கி நாவலைப் படித்தேன். 1334 பக்கம். தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம். பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன.  ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது. பார்ப்போம். பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன. இந்தளவு பதிப்பாக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை. ரூமில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை. பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம். சாதாரண பாய் வாங்கினால், எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது. தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது.  அன்பரசு  2 21.7.2021 மயிலை அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. ஒரு கடிதம் எழுதி அன

புத்தகம் புதுசு - சாபம் கொண்ட வைரத்தின் கதை

படம்
  தி கிங் ஹூ டர்ன்டு இன்டு எ செர்பன்ட் அண்ட் அதர் திரில்லிங் டேல்ஸ்  ஆஃப் ராயல்டி ஃபிரம் இண்டியன் மித்தாலஜி சுதா மாதவன் ஹாசெட் 399 நூலில் மொத்தம் 15 ஆர்வமூட்டும் கதைகள் உள்ளன. நூலில் உள்ள ஓவியங்கள் அழகாக உள்ளன. இதில் வரலாற்றில் உள்ள மன்னர்கள் இடம்பெற்றுள்ளனர்.  லேடிஸ் டெய்லர் பிரியா ஹஜேலா ஹார்ப்பர் கோலின்ஸ்  399 பெண்களுக்கான உடைகளை உருவாக்கி தைப்பவர் குருதேவ். பிரிவினைக்கு பிறகான காலத்தில் நடைபெறும் கதை. அப்போது, குருதேவ் பாகிஸ்தானின் கிழக்குப்புறம் பிழைக்க செல்கிறார். அங்கு சென்று தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறார் என்பதே இந்த நாவலின் கதை.  தி டெத் ஆஃப் கீர்த்தி கடக்கியா மீட்டி ஷெராப் ஷா ப்ளூம்ஸ்பரி இந்தியா 499 இது ஒரு மர்ம நாவல். ரதி ஜாவேரியின் தோழி சஞ்சனா. இவள் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்கவிருக்கிறாள். சஞ்சனா அப்போதுதான் தனது தந்தையை இழந்திருக்கிற நேரமும் அதுதான். சஞ்சனாவை பயமுறுத்தும் விஷயங்களை நடைபெற, அவளுக்கு உதவியாக ரதி வந்து மர்மங்களை கண்டறிகிறாள். இதுதான் கதை.  ஆஸ்மா ஐ நூர் - தி கர்ஸ்டு ஜூவல் சுதிப்தா சென் குப்தா ரூபா 395 ஆஸ்மா ஐ நூர் என்பது பிரிட்டிஷ் கால இந்தியாவி

எழுத்தை நம்பி சென்னைக்கு வரும் தஞ்சாவூர் இளைஞனின் போராட்டம்! - மிஸ்டர் வேதாந்தம் - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் - 1 தேவன் மிஸ்டர் வேதாந்தம் முதல் பாகம் தேவன் அல்லயன்ஸ்  வேதாந்தம் என்ற இளைஞனின் வாழ்க்கை, தடாலென ஒரேநாளில் கீழே விழுகிறது. அதற்குப் பிறகு அவன் தனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறான் என்பதே நாவலின் மையம்.  தினந்தந்தியின் திரைவிமர்சனம் போல கதையின் கரு இதுதான் என்று சொன்னாலும் கூட நாவல் நெடுக வேதாந்தத்தின் மனநிலையை விவரிப்பது கடினமானது. சில பக்கங்களை வாசித்து விட்டு மெல்ல அவரின் மனநிலையோடு இணையும்போது நாவலை ரசிக்கத் தொடங்குகிறோம்.  தஞ்சாவூரில் வாழும் தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தம். இவரின் பணம், செல்வாக்கு காரணமாக ஊரில் பெரிய மதிப்பு உண்டு. ஆனால் அவரை உண்மையாகவே மதிப்பவர்கள் குறைவு என்பதை அவர் மறைவின்போது, வேதாந்தம் கண்டுகொள்கிறான். அவனுக்கு அந்த சூழலில் ஆதரவு தருவது அவனது அத்தையும் அவளது பெண்ணான செல்லமும்தான். அத்தங்காள் செல்லம் என்றே கடிதங்களில் வருகிறது. அப்படியே வைத்துக்கொள்வோம் அழகாக இருக்கிறது அல்லவா? தேசிகாச்சாரிக்கு கிடைத்த பணம் அவரை ஆணவம் கொண்டவராக மாற்றுகிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பணத்தை செலவு செய்கிறார். குறிப்பாக அவரது மாமா கோபாலசாமி அய்

நீதிகளைப் பேசும் சீனச்சிறுகதைகள்! - குறிதவறிய அம்பு - வானதி

படம்
  குறி தவறிய அம்பு சீன சிறுகதைகள் தமிழ் மொழிபெயர்ப்பு வானதி சீன பழமொழிகளை ஒட்டிய ஏராளமான சிறுகதைகள் உள்ளன. இவை அனைத்துமே பொதுவாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நன்னெறிகளைக் கொண்டவை. குழந்தைகள் வாசிக்க ஏற்றவை என்பதையும் புரிந்துகொள்ளலாம்.  சகோதரர்களுக்கு உள்ள அபூர்வ சக்தியால் ஒருவரையொருவர் காப்பாற்ற முயலும் கதை அருமையானது. இரும்பினால் வெட்டப்பட முடியாத, கடலில் மூழ்கினாலும் சாகாத, நெருப்பும் எரிக்க முடியாத அபூர்வ சக்திகளை கொண்ட சகோதர ர்களின் கதை அவர்களின் பாசத்தை காட்டுவதோடு, சமயோசிதமாக யோசித்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் புத்திசாலித்தனத்தையும் பேசுகிறது.  நீதியை கையில் எடுத்து தண்டிக்கும் பெண்ணின் கதை. இதன்படி, கணவனைக் கொன்றவரை இரண்டாவது கணவனாக ஏற்றுக்கொண்டு குழந்தை பெற்றாலும் முதல் கணவனின் இறப்புக்கு பழிவாங்கும்  வேகம் ஆச்சரியப்படுத்தியது. நீதிநோக்கில் பார்த்தால் இது சரியா என்று தோன்றும். ஆனால் நீதிக்கு உணர்ச்சிகளை விட சாட்சிகளே முக்கியம் என்பதால் இரண்டாவது கணவன் செய்தது கொலை என நிரூபிக்கப்பட முடியாது. எனவே சட்டத்தை தன் கையில் எடுத்து இரண்டாவது கணவனைக் கொல்கிறாள் மனைவி. கொலைக்கு கொலை

வடகிழக்கு கலாசார விஷயங்களை பேசும் சிறுகதை நூல்! - கடிதங்கள்

படம்
  அசாம் அன்புள்ள நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? கடந்த சில மாதங்களாக ஷர்ட், பேண்ட் என எதையும் வாங்கவில்லை. நேற்று பேண்ட் ஒன்று வாங்கினேன். ஷர்ட் பீசாக வாங்கி தைக்கவேண்டும். தற்போது சுப்பாராவ் மொழிபெயர்ப்பில் லைபாக்லை ஆன்ட்டி சிறுகதைத் தொகுப்பு படித்து வருகிறேன்.  ஐந்து சிறுகதைகளை படித்திருக்கிறேன். இக்கதைகள் பழங்குடி மக்களின் பண்பாடு, வேறு இனங்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள், இழப்புகள் பற்றி பேசுகின்றன. பாசனின் பாட்டி சிறுகதை உணர்ச்சிகரமான கதை. வங்காளி குடும்பத்திற்கும், பழங்குடி குடும்பத்திற்குமான உறவை பேசுகிறது.  எங்கள் இதழ் வேலைகள் எப்போதும் போல நடந்துகொண்டிருக்கிறது. எழுதுவதில் வாக்கிய அமைப்பு பிரச்னை உள்ளது என அலுவலக சகா பாலபாரதி சொன்னார். எனவே, கவனமும், கருத்துமாக எழுத முயன்று வருகிறேன். வேகமாக எழுதும்போது சிலசமயம் பத்திகளிடையே தொடர்பு அற்று போகும் வாய்ப்புள்ளது.  20 நேர்காணல்களைக் கொண்ட நூல் தயார் செய்துவிட்டேன். இன்னும் சில வேலைகள் பாக்கி. தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு இருப்பீர்கள். உடலை கவனித்துக்கொள்ளுங்கள்.  நன்றி ச.அன்பரசு 3.3.2021

இறுதியாத்திரை அனுபவத்தில் அப்பாவின் நினைவுகள்! - கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்றுதான் இங்கு வெயில் லேசாக அடிக்கிறது. விரைவில் சென்னை ஆபீசுக்கு வேலைக்கு வரச்சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.  அறையில் தங்கவில்லை என்றாலும் வாடகையை மாதம்தோறும் கொடுத்து வருகிறேன். அறையைத் தக்க வைக்க வேறு வழியில்லை. எம்.டி. வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை நாவலைப் படித்தேன். 130 பக்கம் கொண்ட நாவல் இது. புற்றுநோயால் இறந்துபோன அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு வரும் நான்கு மகன்களைப் பற்றிய கதை. நான்கு மகன்களின் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு, அப்படி எப்படி இருந்தார் என்பதை விவரிக்கிறார் ஆசிரியர்.  கேரளம், இலங்கை என பயணிக்கும் கதையில் அனைத்து இடங்களையும் சிறப்பாக அனுபவித்து உணரும்படி எழுதியிருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், மொழிபெயர்ப்பாளரான சைலஜாதான். பொருளாதாரத்தில் முக்கியமான வார்த்தைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பான நூலில் இன்னும் நூறு பக்கங்கள் மிச்சமுள்ளன.  அம்பேத்கரின் இந்துமத தத்துவம் என்ற நூலை எடிட்டர் கே.என்.சிவராமன் பரிசாக வழங்கினார். அதன் இரு பகுதிகளைப் படித்துள்ளேன். இன

எட்கர் ஆலன்போவின் இறந்தகாலம், நிகழ்காலத்தை ஒப்பிடும் கதை! - கடிதங்கள்

படம்
  அன்பு முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா?  எட்கர் ஆலன்போவின் மம்மி பற்றிய கதையை இப்போது வாசித்தேன். இன்னும் இரண்டு கதைகள் பாக்கியாக உள்ளது. எகிப்திலிருந்து பெறப்பட்ட மம்மிக்கு மின்சாரம் அளிக்கப்பட அது பேசத் தொடங்கிவிடுகிறது. அந்தக்காலம், இந்தக்காலம் என உரையாடல் தீராத விவாதமாகிறது.  பீடிஎப் வடிவில் நிறைய கதைகள் உள்ளன. அவற்றை முடிந்தளவு நேரமொதுக்கி படிக்கவேண்டும். குரங்கு வளர்க்கும் பெண் - மோகனரங்கன் மொழிபெயர்த்த கதைகள் படித்தேன். இதில் அனைத்து கதைகளும் வாசிக்க நன்றாக இருந்தன. கார்சியா மார்க்வெஸ் எழுதிய கர்னலுக்கு யாரும் எழுதுவதில்லை என்ற கதை நீளமானது. வாசிக்க மனம் கனக்கக் கூடியதும் கூட. ஓய்வூதியத்தை 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து வாழும் ராணுவ வீரர் ஒருவரின் கதை.  உள்நாட்டுப் போர்களால் சீரழிந்த நாட்டை உரையாடல்கள் வழியாக அறிய முடிகிறது.  தலைப்பில் அமைந்த குரங்கு வளர்க்கும் பெண், இங்கர் என்ற பெண் மீது ஒருவருக்கு ஏற்படும் காதலை  விவரிக்கிறது. இது பித்தேறிய காதல்வகை. ரேமண்ட் கார்வர் எழுதிய நகர கதைகள் சிறியவை என்றாலும் படிக்க சிறப்பானவை.  நன்றி ச.அன்பரசு 6.1.2021

லா.ச.ராவின் நுட்பமான உரையாடல்கள்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் பகலில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரவில் அதன் வெளிப்பாடாக புழுக்கம் அதிகமாக உள்ளது.  மீனோட்டம் - லா.ச.ரா எழுதிய சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளைப் படித்தேன். அதில் இரண்டு மட்டும்தான் பிடிபட்டது. மீதி பலவும் நுட்பமான விஷயங்களைக் கொண்ட உரையாடல்கள். லா.ச.ரா அவரது சொந்தங்கள் கூட பேசுவது போலவே இருப்பதால் அதனை எளிதில் தொடர்புபடுத்திக்கொண்டு ஆர்வமாக படிக்க முடியவில்லை. மின்னூலாக படிப்பதில் அதிகம் சோதித்த நூல் இது. படிப்பை கைவிட்டுவிட்டேன்.  குமுதம் தீராநதி படித்தேன். குழந்தை எழுத்தாளர் கோதை சிவகண்ணகி பேட்டி நன்றாக வந்திருந்தது. இதழை ஆசிரியர் மலர்வதி ஒற்றையாளாக செய்கிறார் போல. இதழ் முழுக்க அவரின் கைவண்ணம்தான் அதிகம்.  சப்தரிஷி லா.ச.ரா எழுதும் தொடர் பரவாயில்லை ரகத்தில் இருக்கிறது. படிக்கலாம். ரணரங்கம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். சர்வானந்த் நம்பிக்கையுடன் நடித்த கேங்க்ஸ்டர் படம். காலத்தில் முன்னும் பின்னுமாக காட்சிகள் மாறி மாறி ஓடுகின்றன. கல்யாணி பிரியதர்ஷன் பிளாஷ்பேக் காட்சிகளில் பொருந்தால் வந்து ப

காலச்சுவடு 200ஆவது இதழில் உள்ள சிறுகதைகள் பற்றி...! கடிதங்கள்

படம்
  இனிய தோழர் முருகுவிற்கு, நலமா? காலச்சுவடு 200 ஆவது இதழ் வாசித்தேன். அரவிந்தன் அனுபவங்களைப் படித்தேன். ஸ்ரீராமின் கால வியூகம் குரு சிஷ்ய கதையில்  இது மற்றொரு கதை. எழுத்தாளர் மனம் செல்கிற பாதையைக் காட்டுவதாகவே உள்ளது. ஆசை, அகங்காரம் என பல விஷயங்களையும் , உறவு தந்திரங்களையும் வகுக்கிற வியூகம் இது.  போக்கிடம் - கே.என். செந்தில் எழுதியது.  சசி, மதி, லட்சுமணன், ஆறுமுகம் உள்ளிட்டோரின் வாழ்க்கை பந்தாடப்படும் சூழ்நிலை  மற்றும் சிக்கல்கள் பற்றிய கதை இது.  எங்கு கெட்டவார்த்தை பேசப்படவேண்டுமோ அங்கு கடும் வெறுப்புடன் வார்த்தைகளை பாத்திரங்கள் பேசுகிறார்கள். ஜே.பி. சாணக்யாவின் பெருமைக்குரிய கடிகாரம் நெடுங்கதையாக அமைந்திருக்கிறது. ஏமாற்றுகிறவன் புத்திசாலியா, ஏமாறுகிறவன் புத்திசாலியா என்பதை பேசி, நேசிக்கிற விஷயங்களாலேயே ஒருவன் வேட்டையாடப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறது கதை.  போலியாக இருந்தாலும் அதனை கலாபூர்வமாக பிலிப்ஸ் உருவாக்குவது ஆச்சரியமாக உள்ளது. கதையை படிக்கிற வாசகனே அதில் பங்கேற்பது போன்ற தன்மை நெடுங்கதையை படிக்கும்போது உருவாகிறது. இருநூறாவது இதழ் பற்றி மு

பெண்களால் ஓரம்கட்டப்பட்ட டேஞ்சர் டயாபாலிக்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என். சிவராமன் அவர்களுக்கு,  வணக்கம். வரும் வெள்ளி ஊருக்கு சென்று மருந்துகள் வாங்க வேண்டியிருக்கிறது. தாய்மாமன்களில் நடுமாமன் தார்ச்சு கட்டிடம் கட்டிவிட்டார். இது கூட தாமதமான முயற்சிதான். புதுமனை புகுவிழா நடத்த அழைப்பு விடுத்தார்கள். ஆனால் என்னால் போகமுடியவில்லை. எங்கள் குடும்பத்தினர் செல்வார்கள்.  துரோகம் ஒரு தொடர்கதை காமிக்ஸ் படித்தேன். டேஞ்சர் டயபாலிக் கௌரவ தோற்றத்தில் வரும் காமிக்ஸ் என்று சொல்லலாம். இதில் கோரா, ஈவா என்ற இருபெண்கள்தான் கதையை நகர்த்தி செல்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் கதை சலிப்பாகிவிடுகிறது.  உறவுப்பாலம் என்று இலங்கை சிறுகதைத் தொகுப்பை படித்து வருகிறேன். எட்டு சிங்களச்சிறுகதைகளில் மூன்று நன்றாக இருக்கிறது. மறுபடியும், அக்கா,  இன்று என் மகன் வீடு வருகிறான் ஆகிய கதைகள் எனக்கு பிடித்திருந்தன. இன்று என் மகன் வீடு வருகிறான் கதை, காவல்துறையால் பிடிக்கப்பட்டு காவல்நிலையத்திற்கு சென்ற மகன் திரும்ப வருவான் என கல்லூரி வாசலில் காத்திருக்கும் தாய் பற்றிய கதை. இந்த மையம் வழியாக தாயின் மகன் என்ன செய்தான், அதற்கு அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை சிறுகதையில்

பிடித்திருக்கிறது என்பதற்கான உடனே நூலை வாங்கினால் கஷ்டம்! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். லைபாக்லை ஆன்ட்டி வடகிழக்கு சிறுகதைகள் தொகுப்பு படித்தேன். மொழிபெயர்ப்பும் தொகுப்பும் சுப்பாராவ். நூலை வாங்கி படித்துக் கொண்டிருந்தபோது, அலுவலக நண்பர் பாலபாரதியிடம்  எழுத்தாளர் பற்றிக் கேட்டேன். அவர்,  சுப்பாராவ் சரியான மொழிபெயர்ப்பாளர் கிடையாது என்று சொன்னார். கூகுள் ட்ரான்ஸ்லேட் வழியாக அவர் மொழிபெயர்த்த நூல் ஒன்றை வாங்கி படாதபாடு பட்டதாக கூறினார்.  தொழில்நுட்பத்தை தனது வேலைக்காக பயன்படுத்திக்கொள்கிறார் போல என்று நினைத்துக்கொண்டேன். புதிய புத்தகம் பேசுது இதழில் நூல்களைப் பற்றி சுப்பாராவ் எழுதுவதை சில ஆண்டுகளாக நூலகத்தில் படித்திருக்கிறேன்.  வடகிழக்கு தொடர்பான கதைகளை படிக்கவேண்டும் என நினைத்து புத்தக கண்காட்சியில் சுப்பாராவின் நூலை வாங்கினேன். மொத்தம் பதினான்கு கதைகள் இருந்தது. அதில் நான்கு கதைகள் மட்டுமே மாநிலத்திலுள்ள மக்களின் தன்மையை, பிரச்னையை, அரசியல் சிக்கல்களை பேசும்படி இருந்தது.  பிடித்திருக்கிறது என்ற காரணத்திற்காக உடனே நூலை வாங்கக் கூடாது என்பதற்கு லைபாக்லை ஆன்ட்டி சரியான உதாரணம்.  எலிஸா பே எழுதிய இந்தி

நிலப்பரப்பு ரீதியான அரசியலைப் பேசும் நூல்! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  போஸ்ட் கொரானா ஸ்காட் காலோவே பெங்குவின்  599 பெருந்தொற்று காரணமாக நாம் என்ன விஷயங்களை இழந்தோம், என்ன விஷயங்களை கற்றோம், தொழில்நுட்பம் முழுக்க நம்மை ஆட்சி செய்த காலம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை ஆசிரியர் ஸ்காட் விவரித்துள்ளார்.  தி வேர்ல்ட் ஆப் இந்தியாஸ் ஃபர்ஸ்ட் ஆர்க்கியாலஜிஸ்ட் உபிந்தர்சிங் ஆக்ஸ்போர்ட் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் என்பவர்தான் இந்தியாவின் முதல் தொல்பொருள் ஆய்வாளர். இவர் 1871ஆம் ஆண்டு இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.  இந்த நூலில் 1871 முதல் 1888 வரையிலான காலகட்டத்தில் அலெக்ஸ் எழுதிய 193 கடிதங்களைக் கொண்டுள்ளது.  இந்த கடிதங்கள் முதல்முறையாக நூலாக்கப்படுகின்றன. இவை அலெக்ஸின் வாழ்க்கையை வேறுவிதமாக பார்க்க உதவுகின்றன.  தி அன்ஃபார்கிவ்விங் சிட்டி அண்ட் அதர் ஸ்டோரிஸ் வாசுதேந்திரா பெங்குவின் 599 கர்நாடகாவைச் சேர்ந்த வாசுதேந்திரா, கர்நாடக சாகித்திய அகாதெமி பரிசு வென்றவர். நவீன வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நட்பு, துரோகம், நேர்மை, விசுவாசம், அதிர்ச்சி என பல்வேறு விஷயங்களை கதைகளின் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  ட்ரில்லியன் ரா

சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த வரலஙற்றை சொல்லும் நூல்! - புதிய புத்தகம் அறிமுகம்

படம்
                      பெ ஸ்ட் ஷார்ட் ஸ்டோரிஸ் எவர் டெர்ரி ஓ பிரையன் வெஸ்ட்லேண்ட் ரூ .199 உலகம் முழுக்க புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய 41 சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன . இதனை எழுத்தாளர் ஆசிரியர் டெர்ரி ஓ பிரையன் தொகுத்துள்ளார் . மொழிவளமும் , உணர்ச்சிகரமும் கொண்ட புதிய பாணி கதைகள் இதில் உள்ளன . எட்கர் ஆலன்போ எர்னஸ்ட் ஹெமிங்வே , சோமர்செட் மாகாம் , வர்ஜீனியா உல்ப் ஆகியோரின் கதைகள் இதில் உள்ளன . சுலை ஜான் கிரிசம் ஹாசெட் ரூ .699 17 வயது நிரம்பிய சாமுவேல் சுலைமான் தெற்கு சூடானைச் சேர்ந்தவன் . இவனுக்கு பேஸ்கட் பால் விளையாட்டில் திறமை இருக்கிறது . இவனை கவனித்த பயிற்சியாளர் அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் . அவன் அமெரிக்காவிற்கு சென்றானா , விளையாட்டில் சாதித்தானா என்பதே கதை . சிங் ஆப் லைப் பிரியா சருக்காய் வெஸ்ட்லேண்ட் ரூ .499 தாகூரின் கீதாஞ்சலி போலவே இதுவும் ஆன்மிகத்தை தேடும் முயற்சிதான் . தனக்குள் ஒருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விகளை உள்ளடக்கி நூல் உருவாகியுள்ளது . இந்த உலகத்தை மீண்டும் தாகூர் போல

பேருந்து விபத்தில் இறந்தவனின் முடிவு தற்செயலானதா? - ஆராய்ந்து நீதியை நிலைநாட்டும் கணேஷ் வஸந்த் - நிஜத்தைத் தேடி - சுஜாதா

படம்
                நிஜத்தை தேடி சுஜாதா விசா பதிப்பகம் ப .112 ரூ . 55 சுஜாதா எழுதி பல்வேறு மாத , வார இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது . அவரின் எழுத்தில் அனைத்து கதைகளுமே படிப்பதற்கு நன்றாக இருக்கின்றன . இதில் விதி என்ற கதை மட்டுமே குறுநாவல் எல்லையைத் தொடுகிறது . பிற கதைகள் அனைத்துமே சுவாரசியமான கருப்பொருளைக் கொண்டிருக்கின்றன . விதி கதை , சுஜாதாவின் ஆஸ்தான கணேஷ் வஸந்த் துப்பறிகிறார்கள் . பெங்களூரு செல்லும் பஸ்ஸில் தாமோதர் என்பவர் திடீரென புக் செய்து பயணப்படுகிறார் . ஆனால் பஸ் திடீரென விபத்தாகி பலரும் உயிரிழக்கின்றனர் . இந்த நேரத்தில் கணேஷ் தனது வேலையில் முழ்கியுள்ளான் . அப்போது அவனை சந்திக்க வரும் பெண்மணி , தாமோதர் இறங்கிய உணமையை விசாரிக்க வேண்டும் என்கிறாள் . உண்மையில் பஸ் விபத்து என்பது தற்செயலா , திட்டமிட்டு தாமோதர் கொல்லப்பட்டாரா எ்ன்பதை வஸந்த் சரச சல்லாப குணத்துடன் எப்படி கண்டுபிடிக்கிறார் . அதற்கு கணேஷ் எப்படி திருப்புமுனையாக உள்ளார் என்பதை விளக்குகிறது கதை . இதுதவிர பிற கதைகள் அனைத்து சிறு திருப்புமுனைகளுடன் எழுதப்பட்ட கதைகள்தான் ஒ