இடுகைகள்

குப்பைக் கடிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்க மக்களை பயமுறுத்தும் குப்பைக்கடிதங்கள்! - டேட்டா கார்னர்

படம்
  குப்பைக் கடிதங்கள்  மின்னஞ்சல் சேவைகள் உருவாகத் தொடங்கியதிலிருந்தே குப்பைக் கடிதங்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் வரத் தொடங்கிவிட்டது. பல்வேறு இணையத்தளங்களில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து செய்தி மடல்களும் வருகின்றன. கூடுதலாக திடீரென வங்கி, தங்கநகைக்கடன், இ வணிக தளங்களிலிருந்து மின்னஞ்சல்கள் வரும். இவை எல்லாம் வணிகம் இணையம் சார்ந்து மாறிவிட்டதையே உணர்த்துகிறது. மேற்கு நாடுகளில்  அஞ்சலகங்கள் மூலமாகவே விளம்பரக் கடிதங்கள்  நிறைய அனுப்பப்படுகின்றன. இதில் விளம்பர கடிதங்களை யார் கொண்டு வந்து கொடுக்கிறாரோ அவருக்கு காசு கிடைக்கும்.  நாளிதழில் நேரடியாக விளம்பரம் கொடுத்தால் நாளிதழ் நிறுவனத்திற்கு விளம்பரக் காசு கிடைக்கும். ஆனால் அதை விட எளிமையாக குறைந்த காசில் பேப்பர் ஏஜெண்டிற்கு காசு கொடுத்து விடலாம்.  அவர் தான் பேப்பர் போடும் வீடுகளுக்கு விளம்பரங்களை நாளிதழின் இடையில் இணைத்துவிடுவார். இப்படிக் கொண்டு செல்லும்படி செய்தால் யாருக்கு லாபம்?  பேப்பர் ஏஜெண்டிற்கு காசு கிடைக்கும். விளம்பர நோட்டீசை கொடுக்கும் நிறுவனத்திற்கு காசு மிச்சம். மேற்குநாடுகளில் கூட அதேபோல்தான் நடைபெறுகிறது.