இடுகைகள்

தகவல் பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இருக்கிறது என நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்! - ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர்

படம்
ஜெய்ராம் ரமேஷ்  ஜெய்ராம் ரமேஷ் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கமிட்டி பற்றிய மசோதாவில் நாடாளுமன்ற கமிட்டியின் செயல்பாடு என்ன? கடந்த இரு ஆண்டுகளாக கமிட்டி செயல்பாட்டில் உள்ளது? நவம்பர் 22 அன்று நாங்கள் இதுபற்றிய அறிக்கையைப் பெற்றோம். கமிட்டி தலைவர், பிபி சௌத்ரி பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயமே உள்ளது. அவர் சிறந்த ஜனநாயகவாதி. ஆட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், இதனை எதிர்த்து வந்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.  காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட அதிகாரத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இது எப்போது முடிவுக்கு வரும்? நாங்கள் ஜனநாயகப்பூர்வமான வெளிப்படையான கட்சி. எங்கள் கட்சியில் ஒருவர் வெளிப்படையாக கருத்துகளை கூற முடியும். இந்தியாவை அதன் தனித்துவமான தன்மையோடு வெளியே காட்டுகிறோம். காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு உள்ளது என நீங்களே கூறினாலும் நான் அதனை ஏற்க மாட்டேன். இதனை காங்கிரஸ் தலைவர் சோனியாவே பலமுறை கூறியுள்ளார். நான் இப்போது இதனை புதிதாக கூறவில்லை. பாஜகவை எதிர்க்கும் ஒரே தேசிய அளவிலான கட்சி காங்கிரஸ் மட்டுமே.  திரிணாமூல் காங்க

முகமறியும் சோதனை - இந்திய அரசின் புதிய முயற்சி!

படம்
முகமறியும் சோதனையை ஆதரிக்கலாமா?  இந்தியாவில் முகமறியும் சோதனை ஆந்திரத்திலுள்ள ஹைதராபாத் நகரில் அறிமுகமாகி உள்ளது. விமானநிலைய பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூலை 1 முதல் ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையத்தில் முகமறியும் சோதனை பரிசோதனை முறையில் தொடங்கியுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்துவதில் தன்னார்வமாக 250 பேர் இணைந்துள்ளனர். பெங்களூருவிலுள்ள கெம்பகௌடா விமானநிலையம், போர்ச்சுகீசிய நிறுவனமான விஷன் பாக்ஸூடன் முகமறியும் சோதனை தொழில்நுட்பத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அரசின் டிஜி யாத்ரா கொள்கைக்கேற்ப இப்புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு உருவான இச்சட்டப்படி, இவ்வசதியைப் பயன்படுத்த பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது பயோமெட்ரிக் வசதிகளைக் கொண்ட ஆதார் இருந்தால் கூட போதும்.  காவல்துறை, தேசிய குற்றப்பதிவு ஆணையம்  முகமறியும் சோதனைகளைப் பயன்படுத்த ஒப்பந்தங்களைக் கோரியுள்ளது.  அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், மக்களின் பாதுகாப்புக்காக முகமறியும் சோதனைகளை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.  வேலை செய்யும் விதம்! பயணிகள் தம் விமான ந