இடுகைகள்

பிரான்ஸ் டி வால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியலாளர்களுக்குக் கூட பாலுறவு பற்றி பேச கூச்சமும், தயக்கமும் இருக்கிறது! - பிரான்ஸ் டி வால், மானுடவியலாளர்

படம்
  ஃபிரான்ஸ் டி வால் (Frans de waal) பேராசிரியர், எமோரி பல்கலைக்கழகம், ஜார்ஜியா. பொதுவாக மனிதக்குரங்குகளைப் பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள் பாலுறவு மற்றும் சண்டை சம்பந்தமாகவே இருக்கும். அதன் வாழ்க்கையில் வேறு விஷயங்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதுபற்றிய ஆராய்ச்சியில் தான் பேராசிரியர் ஃபிரான்ஸ் டி வால் ஈடுபட்டிருக்கிறார். போனபோ, சிம்பன்சி ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும்  நிறைய வேறுபாடுகள் இருக்கிறதென கூறுகிறார். பிறர் மீதான கரிசனம், கூட்டு முயற்சி ஆகிய இயல்புகளைக் கொண்டதாக மனித குரங்கு உள்ளது என்று கூறுகிறார். பாலின அடையாளங்கள் பற்றி டிஃப்ரன்ட் வாட் ஏப்ஸ் கேன் டீச் அஸ் அபவுட் ஜென்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  கலாசாரம் சார்ந்து பாலின அடையாளங்கள் மாறுவதாக எப்படி கூறுகிறீர்கள். டோனா என்று சிம்பன்சியை உங்கள் கருத்துக்கு ஆதரவாக கூறுகிறீர்கள். இதைப்பற்றி விளக்குங்கள்.  டோனா, ஒரு பெண் சிம்பன்சி. ஆனால் ஆணைப் போன்ற உடல் அமைப்பு. பெரும்பாலான நேரங்களில் ஆண்களோடு சுற்றிக்கொண்டிருப்பாள். பாலின அடிப்படையில் பெண் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் ஆண்போலவே செயல