இடுகைகள்

கைரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பால் உற்பத்தியில் இந்தியா சாதித்த வெற்றிக்கதை! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 கூட்டுறவு நிறுவனங்களின் வெற்றிக்கதை.  குஜராத்திலுள்ள கைரா என்ற மாவட்டமே கூட்டுறவு அமைப்பு முறையில் பால் உற்பத்தியாளர் சங்கங்களை அமைக்க முக்கிய காரணம். இதனை நிர்வாகம் செய்த கேரளத்தை பூர்வீகமாக கொண்ட வர்க்கீஸ் குரியன், ஏழை மக்களை சுரண்டிய பால் நிறுவனங்களை விரட்டியடித்தார். தற்சார்பான பொருளாதாரத்தை அமுல் நிறுவனம் மூலம் சாத்தியப்படுத்தினார். இந்தியா 75 என்ற வரிசையில் அமுலின் கதை முக்கியமானது.  இந்தியா இன்று பால் உற்பத்தி துறையில் முக்கியமான நிறுவனமாக உள்ளது. அதுவும் தனியார் நிறுவனங்களை தாண்டி வெற்றித்தடங்களை பதித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது பிஸ்கெட்டுகள், பிரெட், சாக்லெட் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வருகிறது. ஆனால் இதற்கான தொடக்கம் என்பது மிக எளிமையாகவே இருந்தது.  வர்க்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல், ஹெச்எம் தலாயா தற்போதைய ஆனந்த் என்ற இடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தினசரி 250 லிட்டர் பாலை கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கம் பெற்று விற்று வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஏகபோக நிறுவனமாக இருந்தது பாய்சன் டைரி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு