இடுகைகள்

தொடுதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொட்டால் குற்றங்களைக் கண்டுபிடித்துவிடும் இளைஞனின் அபூர்வ சக்தி!

படம்
  ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக் ஹீ ஈஸ் சைக்கோமெட்ரிக் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   பள்ளியில் படிக்கும் லி ஆன், அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்துபோனவர்களை சோதிக்கிறான். அவனால் இறந்துபோனவர்களை, ஒரு பொருளை, கதவு கைபிடியைக் கூட கையால் தொட்டு காட்சிகளை அறிய முடியும். இதன்படி இறந்துபோனவர்களைப் பற்றிய எண்களைக் கூறுகிறான். அது அவர்களின் உள்ளாடை அளவாக இருக்க பிணவறையில் உள்ள மருத்துவர், டிடெக்டிவாக உள்ள அவனது அக்கா ஜி சூ என இருவரும் அவனை கிண்டல் செய்கிறார்கள். கூடுதலாக அவனது அண்ணன் காங் வேறு அவன் திறமை இன்னும் தேறவில்லை என கிண்டல் செய்கிறார். இப்படித்தான் தொடர் தொடங்குகிறது.   பள்ளிக்கு பெரும்பாலும் போகாமல் வெளியில் சுற்றுபவனுக்கு பெட்ரோல் பங்க் வைத்திருப்பவரின் மகன் டாங் மட்டுமே நெருங்கிய தோஸ்த். தேர்வுகளில் மிக குறைந்த மதிப்பெண் எடுப்பதில்தான் லீ ஆனுக்கும் டாங்கிற்கும் போட்டி. இந்த நிலையில் நாயகி யூன் பாத்ரூமில் உடை மாற்றும்போது யாரோ ஒரு மாணவன் சாவி துவாரம் வழியாக பார்க்கிறான். இதை யூன் கண்டுபிடித்து அவனை பிடிக்க வரும்போது, அவனைப்போலவே ஹூடி போட்டுக்கொண்டு நடந்து செல்லும் லீ ஆ

இந்தியர்கள் அன்பான தொடுதலை அறியாதவர்கள்! - அய்லி சேகட்டி

படம்
  அய்லி சேகட்டி காதல் உறவுக்கான பயிற்சியாளர்  நீங்கள் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்தானே? இந்தியாவுக்கு வருவதற்கு என்ன காரணம்? இங்கு நீங்கள் காதல் உறவுக்கான பயிற்சியையும் வழங்குகிறீர்கள் நான் பின்லாந்து, இத்தாலி, லண்டனில் வாழ்ந்துள்ளேன். எனது பதினெட்டு வயதிலேயே லண்டனுக்கு சென்றுவிட்டேன். பிறகுதான் இந்திய தத்துவங்கள் மீது ஆர்வம் பிறந்தது. மதரீதியான படிப்புகளை படிப்பையும், இந்தி மொழியையும் கற்றேன். பிறகுதான் 2007இல் மும்பைக்கு சென்றேன். பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர் மனநிலை பற்றிய ஆராய்ச்சி செய்தேன். கூடவே, சோமாட்டிகா எனும் படிப்பைப் படித்தேன். சைக்கோதெரபி, விபாசனா ஆகியவற்றைப் பற்றி ஆழமாக கற்றேன். இதற்குப் பிறகு எனக்கு மணமானது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மணவாழ்க்கை கெட்டுப்போனது. எனவே, நான் எங்கள் வாழ்க்கையை பிறருக்கு முன் வைக்கத் தொடங்கினேன். அப்படித்தான் காதல் உறவு பயிற்சியாளராக மாறினேன்.  2012இல் உலகம் முழுக்க டேட்டிங் ஆப்களின் மீதான மோகம் பெருகத் தொடங்கியது. நானும் பிஏ இந்தி படிப்பை கைவிட்டு பாலுறவு மற்றும் காதல் உறவு பற்றிய ஆராய்ச்சிக்கு மாறினேன்.  இந்தியர்கள் தங்கள் உறவில் எந்த

நீண்டகால வலியைப் போக்கும் மருத்துவக் கண்டுபிடிப்பு!

படம்
  கடந்த திங்களன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் படாபௌடியன் ஆகிய விஞ்ஞானிகள் வெப்பத்தை உடல் எப்படி உணர்கிறது. தொடுதலை எப்படி புரிந்துகொள்கிறது என்ற ஆராய்ச்சிக்காக பரிசு பெறுகிறார்கள்.  மிளகாய் சாப்பிடும்போது காரம் என்ற வலி உணர்வைத்தாண்டில் உடலில் வெப்பத்தை  பலரும் உணர்வார்கள். ஜூலியசும் கூட அதைத்தான் ஆய்வு செய்தார்.  உடலிலுள்ள குறிப்பிட்ட உணர்வுப்பகுதி மிளகாயின் கெபாசைசின் வேதிப்பொருளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்தார்.  ஆர்டெம், ஒருவரை தொடுவதால் உடலில் இயக்கப்பெறும் செல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்.  நமது உடல் வெளிப்புற சூழ்நிலைகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது என்பதை புதிய கண்டுபிடிப்பு விளக்குகிறது.  வெவ்வேறு சூழல்கள், வெப்பம், குளிர் ஆகியவற்றுக்கு உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்கிற வகையில் ஆய்வு முக்கியமானது.  இந்த ஆய்வு மூலம் நீண்டகாலமாக வலியில் தவித்து வருபவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை எளிதாக அறியலாம்.  டிஆர்பிவி1 என்ற உணர்வுப்பகுதி வெப்பத்தை உணர்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றன பிஐஇஇசட் 0

மூளையில் நினைவுகள் எப்படி பதிவாகின்றன?

படம்
            நீண்டகால நினைவுகள் நமது மூளையில் நீண்ட காலத்திற்கு நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக பார்க்கலாம் . கவன ஈர்ப்பு பொதுவாக ஒரு இடத்திற்கு செல்லும்போது நம்மை கவனிக்க வைக்கும் சில அம்சங்கள் இருக்கும் . பெண்களின் லோஹிப் ஜீன்ஸ் , தொட்டிச்செடி கட்டிங் , உடைகள் , ஒருவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை சொல்லலாம் . இவற்றின் ஆயுள் காலம் 0.2 நொடிகள்தான் . இவை முக்கியம் என நீங்கள் நினைத்தால் , அது மூளையிலுள்ள நியூரான்களை தூண்டுகிறது . தொடர்ச்சியாக இந்த தூண்டுதல் நடந்தால் அதுவே நீண்டகால நினைவாக சேகரிக்கப்படுகிறது . உணர்ச்சிகர ஈர்ப்பு உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உணர்ச்சிகளோடு தொடர்புடையதாக இருந்தால்அது மூளையிலுள்ள அமிக்டலாவில் பதிவாகி நீ்ண்டகால நினைவாக வாய்ப்புள்ளது . நீங்கள் சோகமாக இருக்கும்போது இசைக்கப்படும் இளையராஜாவின் ஆறுதல் பாட்டு , தந்தையைப் போன்ற ஒருவரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு , நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம் , மகிழ்ச்சியாக இருக்கும்போது பெய்யும் மழை என பலவிஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் .

பெண்கள் மீதான அத்துமீறலுக்கு உதவுகிறதா ஹோலி பண்டிகை?

படம்
            ஹோலி கொண்டாட்டம் வேண்டாம் ! - அலறும் பெண்கள் ஹோலி கொண்டாடுவது சந்தோஷமான அனுபவம்தான் . ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் நடைபெறும் வண்ணப்பொடி திருவிழா , தீராத ஏக்கங்களை தீர்த்துக்கொள்ளும் விழாவாக மாறியுள்ளது . இதில் இப்போது கலந்துகொள்ளும் பெண்கள் விலகத் தொடங்கியுள்ளனர் . ஏன் அதில் என்ன பிரச்னை என்கிறீர்களா ? விந்தணுக்களை நிரம்பிய பலூன்களை பெண்கள் மீது வீசுவது , வசதியாக கிடைத்த வாய்ப்பு சிறு பெண்களை அந்தரங்க இடங்களில் தடவுவது , தொடுவது என எல்லை மீறும் அனுபவங்கள் நடந்து வருகின்றன . பொதுவாக இதனைப பற்றி ட்விட்டரில் பதிவு செய்பவர்களை இந்து எதிரிகள் என தேச பக்தர்கள் முத்திரை குத்தினாலும் இந்த சம்பவங்களை பற்றி மூச்சு கூட விட மாட்டார்கள் . இதில் பாதிக்கப்படும் பெண்களின் தவறு என்ன இருக்கிறது ? அவர்கள் எதற்கு வெட்கப்படவேண்டும் ? டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் ஹோலி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே ஊருக்கு செல்லத் தொடங்கிவிடுவார்கள் . எதற்காக என்கிறீர்களா ? ஹோலி விழா அன்று பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி இருப்பதால்தான் .