இந்தியர்கள் அன்பான தொடுதலை அறியாதவர்கள்! - அய்லி சேகட்டி

 











அய்லி சேகட்டி

காதல் உறவுக்கான பயிற்சியாளர் 








நீங்கள் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்தானே? இந்தியாவுக்கு வருவதற்கு என்ன காரணம்? இங்கு நீங்கள் காதல் உறவுக்கான பயிற்சியையும் வழங்குகிறீர்கள்

நான் பின்லாந்து, இத்தாலி, லண்டனில் வாழ்ந்துள்ளேன். எனது பதினெட்டு வயதிலேயே லண்டனுக்கு சென்றுவிட்டேன். பிறகுதான் இந்திய தத்துவங்கள் மீது ஆர்வம் பிறந்தது. மதரீதியான படிப்புகளை படிப்பையும், இந்தி மொழியையும் கற்றேன். பிறகுதான் 2007இல் மும்பைக்கு சென்றேன். பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர் மனநிலை பற்றிய ஆராய்ச்சி செய்தேன். கூடவே, சோமாட்டிகா எனும் படிப்பைப் படித்தேன். சைக்கோதெரபி, விபாசனா ஆகியவற்றைப் பற்றி ஆழமாக கற்றேன். இதற்குப் பிறகு எனக்கு மணமானது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மணவாழ்க்கை கெட்டுப்போனது. எனவே, நான் எங்கள் வாழ்க்கையை பிறருக்கு முன் வைக்கத் தொடங்கினேன். அப்படித்தான் காதல் உறவு பயிற்சியாளராக மாறினேன். 

2012இல் உலகம் முழுக்க டேட்டிங் ஆப்களின் மீதான மோகம் பெருகத் தொடங்கியது. நானும் பிஏ இந்தி படிப்பை கைவிட்டு பாலுறவு மற்றும் காதல் உறவு பற்றிய ஆராய்ச்சிக்கு மாறினேன். 


இந்தியர்கள் தங்கள் உறவில் எந்த விஷயத்தை அவமானமாக நினைக்கிறார்கள்?

உடல்ரீதீயாக தொடுவதை இந்தியர்கள் அப்படி நினைக்கிறார்கள். குழந்தையாக இருக்கும்போதிலிருந்து பலருக்கும் அன்பாக பிறர் தொடுவது, அரவணைப்பது என்பதே கிடைக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் திருமணமாகி பாலுறவில் ஈடுபடும்போதும் தொடுதலை முக்கியமாக அவர்கள் கருதுவதில்லை. இன்றைய தம்பதிகள் இதில் பெரும் சவாலை சந்தித்து வருகிறார்கள். திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆன தம்பதியினருக்கு கூட உச்சநிலை என்பது என்னவென்று தெரியவில்லை. பலரும் தங்களது ஃபேன்டசிகளை ஆசைகளை பிறரிடம் சொல்லுகிறார்களே ஒழிய உண்மையான மகிழ்ச்சியை உணர்வதில்லை. 

எதுமாதிரியான மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்?

பலரும் திருமணமானவர்கள். இவர்களின் பெரும்பான்மையோர் பாலுறவே கொள்ளாதவர்கள். இதற்கு காரணம், தம்பதிகளில் யாரேனும் ஒருவர் பாலுறவு மீது நம்பிக்கை இழந்திருப்பார்கள். இதில் பலருக்கும் நிறைய பதில் தெரியாத கேள்விகள் இருக்கும். இதில் ஆன்மிகத்தன்மை கொண்டதாக அல்லது முரட்டுத்தனமாக பாலுறவை செய்வார்கள். என்னுடைய வாடிக்கையாளர்கள் பலரும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக விலைமாதர்கள் தவிர பிறரிடம் மகிழ்ச்சியை அனுபவிக்காதவர்கள் தான். இவர்களைப் போன்றவர்களுக்கு மசாஜ் பார்லர்கள் பெரிய ஆசுவாசமாக இருக்கின்றன. இவர்கள் வேறு பெண்களிடமும் பேச தயங்குகிறார்கள். என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர், பாலுறவில் அடிமை போல நடந்துகொள்ள விரும்பினார். ஆனால் அவரது மனைவிக்கு கணவரின் விருப்பம் புரியவில்லை. அது ஒன்றும் பிரச்னையல்ல. இதுபோல ஆசையுள்ளவர்களை அடையாளம் கண்டு ஒன்றாக கூடினால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். 

இந்தியாவில் டேட்டிங் என்பது எப்படியுள்ளது?

இணையவழி டேட்டிங் என்பது பெண்களுக்கு சிக்கலாக இருந்தது. தங்களுக்கான காதலை இந்த முறையில் தேடுவதை அவமானகரமாக உணர்ந்தனர். ஆனால் இன்று நிலை மாறியுள்ளது. இன்று இந்த விஷயத்தில் பெண்கள்தான் முன்னிலையில் உள்ளனர். இன்று பாலின அடையாளங்கள், இவர்கள் இதை செய்யவேண்டும் என்பது மாறியுள்ளது. டேட்டிங்கிற்காக உணவகம் செல்கிறீர்கள். அங்கு யார் பில் கொடுப்பது என்று கேள்வி கேட்டால் ஆண்கள் குழம்பிவிடுவார்கள். அவர்களுக்கு எப்படி அடுத்த கட்ட த்திற்கு நகர்வது, உறவில் ஆழமாக செல்வது என்பதெல்லாம் கடினமானது. கடினமான விஷயங்களை சொல்ல சிரமப்படுவார்கள். எனவே அவர்கள் இதுபோன்ற டேட்டிங்கில் ஏதும் பேசுவதில்லை. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. சில உறவுகளில் ஆண்கள்தான் முன்னே செல்லவேண்டும் என பெண்கள் நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள். 

அய்லி சேகட்டி 


ஹிட்ச் படத்தில் வரும் டேட்டிங் டாக்டரைப் போலத்தான் உங்கள் பணியா?

சமையல், வண்டி ஓட்டக்கற்பது போன்றதுதான் டேட்டிங்கும். கற்றுக்கொள்வதுதான். அதனை நீங்கள் பயிற்சி செய்யவேண்டும். இது புத்தகம் படிப்பது அல்லது யூடியூப் வீடியோ பார்ப்பது போல அல்ல. நான் கற்ற சோமாட்டிகா என்பது உடல்மொழியை அடிப்படையாக கொண்டது. நான் எனது வாடிக்கையாளர்களுக்கு எப்படி முதல் அடியை எடுத்து வைப்பது என்பதை கூறுவேன். குரல், உடல்மொழி, பார்வை என அனைத்தின் மீதான கட்டுப்பாட்டுடன் இதை செய்யவேண்டும். இதை நான் மைண்ட்ஃபுல் டேட்டிங் என்று கூறுவேன். 


ஹிமான்சி தவான்

டைம்ஸ் ஆஃ
ப் இந்தியா


https://www.youtube.com/watch?v=j1CWMpd19pQ





 

கருத்துகள்