இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் திட்டங்கள், அதன் பயன்கள்!

 








மத்திய அரசு டிஜிட்டல் முறையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதன் வழியாக செயல்படத்தொடங்கியிருக்கிறது. அரசு சேவைகள் பலவும் இன்று இணையம் வழியாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. அவை தொடர்பான புள்ளிவிவர டேட்டா ஒன்றைப் பார்ப்போம். 

மொத்தமுள்ள 130 கோடி மக்களில் ஆதார் கார்டு பெற்ற மக்களின் எண்ணிக்கை 

123 கோடி


இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 

56 கோடி 


ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 

44.6 கோடி 


புதிய தொழில்நுட்ப திறன்களைப் பெற்றுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 

2,80,000

2021ஆம் ஆண்டு பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கிய வகையில் கிடைத்த வருமானம் 5 மடங்கு அதிகம். வளர்ச்சி வேகம் 28-30 சதவீதம். 

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஐ.டி, பிபிஓ பகுதி ஊழியர்களின் பங்கு

8 சதவீதம்

2019 - 2021 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள அளவு 37 சதவீதம்

தற்போதைய நிதித்துறை மதிப்பு 31 பில்லியன். 2025ஆம் ஆண்டு நிதித்துறை வளரும் என மதிப்பிடப்பட்டுள்ள அளவு 150 பில்லியன். அடுத்த ஆண்டு உயரவிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள மதிப்பு 138 பில்லியன். 


யுபிஐ வசதியை அறிமுக்ப்படுத்தியுள்ள வங்கிகளின் எண்ணிக்கை 313. மார்ச் 2022 ஆம் ஆண்டு யுபிஐ முறையில் 5.4 பில்லியன் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. யுபிஐ வர்த்தக மதிப்பு 128 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. 

ஓபன் மாத இதழ் 

 









கருத்துகள்