பார்லே ஜியும் இந்தியாவின் உணவு பாதுகாப்பு தடுமாற்றமும்!

 













1929 ஆம் ஆண்டு பார்லே பிஸ்கெட் நிறுவனத்தை மோகன்லால் தயாள் சௌகான் தொடங்கினார். அவர் வைல் பார்லே எனுமிடத்தில் வாழ்ந்தார். அந்த இடத்தின் பெயரையே நிறுவனத்திற்கு சூட்டினார். அன்று பிரிட்டிஷ் நிறுவனங்கள்தான் பிஸ்கெட் துறையில் ஆதிக்கம் செலுத்தின. அதற்கு போட்டியாக தொடங்கிய சுதேசி நிறுவனம்தான் பார்லே. முதல் பிஸ்கெட் பிராண்ட் பார்லே ஜி. 

 இன்று பார்லே  நிறுவனம் பல்வேறு உணவு சார்ந்த பொருட்களை தயாரித்து வருகிறது. இதிலும் அவர்களது முத்திரை பதித்த ஒரு பொருள் என்றால் அது குளுக்கோஸ் பிஸ்கெட்டான பார்லே ஜி தான். விலை குறைவு. இன்றுவரையுமே கையில் காசு இல்லாத பலரும் பார்லே ஜியை வாங்கி டீயில் தொட்டு சாப்பிட்டு பசியாற்றிக் கொள்வது பார்க்க கூடிய ஒன்று. பார்லே ஜி மகத்தான ருசி கொண்ட பிஸ்கெட் கிடையாது. ஆனால் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஒரு பிஸ்கெட் அதுதான். 




இன்றைய காலத்தில் பார்லே கூட ப்ரீமியம் வகையில் தனது பிஸ்கெட் வரிசைகளை உருவாக்கிவிட்டது. ஆனாலும் பார்லே ஜி பிஸ்கெட் உற்பத்தியை நிறுத்தவில்லை. இன்றும் அதனை தொடர்ச்சியாக விற்றுவருகிறது. பெருந்தொற்று காலத்தில் பார்லே நிறுவனம், பார்லே ஜி பிஸ்கெட்டுகளை இலவசமாக கொடுத்த எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள்? 3 கோடி. 

இப்படி பார்லேவின் புகழ்பாடுவது, அவர்களின் சிறந்த பிராண்டிங் அல்லது விலை குறைவாக விற்பதற்காக அல்ல. பெருந்தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தை ஒன்று. ஒன்றரை வயது இருக்கும். பார்லே ஜி பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து சாப்பிட்டே ஐந்து நாட்கள் சமாளித்திருக்கிறது. அதாவது உயிரைக் காப்பாற்றிக்கொண்டது. இப்படித்தான் சொல்லவேண்டும். 

பிரதமர் எளிதாக லாக் டௌன் சொல்லி அடுத்தடுத்த விளக்கு ஆரத்தி, தட்டுகளை தட்டுவது, பூமழை பொழிவது என திட்டங்களை தீட்ட தொடங்கிவிட்டார். அப்போது தான் புலம்பெயர் தொழிலாளர்கள பெரு நகரங்களிலிருந்து தங்களது கிராமங்களுக்கு வாகன வசதி இல்லாததால் கால்நடையாக நடக்கத் தொடங்கியிருந்தனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் சோறு, அவித்த முட்டை, அமுல் பால், கலிஃபோர்னியா பாதாம் பருப்பு, சிம்லா ஆப்பிள் என சாப்பிட ஏதும் கிடைக்கவில்லை. உண்மையை வெளிப்படையாக சொன்னால் அப்படி வாங்கி சாப்பிட அவர்களின் பையில் காலணா கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். பையில் கிடந்த காசுக்கு கிடைத்தது பார்லே ஜி பிஸ்கெட்தான். 

12 பார்லே ஜி பிஸ்கெட்டுகளில் 260 கலோரி கிடைக்கிறது. ஒரு மனிதர் உயிருடன் வாழ் 1200 கலோரிகள் தேவை.  நாங்கள் கிடைக்கிற எதையும் சாப்பிடலாம் என்ற வேகத்தில் தான் இருந்தோம். எங்களுக்கு கிடைத்த ஒரே பொருள் பார்லே ஜி பிஸ்கெட்டுதான் என்றார் பீகாரைச் சேர்ந்த ராஜூ. 

நாங்கள் ஆயிரம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்தால் வரிசையில் வந்து நிற்பவர்களோ 10 ஆயிரம் பேர். நாங்கள் என்ன செய்வது, புலம் பெயர் தொழிலாளர்களை சரியான முறையில் எதிர்கொள்ள அரசு எந்த வசதியும் செய்யவில்லை என்றார் உணவு செயல்பாட்டாளர் ஆகாஷ் ரஞ்சன். 

2

உணவு வல்லுநர்களிடம் பார்லே ஜி பிஸ்கெட் பற்றி கேட்டபோது, அது ஆபத்தான உணவு, அதில் சர்க்கரையும் , கொழுப்பும் மட்டும்தான் உள்ளது. உயிர்பிழைக்க சாப்பிடுவது சரி. ஆனால் தொடர்ச்சியாக அதை சாப்பிட்டால் உடல் பாதிக்கப்படும் என்றார்கள். 2100 - 2400 கலோரிகளுக்கு கீழே உள்ளபடி உணவை சாப்பிடுபவர்களை இந்திய அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் என வரையறை செய்கிறது. 

இதையெல்லாவற்றையும் மௌனமாக்கச் செய்யும் நிஜம் ஒன்றுண்டு. அதுதான் வறுமை. பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட் ரூ.2க்கு கிடைத்திருக்கிறது. அதை மட்டுமே நீரில் நனைத்து சாப்பிட்டு குழந்தைகளை புலம்பெயர் தொழிலாளர்கள் காப்பாற்றினர். முன்னர் சொன்ன ஒன்றரை வயது குழந்தை பெயர் ப்ரீத்தி. ஊடகங்களில் அவரை பார்லே ஜி கேர்ள் என பெயர்சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் பார்லே ஜியை குழந்தைகள சாப்பிடுகிறார்கள் என்பது பார்லே நிறுவனத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். அவர்கள் மொத்த சரக்குகளும் நிறைய விற்றன என்பது சாதனைதான். ஆனால் இந்திய அரசு உணவு பாதுகாப்பில் இன்னும் பின்தங்கியிருப்பது பெரிய வேதனை. இதனை மத்திய, மாநில அரசுகள் இன்னும் அடையாளம் காணவில்லை. அதிலிருந்து எந்த பாடத்தையும் கற்கவில்லை. 



புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கம்யூனிட்டி கிச்சன் வசதியை உச்சநீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டது. இதனை மிகச்சில மாநிலங்கள் பெருநகரங்களில் மட்டுமே செய்து கடமையை முடித்துக்கொண்டன. ஜார்க்கண்ட் மாநிலம் தல் பாத் என்ற பெயரில் பெரு நகரங்களில் இதனை அமைத்து குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் உணவுகளை வழங்கியது. கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கம்யூனிட்டி கிச்சன் விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டன. 


ராக்கி போஸ் கட்டுரையைத் தழுவியது

அவுட்லுக் மே 2, 2022


https://www.outlookindia.com/magazine/national/food-insecurity-no-prayer-for-the-malnourished-magazine-192392

தி மிச்சிகன் டெய்லி

கருத்துகள்