புலிகள் சரணாலயத்தை சுற்றி வளைக்கும் மாவோயிஸ்டுகள்!

 








மத்தியப் பிரதேசத்தில் புலிகள் காப்பகம் ஒன்றுள்ளது. அதன்பெயர், கன்ஹா. 2,162 சதுர கி.மீ. பரப்பு கொண்ட நிலம். இங்கு புலி, காட்டெருமை கரடி, காட்டு நாய் என நிறைய விலங்குகள் உண்டு. இதைத்தாண்டி அதை இந்தியளவில் கவனப்படுத்தும் அம்சம் ஒன்று இருக்கிறது. அதுதான், மாவோயிஸ்ட்டுகள். இந்த புலிகள் காப்பகத்தில் நூற்றுக்கும் அதிகமாக புலிகள் வாழ்க்கின்றன. இங்கு தங்கள் கூடாரத்தை விரித்துள்ள மாவோயிஸ்ட்கள் அங்கு பணியாற்றும் வனக்காவலர்களை சுட்டுக்கொன்று வருகின்றனர். 

பாலகாட், மண்ட்லா என இரு மாவட்டங்களுக்குள் புலிகள் காப்பகம் வருகிறது. இங்கு வனத்துறை பணியாளர்களாக காவல் காத்தவர்கள் ஒவ்வொருவராக மாவோயிஸ்ட்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். பிறகுதான் இது காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது. அண்மையில் சுக்தியோ என்ற வனக்காவலர் போலீஸ் உளவாளி என கண்டறியப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். மார்ச் 23 அன்று பாலகாட்டிலுள்ள விடுதி ஒன்றில் சுக்தியோவின் உடல் கண்டறியப்பட்டது. 

பிறகு இதில் சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காதில் விழுந்து அரசு மரபுப்படி ஏராளமான கலந்துரையாடல்கள் சந்திப்பு நடத்தப்பட்டு புலிகள் காப்பகத்திற்கு வெளியே பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு புலிகள் காப்பகம் மூலம் ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது மாவோயிஸ்ட்கள் அங்கு இருப்பதால், இந்த வருமானம் இனி கிடைக்காத நிலை.

1,70,000 இந்திய சுற்றுலா பயணிகளும், 15,000 வெளிநாட்டு பயணிகளும் கன்ஹா புலிகள் காப்பகத்திற்கு வருகை தந்து வருகின்றனர். சுற்றுலாவை வைத்துத்தான் இப்பகுதியில் தொழில்களும் நடந்து வருகின்றன. 1930ஆம் ஆண்டு கன்ஹா சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. பிறகுதான் புலிகளுக்கான பாதுகாப்புத் திட்டம் அமலானது. 

85 விடுதிகள், 175 வழிகாட்டிகள், 257 ஓட்டுநர்கள் சுற்றுலா தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற வனவிலங்கு கணகெடுப்பில், கன்ஹாவில் 118 புலிகள், 146 சிறுத்தைகள், 957 மான்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டது. புலிகள் காப்பகத்திற்குள் மாவோயிஸ்டுகள் வந்தது புதிது என்றாலும் அருகிலுள்ள பாலாகட் மாவட்டம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் முப்பது ஆண்டுகளாக உருவாகி செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே 15 முறை துப்பாக்கிச்சூடு  நடைபெற்றுள்ளது. வனக்காவலர்களை அச்சுறுத்தி உணவுகளைப் பெற்று புலிகள் காப்பகத்தில் மாவோயிஸ்டுகள் வாழ்வதாக பாதுகாப்பு படை வட்டாரத்தினர் கூறுகிறார்கள். 


இந்தியா டுடே 

ராகுல் நோரோன்ஹா

 pinterest Jordan Steele

கருத்துகள்