தோல்விகள்தான் நிகழ்காலத்தைப் பற்றி கற்றுக்கொடுத்துள்ளன! - ஹன்சல் மேத்தா, இந்தி சினிமா இயக்குநர்

 







ஹன்சல் மேத்தா

இந்தி சினிமா இயக்குநர்


ராஜ்குமார் ராவ், மனோஜ் பாஜ்பாய் ஆகிய சிறந்த நடிகர்களை வைத்து ஆழமான பல்வேறு படங்களை எடுத்தவர் ஹன்சல் மேத்தா. அவரது வீட்டுக்குச் சென்றால் அறை முழுக்க சமையல் புத்தகங்களாக நிரம்பி வழிகின்றன. கானா கஸானா என்ற டிவி தொடரை எழுதி இயக்கியவர் ஹன்சல் தான். தற்போது ஸ்கூப் என்ற வெப் தொடரை உருவாக்கி வருகிறார்.  பிகைண்ட் பார்ஸ் இன் பைகுல்லா மை டேஸ் இன் ப்ரீஸன் என்ற நூலைத் தழுவிய கதை. ஸ்கேம் 1992 என்ற வெப் தொடரை எடுத்து புகழ்பெற்ற இயக்குநர் இவரே. 







ஃபராஸ், ஸ்கூப், மாடர்ன் லவ், ஸ்கேம் 2 என நிறைய தொடர்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படி பரபரப்பாக இயங்க முடிகிறது?

டிவியைப் பொறுத்தவரை உங்களது வேலை என்பது நீளமானது. அதனை விரும்பி செய்கிறீர்களா என்பதைப் பொறுத்தே அந்த வேலை அமையும். நான் செய்யும் வேலையை நேசிக்கிறேன்.எனக்கு அது சுமையாக தெரியவில்லை. டிவியின் வரம்புக்குள் என்னால் கதையை உருவாக்கி படமாக்கமுடியவில்லை. நான் அதில் இயங்கியது வயிற்றுப் பிழைப்பிற்காகத்தான். அதில் நான் உழைத்தாலும் நினைத்தளவு பணம் கிடைக்கவில்லை. நான் சிறந்த தொழில்நுட்ப கலைஞன் என்பதால் டிவி துறையில் வேலை கிடைக்கிறது. 

ஸ்கேம் தொடரின் வெற்றிக்குப் பிறகு உங்கள் மீது அழுத்தம் கூடியிருப்பதாக உணர்கிறீர்களா?

நான் இதை அழுத்தமாக நினைக்கவில்லை. நான் இதுபோல நிறைய வேலைகளை செய்து வந்திருக்கிறேன். நான் விரும்பாததை செய்யவில்லை. இப்போது மாறியிருப்பது நான் சொல்ல விரும்பிய கதைகள்தான். வெப் சீரிஸ் என்பது நீளமான ஃபார்மேட். இதில் பாத்திரத்திற்கு முக்கியம் கொடுத்து கதையை நகர்த்தவில்லை. கதைதான் முக்கியம். அதில் பயணம் செய்யும்போது பாத்திரங்களை பார்வையாளர்கள் அடையாளம் காண்பார்கள். 





பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நீங்கள் இயக்குநராக இந்த இடத்தை அடைந்திருக்கிறீர்கள். உங்கள் முகம் வெற்றியால் பிரகாசிப்பதை எங்களால் பார்க்க முடிகிறது?

என் முகம் பிரகாசமாக இருப்பது நான் ஷூட்டிங்கிற்காக செல்லவிருப்பதுதான் காரணம்.  எல்லாவற்றையும் விட நான் செட்டில் இருப்பதை விரும்புகிறேன். எனது போராட்டங்கள் என்னை பயமுறுத்தி இருக்கின்றன. நான் பலமுறை உடைந்துபோன பல்வேறு விஷயங்களை ஒன்றாக சேர்த்து மீண்டும் புதிதாக தொடங்கியிருக்கிறேன். நான் மோசமாக தோற்றுப்போயிருப்பதை பின்னால் திரும்பி பார்க்க நான் தயங்கியதில்லை. அதனால்தான் இரண்டாவது முறை திருமணம் செய்தேன். ஒருமுறை திருமணம் தோற்றுப்போனால், அதற்காக அந்த முறை தவறு என்று ஆகிவிடாது. எனக்கு குழந்தைகள் இருந்தாலும் அடுத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள கூடாதா என்ன? தோல்விகள் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. நிகழ்காலத்தில் எப்படி கவனத்தோடு இருக்கவேண்டுமென கற்றுக்கொண்டுள்ளேன். 

உங்களது திரைப்படமான ஷாகித்தை எந்த ஓடிடி தளமும் வெளியிடவில்லை என்று கூறியிருந்தீர்களே?

அதனை சோனி லிவ் தளம் வெளியிடவிருக்கிறது. லைசென்ஸ் தொடர்பான பிரச்னையால் அதனை உடனே வெளியிட முடியவில்லை. விரைவில் சோனி லிவ் தளத்தில் ஷாகித்தை மக்கள் பார்க்க முடியும். 




உங்களை அடுத்து வருபவர்கள் கலைப்படங்களை எடுப்பவர் என்று பார்க்க வேண்டுமா?

நாம் உருவாக்கும் அனைத்து விஷயங்களுமே கலைதான். நான் இயக்குநர் என்பதால் எனது படத்தில் கதை சொல்ல முயல்கிறேன். அதனை மக்கள் பார்க்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டு விமர்சனங்களைச் சொல்லுவார்கள், ரசிப்பார்கள். நான் இதைப்பற்றி கவலைப்படவில்லை. புகாரும் கூறவில்லை. சினிமாவில் இது என்னுடைய 25ஆவது ஆண்டு. இத்துறை நன்றாக நடந்திருக்கிறது. சில சமயங்களில் மோசமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. நான் மோசமான படங்களை எடுத்துள்ளேன். அதையும் நான் எனது பாணியில்தான் செய்துள்ளேன். மோசமான விஷயங்களையும் பாராட்டுகளையும் நான் ஒன்றுபோலவே பார்க்கிறேன். 

உங்களது மகன் ஜெய் திரைப்படம் எடுக்க முயன்றுவருவதாக கேள்விப்பட்டோம். 

அவனுக்கு வயது 18 ஆகிறது. ஷாகித் படம் எடுக்கும்போது என்னுடன் வேலை செய்தான். நாங்கள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு பணி செய்கிறோம். நான் அவனுடைய பைரேட்ஸ் என்ற நிகழ்ச்சியில் சில காட்சிகளைப் பார்த்தேன். விஷயங்களைப் பார்க்கும் கோணங்கள் எங்கள் இருவருக்கும் மாறுபடும். அவனது நிகழ்ச்சி எனக்கு பெருமை தான். ஜெய்யின் நிகழ்ச்சி பிரமாண்டமானது.  நான் சிறுவயதில் தந்தையானவன், ஜெய் பிறந்தபோது எனக்கு 22 வயது. 23 வயதில் குழந்தையைப் பெற்று என்ன செய்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஹாரர் படங்கள் பிடிக்காது. ஜெய்க்கு அதுபோன்ற படங்கள்தான் மிகப்பிடித்தவை. நான் ஹாரர் படங்களைத் தவிர்த்து பிற படங்களைத்தான் உருவாக்கியுள்ளேன். 

மேன்ஸ் வேர்ல்ட்

ஜிகார் ஷா 











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்