சமையல் எண்ணெய்யை விமான எரிபொருளாக பயன்படுத்தலாம்!
சுவாசிக்கும்போது, ஒரு நேரத்தில் நாசித்துவாரங்களில் இரண்டில் ஒன்று மட்டுமே வேலை செய்யும்!
உண்மை. மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதையும் சரியாக கவனித்துப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நீங்கள் உணர முடியும். குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு ஒருமுறை இப்படி மூச்சுத்துளைகளில் காற்று உள்ளிழுக்கப்படுவது இடது, வலது என மாறும். இந்த மாற்றம் உடலில் தன்னியல்பாக நடைபெறுகிறது.
பேக்கேஜிங்கில் பயன்படும் பபுள் ரேப், சுவர்களில் ஒட்டவே தயாரிக்கப்பட்டது!
உண்மை. இதனை உருவாக்கியவர்கள் பொறியாளர் அல் ஃபீல்டிங், மார்க் சாவென்னஸ் ஆகியோர்தான். இவர்கள் இதனை சுவர்களில் தாள் போல அலங்காரமாக ஒட்டலாம் என நினைத்தனர். 1957ஆம் ஆண்டு, தாம் தயாரித்த பபுள்ரேப், பொருட்களை உடையாமல் கொண்டு செல்ல பயன்படும் என்பதை நடைமுறைரீதியாக உணர்ந்தனர். அதனால்தான், அதனை நாம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.
நத்தைகளுக்கு கூர்மையான பற்கள் உண்டு!
ரியல்
உண்மை. நத்தை இனங்களில் சிலவற்றுக்கு ரிப்பன் போன்ற நாக்கும், சிறு பற்களும் கொண்ட தாடையும் உண்டு. இதற்கு ராடுலா (Radula) என்று பெயர். உணவுப்பொருட்களை குறிப்பிட்ட அளவில் கத்தரித்து சாப்பிட இப்பற்களின் அமைப்பு உதவுகிறது என லாஸ் ஏஞ்சல்ஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் தகவல் தெரிவிக்கிறது.
சமையல் எண்ணெய்யை விமான எரிபொருளாக பயன்படுத்தலாம்!
உண்மை. ஆனால் இந்த சோதனை முயற்சியை நிறைய நிறுவனங்கள் செய்யவில்லை. ஆஸ்திரேலியாவில் உள்ள க்வான்டாஸ் என்ற விமான நிறுவனம், இப்படி ஒரு முயற்சியை செய்தது. சூழலைக் காப்பதற்கான முயற்சியாக இந்த நிறுவனம் எரிபொருளில் பகுதியளவு சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்தியது. இம்முறையில், 60 சதவீத கார்பன் அளவு குறையும் என்று கூறியது.
ஊட்டச்சத்தில்லாத உணவுகளை சாப்பிடுவது, குறைபாடுகளில் ஒன்று.
உண்மை. இதனை பிகா குறைபாடு (Pica) என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். மனிதர்களில் சிலர் மண், கற்கள், முடி, இரும்பு பொருட்கள் என சாப்பிடத் தொடங்குவார்கள். இதற்கு உதாரணமாக போலா சங்கர் என்ற வட இந்தியரைக் கூறலாம். இவர் 116 இரும்பு ஆணிகளை தனது சுயநினைவு இன்றியே விழுங்கியிருந்தார். ஒரு ஆணியின் நீளம் 1.5 அங்குல நீளமாகும். வயிற்றுவலி என மருத்துவமனை வந்தவரை மருத்துவர்கள் சோதித்து, ஆணிகளை வயிற்றிலிருந்து வெளியே எடுத்து சங்கரின் உயிரைக் காப்பாற்றினார்.
தகவல்
https://www.yahoo.com/lifestyle/50-weird-facts-everything-181406932.html
கருத்துகள்
கருத்துரையிடுக