வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பனை மரங்களால் உட்கிரகிக்க முடியாது!

 









காடுகளால் உள்ளிழுக்கப்படும் கார்பன் அளவு!

உலக நாடுகள் அனைத்துமே கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தொழில்துறை சார்ந்த கார்பன் வெளியீட்டைக் குறைப்பதோடு, மாசடைந்த காற்றிலிருந்து பசுமை இல்ல வாயுக்களை தனியாக பிரிப்பதும் முக்கியமானது. இதற்காக மரங்கள் உதவுகின்றன. ஒளிச்சேர்கை செயல்பாடு மூலமாக தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட்டை உள்ளிழுக்கின்றன. ஒளிச்சேர்க்கை செயல்பாடு வழியாக,கார்பன் எந்தளவு உள்ளிழுக்கப்படுகிறது, அதனால் கார்பன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதா என்பது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன. 

சூழலில் கார்பன் டை ஆக்சைட் நிரம்பியிருப்பது தாவரங்களுக்கு முக்கியம். அப்போதுதான், அதன் ஒளிச்சேர்க்கை நடைபெற முடியும். மனிதர்களின் செயல்பாட்டால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகரிப்பதும், அதனை தாவரங்கள் அதிகளவு உள்ளிழுக்கின்றன. இதற்கு, கார்பன் ஃபெர்டிலைசேஷன் (Carbon Fertilization)என்று பெயர். 

வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட் அளவு அதிகரிப்பது, தாவரத்தின் வளர்ச்சி வேகத்தை பாதிக்கிறது. வளர்ச்சி காலம் அதிகரிப்பதால், வளிமண்டலத்தில் கார்பன் இருக்கும் அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக வெப்பம் அதிகரிப்பதால், தாவரத்தின்  வளர்ச்சி வேகமும் தடைபடுகிறது. மரக்கன்றுகளை நாட்டு காடுகளை உருவாக்கி அதன் மூலமாக  வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை முழுக்க பிரிப்பது கடினமானது. ஒளிச்சேர்க்கை நடைபெற சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைட், நீர், வெப்பநிலை ஆகியவை முக்கியமான காரணங்கள்.  

மரங்களில் சேமிக்கப்பட்டுள்ள கார்பன் டை ஆக்சைட், ஊட்டச்சத்துகளின் அளவை மரங்களின் வளை தகவல்களை வைத்து கணிக்க முடியும். இதற்கு, அமெரிக்காவின் உலக மர வளைய தகவல் வங்கி (ITRDB International Tree-Ring Data Bank) உதவுகிறது. இந்த அமைப்பு, ஐந்து கண்டங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் மரங்களை ஆராய்ந்து மாதிரிகளை சேகரித்துள்ளது. ஒளிச்சேர்க்கை போது தாவரங்களில் நடக்கும் செயல்பாடுகளை அறிய கிராஸ் பிரைமரி புரோடெக்ஷன் (GPP) ஆய்வு மூலம் துல்லியமாக அறியலாம். 



தகவல்

the limits of forest carbon sequestration

julia k green -trevor f keenan

https://www.ncei.noaa.gov/products/paleoclimatology/tree-ring




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்