எனது முயற்சிகள் அனைத்துமே டிரையல் அண்ட் எரர் தான்! - ஃபேஷன் டிசைனர் அஸ்ரா சையத்

 அஸ்ரா சையத்

சிறுவயதில் படிக்கும்போது நான் வக்கீலாக கனவு கண்டேன், பனிரெண்டு வயதில் டாக்டராக நினைத்தேன் என்று பேசுவார்கள். ஆனால் அப்படி எந்த விஷயமும் அஸ்ராவுக்கு இல்லை. சினிமாவுக்குள் நான் விபத்தாக வந்தேன் என மைதா மாவு அழகிகள் கொஞ்சு தமிழில் பேட்டி கொடுப்பதை படித்திருப்பீர்கள். ஃபேஷன் துறைக்குள் அஸ்ரா வந்ததும் அப்படித்தான். ஃபேஷன் டிசைன் டிகிரி படித்து முடித்து தனது தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். சொகுசு திருமண உடைகளுக்கான பிராண்ட் ஒன்றைத் தொடங்குவதுதான் அஸ்ராவின் கனவு. 

2018ஆம் ஆண்டு அஸ்ரா என்ற பிராண்டை அஸ்ரா சையத் தொடங்கினார். வடிவமைப்பும், அதில் எம்பிராய்டரி வேலைப்பாடுகளும் தான் அஸ்ராவின் தனித்துவ பலம். 

உங்களுக்கு ஊக்கம் தந்தவர் யார்?

எனக்கு பாட்டி தான் இத்துறை சார்ந்த ஊக்கம் தந்த முதல் நபர். நான் ஃபேஷன் துறையில் வேலை செய்துவிட்டு காலதாமதமாக வீட்டுக்கு போகும்போதெல்லாம் எனக்காக அவர் காத்திருப்பார். அவரது பொறுமை மற்றும் அன்பும், தாராள மனப்பான்மையும்தான் என்னை இந்தளவு ஃபேஷன் துறையில் வளர்த்திருக்கிறது. 

நீங்கள் தொழில்சார்ந்து கற்றுக்கொண்ட பாடம் என்ன?

வேகமாக ஒன்றைத் தொடங்குவதை விட அதை நெடுங்காலம் நடத்துவதே முக்கியமானது. இன்னொன்று, ஒரு செயலை செய்யும்போது நம் உள்ளுணர்வை நம்புவது, நான் இந்த விஷயத்தை நம்புகிறேன். எனக்கான தனி பிராண்டை உருவாக்குவதில் நான் மிகவும் சிறிய பெண்ணல்ல என்று கூறிக்கொண்டேன். 

புதிய தொழில்முனைவோர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

நான் எனது முயற்சிகளை டிரையல் அண்ட் எரர் என்றுதான் எடுத்துக்கொண்டு செய்கிறேன். தினசரி புதிதாக கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கவேண்டும். புதிய விஷயங்களை சோதித்துப் பார்த்து எது உங்களுக்கு சரியாக இருக்கிறது என முடிவு செய்வது முக்கியம். 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ரா எங்கு எப்படியிருக்கும்?

நியூயார்க், பாரிஸ், துபாய் ஆகிய நகரங்களில் அஸ்ரா கடை இருக்கும். உலகம் முழுக்க உள்ள மக்கள், அஸ்ரா உடைகளை வாங்க வேண்டும். அந்தளவு முக்கியமான பிராண்டாக அஸ்ரா உருவாகியிருக்க வேண்டும். 

ஃபெமினா கருத்துகள்

பிரபலமான இடுகைகள்