இடுகைகள்

பழங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Whole foods புகழ்பெற்றது எப்படி?

படம்
pixabay மிஸ்டர் ரோனி முழுமையான உணவு என்று ஒன்று உண்டா? முழுமையான உணவு என்பது அறுசுவையும் சேர்ந்து பாரதி மெஸ்சிலும், சரவணபவனிலும் சாப்பிடுகிறோமே அதுதான். இதுதான என திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் அத்தனை பொருட்களிலும் அளவு குறைத்து வைக்கும் தாராள மனசுக்காரர்கள் இவர்கள்தான். முழுமையான உணவு இயக்கம் 1940ஆம் ஆண்டு தொடங்கி புகழ்பெற்றது. இது எந்த வகையான உணவுமுறை என்றால் பதப்படுத்தாத பொருட்களை சாப்பிடுவதை வலியுறுத்துகிற முறை. இதில் ஆர்கானிக் என்ற வகை, அப்படி இல்லாத வகையும் உண்டு. ஆர்கானிக் என்றால் விலங்குகளின் கழிவுகளை, மரங்களின் இலைகளை உரமாக போட்டு பயிர்களை விளைவிப்பது. முழுமையான உணவு முறையில் செயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைய உண்டு. ஆனாலும் இது முழுமையான உணவு முறை என கூற முடியாது. இதில் பதப்படுத்தும் முறைகள் உண்டா? தக்காளியை அப்படியே சாப்பிட  அனைவராலும் முடியாது. அப்படி சமைத்தாலும் குறைந்தளவு வெப்பநிலையை பரிந்துரைக்கின்றனர். காரணம் அதிலுள்ள சத்துகள் இழக்கப்படுவதுதான்.ஆப்பிளைக் கூட தோலை உரிக்காமல் கழுவிவிட்டு அப்படியே சாப்பிடச்

புற்றுநோயை ஏற்படுத்துகிறதா பாரபீன்?

படம்
Livescience புற்றுநோயை ஏற்படுத்துகிறதா பாரபீன்? இன்று ஆர்கானிக் ட்ரெண்டிங்தானே மேட்டர். பலரும் சோப்பில், ஷாம்பூவிலுள்ள பாரபீன் என்ற பெயரைப் பார்த்து டரியலாகி ஆர்கானிக் சோப்பு கிடையாது என பதறி ஓடி கிரிஸ்டல் சோப்புகளாகப் பார்த்து அதிக காசு செலவு செய்து ஆரோக்கியம் காத்து வருகிறார்கள். உண்மையில் பாரபீனில் என்ன பிரச்னை. “பாரபீன்கள் பாரா ஹைட்ராக்ஸிபென்சோயிக்(PHBA)  என்ற வேதிப்பொருளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கையாகவே கேரட் மற்றும் ப்ளூபெர்ரிகளில் உள்ள வேதிப்பொருள் இது.” என்றார் அமெரிக்கன் வேதிப்பொருள் கௌன்சில் இயக்குநரான கேத்ரின். பழங்களிலுள்ள இந்த பாரபீன் எதற்கு உதவுகிறது? நம் உடலிலுள்ள அமினோ அமிலங்களை உடைப்பதற்குத்தான். பாரபீனில் மெத்தில் பாரபீன், எத்தில் பாரபீன், புரொபைல் பாரபீன், புட்டிபாரபீன், ஐசோபாரபீன், ஐசோபுட்டி பாரபீன் ஆகிய வகைகள் உண்டு. அழகுசாதனப்பொருட்களில் பாரபீன் எதற்குப் பயன்படுகிறது? அதனை பதப்படுத்தும் பயன்பாட்டிற்காகத்தான்.  நாம் சாப்பிடும், பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் 90 சதவீதம் பாரபீன் உண்டு. அமெரிக்காவின் எஃப்டிஏ சட்டப்படி லேபிளில